நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#76
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 12 - ராசு
[Image: nivv.jpg]

கிருஷ்ணவேணி தான் அவர்கள் வீட்டிற்கு மருமகளாய் வரப்போகிறாளா? என்று பூசாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மற்றவர்கள் தயங்கிக்கொண்டிருக்க சாருலதா கொதித்துப்போனாள்.

அதற்குள் யாரோ ஒருவர் பூஜை செய்ய வந்துவிட பூசாரியும் சென்றுவிட்டார்.

அவ்வளவுதான். அவர் கேட்ட கேள்வியை மற்றவர்கள் மறந்துவிட்டு வேறு பேச ஆரம்பித்துவிட்டனர்.

“ஏன் அத்தை அமைதியா இருக்கீங்க? அவர் கேட்ட கேள்விக்கு இல்லைன்னு பதில் சொல்ல வேண்டியதுதானே?”

“யாருக்கும்மா?”

வனிதாமணி எதுவும் தெரியாததுபோல் கேட்டார்.

அவள் பல்லைக் கடித்தாள். திரும்பி மகேந்திரனைப் பார்த்தாள். அவனிடம் எந்த சலனமும் இல்லை.

அவன் என்றுதான் இயல்பாக நடந்துகொண்டிருக்கிறான்?

சரியான சாமியார்.

இல்லை என்றால் அழகான தான் அவன் அருகேயே இருந்தும் தன்னைக் கண்டு கொள்ளாமல் இருப்பானா?

மீண்டும் அவள் வனிதாமணியிடம் கேட்டுவிட்டாள்.

“அவர் யாரை கேட்டார்னு எப்படிம்மா எனக்குத் தெரியும்? நீ என் மகனுக்கு முறைப்பொண்ணுன்னு அவருக்குத் தெரியும். நீயும் இத்தனை வருடம் இங்கே வரும்போது வந்தேதானே? இப்பதானே அவனுக்கு கல்யாண வயசு வந்திருக்கு. அதனால்தான் கேட்டாரோ என்னவோ?”

ஏதோ வாயில் வந்ததை சொல்லி அவளை மேலே பேச விடாமல் வந்த யாரிடமோ பேசுவதற்காக எழுந்துசென்றார்.
அவர் சொன்ன பதில் அவளுக்கு கோபத்தைக் குறைப்பதற்குப் பதில் அதிகப்படுத்தியது.
இத்தனை வருடமும் அவள் அவர்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து வருகையில் இதுமாதிரி யாரும் கேட்கவில்லையே.

யுகேந்திரன் பூஜை செய்த தேங்காயை உடைத்து ஒரு சில்லை கிருஷ்ணவேணியிடம் நீட்டினான்.

மற்றவர்கள் வேண்டாமென்று மறுக்க தான் ஒரு சில்லை எடுத்துக்கொண்டான். இருவரும் சிறுபிள்ளை போல் கரண்டித் தின்ன ஆரம்பித்தனர்.

வனிதாமணி வந்துவிட தங்கள் காரில் ஏறி வீடு திரும்பினர்.

மறுநாளே அவர்களுக்கு கல்லூரி ஆரம்பிக்க இருப்பதால் அன்றே ஊருக்குத் திரும்ப முடிவு செய்து அதற்கான ஆயத்தத்தில் வனிதாமணி ஈடுபட்டார்.

“நம்ம அரசாங்கம் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.”

“அப்படி என்ன யுகா யோசிக்காம செய்திட்டாங்க?”

“கொஞ்சம் கூட யோசிக்காம தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை கொடுக்காமல் வேலைநாள் ஆக்கிட்டாங்களே?”

“ஏன்? அன்னிக்கு மட்டும் விடுமுறை கொடுக்கனும்னு சொல்றே?”

“தீபாவளிக்கு எத்தனை விதமான பலகாரம் செய்யறோம். அதையெல்லாம் சாப்பிடக்கூட நேரம் கொடுக்காம அப்படி என்ன படித்துக் கிழித்துவிடப்போறோம்.”

அவன் அலுத்துக்கொண்டே சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“போடா. சரியான தின்னி...”

அவளை சொல்ல விடாமல் கண்களால் கெஞ்சினான்.

மற்றவர்கள் தயாராகி வரவும் பொன்னியிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.

வழக்கம் போல் சாருலதா முந்திக்கொண்டு முன்னிருக்கையைப் பிடித்துவிட, பெரியவர்களுக்கு நடுவில் உள்ள இருக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு சிறியவர்கள் இருவரும் பின்னிருக்கைக்கு நகர்ந்தனர்.

இரவு உணவை முடித்துக்கொண்டே கிளம்பியதால் வேறு எங்கும் வண்டியை நிறுத்த தேவையில்லை.

காரில் ஏறி கொஞ்ச தூரம் ஓட ஆரம்பித்ததுமே சாருலதாவும், பெரியவர்கள் இருவரும் உறங்க ஆரம்பித்துவிட்டனர்.

சிறியவர்கள் இருவரும் எதையோ கலகலத்தவாறே வந்தனர்.

இரவு நேரம் என்பதால் மகேந்திரன் காரை நிதானமாகவே ஓட்டினான்.

ஒரு சமயத்தில் சிறியவர்கள் இருவரும் கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டனர்.

“ச். யுகா. கொஞ்சம் மெதுவா.”

மகேந்திரன் சகோதரனை கடிந்துகொண்டான்.

“அண்ணா. உனக்குப் பொறாமை.”



“அப்படி என்னடா உன்னைப் பார்த்து பொறாமை.”
“ஆமா. ஒரு அழகான பொண்ணும் பையனும் பேசிக்கிட்டு வர்றாங்களேன்னுதான். உன் கூட யாரும் பேசலையேன்னு பொறாமை. நான் வேணும்னா சாருக்காவை எழுப்பி விடவா? உன் கூட அவ பேசிக்கிட்டே வருவா.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 09-04-2019, 12:31 PM



Users browsing this thread: 23 Guest(s)