Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கவலையளிக்கும் சேப்பாக்கம் பிட்ச்: தோனியின் களவியூகத்தில் சரிந்த தினேஷ் கார்த்திக் அணி: வெற்றிநடையில் சிஎஸ்கே
[Image: thumbnaildhoni1jpg]

தீபக் சாஹரின் துல்லியமான வேகப்பந்துவீச்சு, ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, தாஹிர் ஆகியோரின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது. 109 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.


4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று சிஎஸ்கே அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளம் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த முதல் ஆட்டத்தைப் போன்று நேற்று மாறியது. இதனால், மீண்டும் சொத்தையான ஆடுகளத்தை அமைத்து ஆட்டத்தின் சுவாரயஸ்த்தை குலைத்துவிட்டார்கள் என்று கூறுவதைத் தவிர ஒன்றுமில்லை.
இதே கருத்தைத்தான் சிஎஸ்கே கேப்டன் தோனியும் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற விக்கெட்டுகளில் விளையாடுவதில் விருப்பமில்லை, மீண்டும் முதல்போட்டி போன்ற ஆடுகளத்தை அமைத்துவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அதிலும் 13-வது ஓவரில் ரஸல் அடித்த பந்தை ஹர்பஜன் கேட்ைச நழுவவிட்டதால், ரஸல் கிடைத்த வாய்ப்பில் அரைசதம் அடித்தார். ஒருவேளை ரஸலுக்கு கேட்ச்ை ஹர்பஜன் பிடித்திருந்தால், நேற்றை கொல்கத்தா ஆட்டம் 80 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.
[Image: thumbnailrusseljpg]
 
ஐபிஎல் போட்டி என்பது முற்றிலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் நோக்கில் அதிக ஸ்கோர் செய்யும் ஆடுகளமாக இருத்தல் அவசியம். ஆனால், ஒரு தரப்பு அணிக்காக மட்டும் ஆடுகளத்தை திட்டமிட்டே அமைத்துவிட்டு, வெற்றிக்குப் பின் கேப்டன் ஆடுகளத்தை சாடுவது (உஷ் கண்டுகாதீங்க) வேடிக்கை.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைக்கும் போது, பேட்ஸ்மேன்கள் ரன்களை ஸ்கோர் செய்ய முடியாது, எதிரணி விக்கெட்டுகளையும் விரைவாக இழக்க நேரிட்டு ஆட்டம் ஒருதரப்பாக அமைந்துவிடும். இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 2 போட்டிகள், அதாவது ஆர்சிபி அணிக்கு எதிராகவும், கொல்கத்தா அணிக்கு எதிராகவும் ஆடுகளத்தை மந்தமாக வைத்து போட்டியின் முடிவு ஒருதரப்பாக மாறியுள்ளது.
அதிலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும்  என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு நேற்று ஏமாற்றமே காத்திருந்தது.
கொல்கத்தா அணி குறைந்த ரன்களே ஸ்கோர் செய்தாலும், அதை சேஸிங் செய்வதற்கு சிஎஸ்கே அணிக்கும் ஏறக்குறை 18 ஓவர்கள் வரை தேவைப்பட்டது. இரு தரப்பிலும் திறமையான பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற வாதத்தை முன்வைப்பதா அல்லது ஆடுகளம் மோசம் என்ற வாதத்தை ஏற்பதா. நிச்சயமாக பேட்ஸ்மேன்களை குறைத்துமதிப்பிட முடியாது, மாறாக ஆடுகளம்தான் தொடர்ந்து மோசமாகி வருகிறது
 சேப்பாக்கம் ஆடுகளம் தொடர்ந்து இதுபோன்று போட்டி நடத்தும் அணிக்கு சாதகமாகவும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாகவும் இருந்தால், ஆட்டத்தை காண்பதிலும் சுவாரஸ்யம் இருக்காது, ரசிகர்களும் ஆட்டம் இப்படித்தானே இருக்கும் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுவார்கள். தொடர்ந்து இதே போன்று ஆடுகளம் சேப்பாக்கம் மைதானத்தில் அமையும் பட்சத்தில் அதில் பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் தலையிடுவது அவசியம்.
[Image: thumbnailduplesjpg]
 
