09-04-2019, 12:08 PM
உயிர் கொல்லி ஆலைகளுக்கு எதிரான பெரும் கோபம் - “உறியடி 2” விமர்சனம் - "Uriyadi 2" Movie Review
![[Image: 6mucu608_uriyadi-2_625x300_05_April_19.jpg]](https://c.ndtvimg.com/2019-04/6mucu608_uriyadi-2_625x300_05_April_19.jpg)
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசாயன தொழிற்சாலைகள் இயக்கி வருகிறது. அவை அனைத்தும் முறையான அனுமதி பெற்று, மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சோதனைக்குட்பட்டுதான் இயங்குகிறதா…? சரியான பாதுகாப்புடன்தான் இயக்குகிறதா…? என்கிற கேள்வியை அந்த இரசாயன ஆலையில் ஏற்படும் ஒரு பெரும் விபத்திற்கு பிறகுதான் இந்த சமூகம் கேள்வி கேட்கிறது. இன்றைய சூழலில் எந்த நேரம் வேண்டுமானாலும் வெடித்துச்சிதறக்கூடிய எரிமலைப் போலவே இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு இரசாயன ஆலையும் அதற்கு அனுமதி வழங்கும் ஆட்சியாளர்கள், அதைத் தொடர்ந்து நடக்கும் அரசியல் பற்றிய படம் தான் ‘உறியடி 2’.
ஜனநாயக நாட்டில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைக்கு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் நீதியும் தீர்வும் கிடைத்ததில்லை என்பது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடம். பெரும் பாதிப்புகளுக்கு பின் ஏற்படும் பெரும் கோபம் புரட்சியாக வெடிக்கிறது. ஆதிக்க வர்க்கத்தால் போராளிகள் கொல்லப்படுகிறார்கள், அல்லது காணாமல் ஆக்கப்படுகிறார்கள் என்பது இந்தியச்சமூகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் பேரவலம்.
மேலை நாடுகளில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் புறக்கணிக்கப்படும் இரசாயன ஆலையை இந்தியா அனுமதிக்கிறது. தமிழகத்தில் ஒரு மலைவாழ் கிராமத்திற்கு பக்கத்தில் இந்த ஆலை அமைக்கப்டுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் ஒரு சிறிய ரசாயனக்கசிவு காற்றில் கலந்தால் கூட சுவாசிக்க முடியாமல் இறந்து போகக்கூடிய அளவிற்கு நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் வெறும் லாப நோக்கத்திற்காக மட்டும் மனித உயிர்களை பற்றி கவலை கொள்ளாத ஆலையின் நிறுவனர் லஞ்சம் கொடுத்தும், அரசியல் வாதிகளின் ஆதரவாலும் இந்த ஆலையை நடத்துகிறார். ஆலையில் ஏற்படும் ஒரு சிறிய விபத்தில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து அருகில் உள்ள கிராம மக்கள் பலர் ஒரே நாளில் கொத்துக்கொத்தாய் இறக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பிரச்னையாகி ஆலை நிறுவனர் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நீதி கோட்டு போராடும் இளையஞனாக இந்த படத்தின் இயக்குநரும், படத்தின் கதாநாயகனுமாக விஜயகுமார் நடித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததா ஆலையின் நிறுவனரும், அரசியல் வாதிகளும் தண்டிக்கப்பட்டார்களா..? இந்த பிரச்னையை சுற்றி நடக்கும் அரசியல் என்ன என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.
விஜயகுமார் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியானஉறியடி 2 திரைப்படம் சமூகத்தில் புறையோடிக் கிடக்கின்ற சாதி அவலத்தையும், சாதி அரசியலின் கோரா முகத்தையும் வெளிபடுத்தியது. அந்த அனையா தீ கனல் பெரும் நெருப்பாய் இந்த படத்தில் வெளிபட்டிருக்கிறது.
