Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அலட்சிய அம்பயர்கள்... நேரக் கட்டுப்பாடு... கிரிக்கெட்டுக்கும் வேண்டும் கால்பந்து ரூல்ஸ்!

[Image: 154161_thumb.jpg]
மும்பை - சென்னை ஐபிஎல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும், `மீண்டும் ஒருமுறை செகண்ட் இன்னிங்ஸ், இரவு 10 மணிக்கு மேல் தொடங்கியிருக்கிறது' என ட்வீட் செய்திருந்தார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. ஆம், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் போட்டி முடிய நள்ளிரவு 12 மணி ஆகிறது. வருமானத்துக்காக `பிராட்காஸ்டிங்’ நிறுவனங்கள் பேச்சைக் கேட்டு, இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய போட்டியை 8 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். அதை 12 மணிக்கு முடிக்கிறார்கள். ஒளிபரப்பு உரிமத்தில் சேனல்கள் எப்படியெல்லாம் கோலோச்சுகின்றன, அவர்களுக்காக பிசிசிஐ எப்படியெல்லாம் வளைந்துகொடுக்கிறது, 15 ஓவரில் சேஸ் செய்ய வேண்டிய ஸ்கோரை 20-வது ஓவரின் கடைசிப் பந்து வரை ஏன் இழுத்தடிக்கிறார்கள் என்பது தனிக்கதை. அதைப் பற்றி இன்னொருமுறை விவாதிப்போம்.
[Image: run_out_15367.png]
வேகம்தான் டி-20 போட்டியின் பியூட்டி. இரண்டு இன்னிங்ஸ், இடைவேளை உள்பட 3.20 மணி நேரத்தில் போட்டியே முடிந்துவிடும் என்பதால்தான், ஐபிஎல் உட்பட,  டி-20 தொடர்களுக்கு அவ்வளவு வரவேற்பு. ஆனால், இன்று போட்டியை நான்கு மணி நேரம் வரை ஜவ்வாக இழுத்து, கொட்டாவி விடவைக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளில், டி-20 லீக் நடக்கிறது என்றாலும், ஐபிஎல் போட்டிகள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. இந்த சீசனில், இதுவரையிலான எல்லா போட்டிகளும் 4 மணி நேரத்துக்கும் குறையாமல் நடந்தது. ஆனால் மும்பை, ராஜஸ்தான் அணிகளின் கேப்டன்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை எனத் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 
Quote:[Image: ZEcxdSYu_normal.jpeg]
[/url]Ric Finlay@RicFinlay





Average time taken to bowl a T20 innings in 2017 and 2017-18:
IPL 106 mins
CPL 105 mins
T20I 98 mins
PSL 97 mins
NZ 93 mins
BBL 90 mins
RSA 88 mins
Ireland 87 mins
NatWest Blast 85 mins

291
5:43 AM - Apr 17, 2018
Twitter Ads info and privacy


170 people are talking about this

[url=https://twitter.com/RicFinlay/status/986034923935969280]


