Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஐடி துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்... பெங்களூரைத் தொடர்ந்து சென்னை 2வது இடம்! 

ஐடி துறையில் நடப்பாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் மட்டும் புதிதாக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டி துறையில் நடப்பாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் மட்டும் புதிதாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
[Image: it-employees_16490.jpg]
[color][font]

2018 மார்ச் மாதத்திலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில், புதிய பணியாளர் சேர்க்கை 38% அதிகரித்துள்ளது. ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய இத்துறையில் நடந்த புதிய பணியாளர் சேர்க்கையில், 18 சதவிகிதத்துடன் பெங்களூரு முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 13 சதவிகிதத்துடன் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளதாக வேலைவாய்ப்பு இணையதளமான நவ்கிரி டாட் காம் தெரிவித்துள்ளது. 


2018 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 மார்ச் மாதத்தில் ஐடி சாஃப்ட்வேர், ஐடி ஹார்டுவேர், பிபிஓ/ஐடிஇஎஸ் (தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள்) மற்றும் எஃப்எம்சிஜி (நுகர்வோர் பொருள்கள்) துறை ஆகிய துறைகளில் புதிய பணியாளர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தவிர்த்து, மார்ச் வரையிலான கடந்த ஓராண்டில், ஐடி துறையில் 32% முதல் 38% வரை வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது. 
அதேபோன்று கட்டுமானம் மற்றும் பொறியியல் துறைகளில் 13%, பிபிஓ/ஐடிஇஎஸ் துறைகளில் 9%, எஃப்எம்சிஜி துறையில் 5%, கல்வித் துறையில் 7%, இன்ஷூரன்ஸ் துறையில் 6% மற்றும் ஐடி ஹார்டுவேர் துறையில் 3% என வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 
``இது ஆண்டு தொடக்கம் என்பதால் ஐடி மென்பொருள் துறையில் புதிய பணியாளர்கள் சேர்க்கை, தீவிரமாக நடைபெறுகிறது. எங்களது சமீபத்திய சர்வேயின்படி 89% பணியாளர்கள் சேர்க்கை ஐடி துறையில்தான் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது.  புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் வேலையை விட்டுச் செல்வோருக்குப் பதிலான நியமனங்கள் போன்றவை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என ஐடி துறையினர் கூறுகின்றனர்" என்கிறார் நவ்கிரி டாட் காம் செய்தித் தொடர்பாளர். 
[/font][/color]
[Image: tidel_park_16355.jpg]
[color][font]
எஃப்எம்சிஜி துறையைப் பொறுத்தமட்டில், 38 சதவிகித பங்களிப்புடன் ஹைதராபாத் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு 29 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
அதே சமயம், புதிய பணியாளர்கள் சேர்க்கை அனைத்துத் துறைகளிலும் நடைபெறவில்லை. வாகன தயாரிப்புத் துறை மற்றும் அதன் சார்பு துறைகளிலும், வங்கி மற்றும் நிதிச் சேவை துறைகளிலும் பணியாளர்கள் சேர்க்கை முறையே 8% மற்றும் 15% குறைந்துள்ளதாக  நவ்கிரி டாட் காம் மேலும் தெரிவிக்கிறது[/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 10-04-2019, 09:45 AM



Users browsing this thread: 109 Guest(s)