இராசயன பொறியியல் பட்டதாரியான லெனின் விஜய் (விஜயகுமார்) படித்து முடித்துவிட்டு சென்னையில் வேளைக்கு செல்ல விருப்பப்படுகிறார். குடும்பமோ சொந்த ஊரிலே வேலை செய்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். இவருடைய அம்மாவும் அப்பாவும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களை அடுத்து லெனின் விஜய்க்கு முக்கியமானவர்கள் இவருடைய இரண்டு நண்பர்கள். சொந்த ஊரிலே இரசாயன தொழிற்சாயில் நண்பர்கள் மூன்று பேர் சேர்கிறார்கள். அங்கு ஏற்படும் சிறிய விபத்தில் நண்பன் ஒருவன் இறந்து போகிறான். அதன் பிறகுதான் இந்த தொழிற்சாலை மிகவும் ஆபத்தானது என்று லெனின் விஜய்க்கு தெரியவருகிறது. அதை எதிர்த்து போராடுகிறார். துடிப்பான இளைஞனாகவும் யதார்ததமாகவும் விஜயகுமாரின் நடிப்பு பாராட்டுக்குறியது.
சமூக அக்கரையும், பாதிப்பிலிருந்து கொதித்தெழும் போராளியாகவும் விஜயகுமார் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விஜயகுமாரின் காதலியாக வரும் இசைவாணி( விஸ்மயா) ஆலையில் பணிபுரியும் மருத்துவராக எதார்த்தமாக நடித்து பாராட்டை பெறுகிறார். இவரது குடும்பம் சாதி ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தாலும் சாதி மறுக்கும் இளம் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார் விஸ்மயா. இயல்பான நடிப்பு, எதார்தமான பேச்சு என படத்தில் வரும் சில நேரங்களில் அனைவரின் மனதிலும் இடம் பெறுகிறார்.
விஜயகுமாரின் நண்பர்களாக வரும் சுதாகர், சங்கர் தாஸ் இருவரும் படத்தின் இன்னொரு பலமாக அமைகிறார்கள். சுதாகர் இருப்பதால் இந்த படத்தில் காமெடி நிறைய இருக்கும், அரசியல் நய்யாண்டி இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். இந்த படத்தில் சுதாகருக்கு மிக முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது இசைஅமைப்பாளர்தான். கோவிந்த வசந்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பெரும் பலத்தை கொடுக்கிறது. இடைவெளிக்கும் முன்னும் பின்னும் படத்தோடு நம்மை பயணிக்க வைக்கிறது கோவிந்த் வசந்தின் இசை.
உணர்வுகளை தொட்டுப்பார்க்கும் புரட்சிகர வசனங்கள், புறையோடிக்கிடக்கும் சாதியின் வன்மம் என படத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்த சமூகத்தை கண்ணாடியக பிரதிபலித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டாம், கதிராமங்களம் போராட்டாம் என சமீக கால போராட்டங்களும் அதன் ஒடுக்கு முறையும் நினைவு படுத்துகிறது திரைப்படம். இந்த படம் இன்னும் இந்த சமூகத்தில் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் எரிமலைப் போல் ஆலைகள் இயங்கி வருகிறது, அதைச்சுற்றிதான் நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அதன் ஆபத்தையும் பேசியிருக்கிறது. ஜனநாயக நாட்டில் அகிம்சை போராட்டங்கள் மட்டுமே எழுதப்பட்ட விதியாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த கால சினிமாக்களில் கதாநாயகன் வில்லனை கொல்லும் அதே தோணி இந்த படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது எதனால் நடத்தப்படுகிறது என்பதற்கான நேர்மை இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு புரியும் அதே கோபம் பார்கையாளர்களுக்கும் வரும் என்பதுதான் எதார்த்தம்

- பிரிவுவகை:
அரசியல் திரைப்படம்
- நடிகர்கள்:
விஜயகுமார், விஸ்மயா, சுதாகர்
- இயக்குனர்:
விஜயகுமார்
- தயாரிப்பாளர்:
சூர்யா
- பாடல்கள்:
கோவிந் வசந்த்