`ஆட்டம் தொடங்குவதற்குள், டீம் மீட்டிங் என்ற பெயரில் ஒரு மணி நேரம் விவாதிக்கிறோம். அப்போதே எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டு விடுகின்றன. அதன்பிறகும், எந்நேரமும் களத்தில் கூடிக்கூடி விவாதிக்கவேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற காரணங்களால்தான் இன்னிங்ஸ் முடிய ரொம்ப நேரமாகிறது. தவிர, ஒரு சில அணிகள் சுமாரான ஃபீல்டர்களுக்குப் பதிலாக, சிறந்த ஃபீல்டர்களை சப்ஸ்டிட்யூட்டாக இறக்குகிறார்கள். இதைப் பற்றி அம்பயர்களிடம் முறையிடுவோம்’ என்றார், டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைஃப். அவர் சொல்வது ஏற்கத் தக்கது. ஆட்டத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவேண்டிய பொறுப்பு அம்பயர்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்னிங்ஸ் நேரத்துக்கு முடியாமல்போவதற்கு அம்பயர்களும் ஒரு வகையில் காரணம்.
[Image: DMIPL_4114_14477.jpg]
உதாரணத்துக்கு, பெங்களூரு – மும்பை போட்டியில் பார்த்திவ் படேல் மிட் விக்கெட்டில் அடித்த பந்தை அங்கிருந்த ரோஹித் ஷர்மா பிடித்து, `Direct hit’ அடித்துவிட்டார். மொயின் அலி ரன் அவுட் என்பது முதன்முறை பார்த்தபோதே எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.             2 மீட்டருக்கு அப்பால் மொயின் அலி பேட்டை தரையில் வைப்பதற்குள்ளேயே பந்து ஸ்டம்பை பதம் பார்த்து, லைட் எரிந்துவிட்டது. ஆனால், தேர்ட் அம்பயரிடம் கேட்ட பிறகே அவுட் தரப்பட்டது.  வேடிக்கை என்னவெனில், அவுட் எனத் தெரிந்து மொயின் அலி `Dugout’ சென்று கிளவுஸைச் கழற்றி உட்கார்ந்துவிட்டார். அதற்குப் பிறகுதான் ஸ்கிரினில் `அவுட்’ என ஃபிளாஷ் அடிக்கிறது.. இப்படி, பலமுறை அநியாயத்துக்கு டபுள் செக் செய்கிறார்கள். இதுவும் போட்டி அதிக நேரம் நீளக் காரணம். 


