நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#78
அவள் யுகேந்திரனின் வகுப்பில் படித்தாலும் அவனை விட இரண்டு வயது சிறியவள்.

யுகேந்திரன் சிறு வயதில் மிகவும் நோஞ்சலாக இருந்ததால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவனைப் பள்ளியில் தாமதமாக தான் சேர்த்திருந்தனர்.
தம்பியையே குழந்தையாகதான் பார்க்கிறான். அவனை விட சிறியவள்.

அன்று முதன் முதலாய் பார்க்கும்போது கல்லூரியில் விழா என்பதற்காக புடவை கட்டியிருந்தாள். பார்க்க பெரிய பெண் போல் இருந்தாள்.

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு அவளது நடத்தை எல்லாம் யுகேந்திரனைவிட சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தது.

இப்போது ஊருக்கு வந்திருந்தபோது ஒருமுறை அவள் தன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்ததைப் பார்த்தான்.

சிறுபிள்ளை போல் அவளுக்கும் யுகேந்திரனுக்கும் வனிதாமணியின் மடியில் படுப்பது யார் என்பதில் சிறு சண்டையே வந்தது.

“இவனுக்கு ஒரு தங்கையோ தம்பியே பிறந்திருந்தா இத்தனை சிறுபிள்ளைத்தனத்துடன் இவன் இருந்திருக்க மாட்டான் அத்தை. பாருங்க. சின்னப்பிள்ளை மாதிரி என்கிட்ட சண்டைக்கு வர்றான்.”

என்று அவள் வனிதாமணியிடம் குறைபட்டாள்.

அவர் பெருமூச்சுவிட்டார்.

அவருக்கு யுகேந்திரன் ஆண் பிள்ளையாக பிறந்துவிட்ட பிறகு அடுத்து ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது.

ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு சொன்னால் வனிதாமணி கேட்கமாட்டார் என்று தானே மருத்துவமனைக்குச் சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டு வந்துவிட்டார் ரவிச்சந்திரன்.

அதில் அவர் தன் மேல் வைத்திருந்த அளவு கடந்த அன்பு தெரிந்தாலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க விடாமல் செய்துவிட்டாரே என்ற கோபமும் இருந்தது.

“நமக்கு பெண் குழந்தை பிறந்தால்தானா? நமக்கு வரும் மருமகள்களை நம்ம மகள்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு இல்லையா?”
ஒரே கேள்வியில் ரவிச்சந்திரன் தன் மனைவியை வீழ்த்திவிட்டார்.

அதன் பிறகு அவர் நேரிடையாக தன் கணவரிடம் அதைப் பற்றி பேசுவதேயில்லை.

வண்டி திடீரென்று நின்ற வேகத்தில் அவனது கவனம் கலைந்தது.

“என்னாச்சு யுகா?”

“ஒன்னுமில்லைண்ணா. கிருஷ் தூங்கிட்டாளா?”

“ஆமாம். நீ பார்த்து வண்டியை ஓட்டு.”

“சரிண்ணா.”

வண்டி குலுங்கியதில் விழ இருந்தவளைத் தாங்கி தன் மடியிலே ஒழுங்காகப் படுக்க வைத்தான்.

அப்போது சரிய இருந்தவளை மீண்டும் இழுத்து தன் மடியின் மீது அவள் தலையை வைத்த போது அவளது கன்னத்தில் கை பட்டுவிட்டது.

மிக மிருதுவாக பஞ்சு போன்ற அவளது கன்னத்தைக் கண்டு அவனுக்கு விபரீதமான ஆசை வந்தது. மிகவும் சிரமப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டான்.

தம்பி தன் மீது வைத்த நம்பிக்கையை கெடுக்கும விதமாக தான் நடந்துகொள்ள கூடாது என்று தன்னையே கடிந்துகொண்டான்.

ஒரு வழியாய் அவனது சோதனைக்கு முடிவு வந்தது. அவர்கள் வீடு வந்துவிட்டது. இன்னும் பொழுது புலரவில்லை.

மகேந்திரன் மற்றவர்கள் பார்க்கும் முன்னே கிருஷ்ணவேணியை தன் மடியில் இருந்து எழுப்பி உட்கார வைத்தான். என்னவோ பெரிய குற்றம் செய்தது போல் மனம் குறுகுறுத்தது.

யுகேந்திரன் காரை நிறுத்திவிட்டு தன் பெற்றோரை எழுப்பினான். பின்னர் கிருஷ்ணவேணியையும் எழுப்ப அவர்கள் இறங்கினர்.

வனிதாமணி முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சாருலதாவையும் எழுப்பிவிட்டார்.

அனைவரும் வீட்டிற்குள் நுழைந்து அவரவர் அறைக்குள் நுழைந்து விட்ட உறக்கத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் மகேந்திரனால் முடியவில்லை.

மடியில் கிருஷ்ணவேணி படுத்திருந்த போது எழுந்த உணர்வே இப்போதும் தோன்ற அவனால் உறங்க முடியவில்லை. தான் செய்வது தவறு என்று புரிந்தது. ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அன்றைய பொழுது மகேந்திரனுக்கு உறங்காமலே விடிந்தது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 09-04-2019, 12:35 PM



Users browsing this thread: 21 Guest(s)