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக தீபக் சாஹரின் துல்லியமான வேகப்பந்துவீ்ச்சு முதல் 5 ஓவர்களில் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையை  ஆட்டம் காணவைத்தது. அதன்பின் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு நெருக்கடியை அளித்து கொல்கத்தா அணியை கட்டிப்போட்டது.
சேப்பாக்கம் போன்ற பந்துவீ்ச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிஎஸ்கே பந்துவீ்ச்சாளர்கள் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்திவிட்டார்கள். ஆனால், மும்பை, கொல்கத்தா போன்ற அதிகமான ஸ்கோர் செய்யும் ஆடுகளங்களில் இவர்களின் பந்துவீச்சு நொறுக்கி அள்ளப்படுவது ஏனோ  தெரியவில்லை.
ஹர்பஜன் சிங் சேப்பாக்கம் போன்ற தரமான பிட்ச்சில் தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார் என்றால், ஏன் இந்திய அணிக்குள் அவரால் பிரகாசிக்க முடியவில்லை, இந்திய அணியில் நிலையான இடத்தைப் ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜாவால் பெற முடியவில்லை.
சேப்பாக்கம் போன்ற மந்தமான ஆடுகளத்தில் மட்டுமே இதுபோன்ற பந்துவீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியுமே தவிர நல்ல ஸ்கோர் செய்யக்கூடிய ஆடுகளத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது சிரமம். அதனால்தான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஹர்பஜன், ஜடேஜா ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
தோனியின் பளிச்சிடும் கேப்டன்ஷிப்
இந்த ஆட்டத்தில் தோனியின் கேப்டன்ஷிப் திறமையை பாராட்டியே ஆக வேண்டும். தொடக்கத்திலேயே பந்துவீச்சுக்கு கொல்கத்தா அணி திணறுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அடுத்தடுத்து ஆடுகளத்துக்கு ஏற்ற பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது சிறப்பு.
குறிப்பாக பியூஷ் சாவ்லா களமிறங்கியது, ஹர்பஜன் சிங்குடன் பேசிவைத்து பந்தை வைடாக வீசச் செய்து ஸ்டெம்பிங் செய்ததது தோனிக்கே உரிய கேப்டன்ஷிப் அழகு. இதுபோன்ற சின்ன, சின்ன விஷயங்களில் தோனியின் கேப்டன்ஷிப் திறமை பளிச்சிடுகிறது.
விக்கெட் சரிவு
109 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. பியூஸ் சாவ்லா வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார் வாட்ஸன். ஆனால், நரேன் வீசிய 3-வது ஓவரில் சாவ்லாவிடம் ஸ்குயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வாட்ஸன் வெளியேறினார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் அதிரடியாகத் தொடங்கினாலும், நிலைக்கவில்லை. நரேன் வீசிய 5-வது ஓவரில் பியூஷ் சாவ்லாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு 14 ரன்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ராயுடு, டூப்பிளசிஸ் இணைந்தனர். பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களைச் சேர்த்தது.
சாவ்லா, ராயுடு இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ஆடுகளத்தின் தன்மையால் பவுண்டரி அடிப்பதும், சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், சிஎஸ்கே அணி ஸ்கோர் செய்யும் வேகம் மந்தமானது.
சாவ்லா வீசிய 15-வது ஓவரில் ராயுடு அடித்த பந்தை சாவ்லா கேட்ச் பிடிக்க தவறவிட்டார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாத ராயுடு, அதே ஓவரின் 4-வது பந்தில் ராணாவிடம் கேட்ச் கொடுத்த 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 46 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த ஜாதவ், முதல்பந்திலேயே பவுண்டரி அடித்தார். குர்னே வீசிய 16-வது ஓவரில் டூப்பிளசிஸ் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். நரேன் வீசிய 17-வது ஓவரின் 3-வது பந்து வைடாக சென்று தினேஷ் கார்த்திக்கிடம் தப்பித்து பவுண்டரியை அடைந்து 5  ரன்களைப் பெற்றது. எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சிஎஸ்கே வென்றது.
17.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் நரேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..
முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது.
சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், முதல் 5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது. சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் லின் எல்பிடபில்யு முறையி்ல் ஆட்டமிழந்தார்.
ஹர்பஜன் சிங் வீசிய2-வது ஓவரில் நரேன் 6 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து சாஹர் வீசிய 3-வது ஓவரில் ராணாவும் , 5-வது ஓவரில் உத்தப்பாவும் வி்க்கெட்டை பறிகொடுத்தனர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக், கில் சேர்ந்தனர். இம்ரான் தாஹிர் வீசிய 9-வது ஓவரில் நிலைக்காத தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரஸல் களமிறங்கினார். தாஹிர் வீசிய 11-வது ஓவரில் கில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் தோனியிட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தபோதிலும், ரஸல் சளைக்காமல் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். ஹர்பஜன் வீசிய 16-வது ஓவரில் பியூஷ் சாவ்லா தோனியால் ஸ்டெம்பிங் ெசய்யப்பட, அடுத்து வந்த குல்தீப் யாதவ் ரன் அவுட் முறையில் வெளியேறினார். ஒரு ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்தது கேகேஆர்.
மோசமான ஆடுகளத்தால், நேற்றைய ஆட்டத்தில்  பல ஷாட்களை ரஸால்  அடிக்க முடியவில்லை. இருப்பினும் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 44 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரஸல். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரஸல் 50 ரன்களிலும், குர்னே ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தாஹிர், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 10-04-2019, 09:50 AM



Users browsing this thread: 18 Guest(s)