[Image: tweet_14033.JPG]
ஆனால், உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயத்தில் அம்பயர்கள் கோட்டை விட்டுவிடுகிறார்கள். அதே பெங்களூரு – மும்பை போட்டியில், கடைசி பந்தில் மலிங்கா `நோ பால்’ வீசியதைக் களத்தில் இருந்த அம்பயர் சுந்தரம் ரவி கவனிக்கவில்லை. வீரர்கள் கைகுலுக்கி பெவிலியன் திரும்பிய பின்னர், ஸ்டேடியத்தில் இருந்த ஸ்கிரினில் ரீப்ளே ஒளிபரப்பான போதுதான் அது நோ பால் எனத் தெரியவந்தது. ஒரு பந்துக்கு 7 ரன்கள் தேவை  என்ற சூழலில் நடந்த களேபரம் அது. ஒருவேளை பந்துவீசிய அடுத்த நொடியே அம்பயர் கவனித்திருந்தால், ஆர்.சி.பி-க்கு ஃப்ரி ஹிட் கிடைத்திருக்கும். ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது.
[Image: 116250-pskxekgkmy-1553798939_15527.jpg]
அம்பயரின் அந்த அலட்சியம் 'இது ஒன்றும் கிளப் கிரிக்கெட் அல்ல, ஐ.பி.எல். அம்பயர் கண்களைத் திறந்து வைத்து பார்க்க வேண்டும்' என கோலியை கொந்தளிக்க வைத்துவிட்டது. மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அன்று 'பும்ரா பந்தில் தவறுதலாக wide கொடுக்கப்பட்டது' என குற்றப் பத்திரிகை வாசித்தார். களத்தில் இருக்கும் அம்பயர் கேட்டால் மட்டுமே டிவி அம்பயர் தன் முடிவை அறிவிப்பார். ஆனால், அம்பயர் ரவி, மலிங்காவின் ஓவர் ஸ்டெப்பையும் கவனிக்கவில்லை, மூன்றாவது அம்பயரிடம் ஆலோசனையும் கேட்கவில்லை. மெத்தனமாக இருந்துவிட்டார். அவர் செய்தது பிளண்டர். இத்தனை களேபரங்களுக்குப் பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூன்று நாள்கள் கழித்து நடந்த பெங்களூரு – ஹைதராபாத் போட்டியிலும் ஜம்மென அவர் அம்பயரிங் செய்தார்.
[Image: GAZI_1652_14034.jpg]
போட்டியை தாமதப்படுத்தும் கேப்டன்களுக்கு அபராதம் விதிப்பது போல, அடுத்தடுத்து தவறு செய்யும் அம்பயர்களுக்கும் கடிவாளம் போட வேண்டியதும் அவசியம். இந்த விஷயத்தில் கால்பந்தைப் பின்பற்றுவது நல்லது. களத்தில் ரெஃப்ரி எடுக்கும் ஒரு தவறான முடிவு, ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் என்பதால், கால்பந்தில் ரெஃப்ரியின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்கென்றே ஒரு குழு இருக்கிறது. களத்தில் ரெஃப்ரி செய்த தவறுகளைக் கவனிப்பதுதான் அந்தக் குழுவின் வேலையே. அந்த வீரருக்கு ஏன் ரெட் கார்டு கொடுத்தார்; ஜெர்ஸியைப் பிடித்து இழுத்த அந்த வீரருக்கு ஏன் யெல்லோ கார்டு கொடுக்கவில்லை; இந்த இடத்தில் ஏன் விசில் அடித்து போட்டியை நிறுத்தவில்லை; பந்து இங்கு இருக்கும்போது இவர்  (ரெஃப்ரி) ஏன் இங்கு நிற்கிறார் என, ரெஃப்ரியின் ஒவ்வொரு அசைவையும் முடிவையும் அங்குல அங்குலமாக அலசும் அந்தக் குழு. களத்தில் இருக்கும் மெயின் ரெஃப்ரி மட்டுமல்ல, லைன் ரெஃப்ரிகளும் இந்த ரேடாரில் இருந்து தப்ப முடியாது.
2014-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பிரேசில் – குரோஷியா மோதின. ஆக்ரோஷ பெளல் செய்த பிரேசில் வீரர் நெய்மருக்கு ரெட் கொர்டு கொடுப்பதற்குப் பதிலாக, யெல்லோ கார்டு மட்டும் கொடுத்து கருணை காட்டி விட்டார் என ரெஃப்ரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரெஃப்ரிகளுக்கான அந்த ஆய்வுக் குழு உஷாரானது. அந்தப் போட்டியில் ரெஃப்ரியாக இருந்த ஜப்பானைச் சேர்ந்த யுசி நிஷிமுரா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, அந்த உலகக் கோப்பை முடியும் வரை வேறு எந்தப் போட்டியிலும் அவர் ரெஃப்ரியாக பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இங்கு சுந்தரம் ரவி மூன்றாவது நாளே பணிக்குத் திரும்பிவிட்டார். 
[Image: nishimura_15378.jpg]
நவீன விளையாட்டு உலகில் ஆட்டத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு தொழில்நுட்பமும் , களத்தில் இருக்கும் நடுவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தே வருகிறது. இப்போதே சமூக வலைதளங்களில், `வாங்குற சம்பளத்துக்கு சுத்தமா வேலையே பார்க்காம... ஆனா, பார்க்கிறமாதிரியே நடிக்கிறதுனா அது, லெக் அம்பயர்கள்தான் போல!’ என ட்வீட் செய்யத் தொடங்கிவிட்டனர். 
கால்பந்திலும் `கோல் லைன் டெக்னாலஜி’, `Video Assistant Referee’ என்பது போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கோல் லைன் டெக்னாலஜியின் மீதும் திருப்தி இல்லை; VAR தேவையில்லாத ஆணி என்ற குற்றச்சாட்டும் இருந்தது. ஆனால், இவை எதுவும் களத்தில் இருக்கும் ரெஃப்ரியின் முக்கியத்துவத்தை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. லைன் ரெஃப்ரி உன்னிப்பாகக் கவனித்து கொடியைத் தூக்கவில்லை எனில், ஆஃப் சைடில் அடித்தாலும் அது கோல்தான்!  அந்த தருணத்தில் என்ன பார்க்கிறார்களோ அதை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். அதற்கேற்ப வினையாற்றுகிறார்கள். ஆட்டத்தின் `டெம்போ’ குறைவதில்லை. ஒவ்வொருமுறையும் ஆஃப் சைடா, இல்லையா என்பதை தொழில்நுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தால் ஆட்டத்தின் ஜீவன் கெட்டுவிடாதா?
[Image: zidane_headbut_15014.jpg]
அதேநேரத்தில், விதிமுறையை மீறாமல் இருக்கவும், டிவி ரெஃப்ரிகளின் உதவி தேவைப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 2006 உலகக் கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸ் வீரர் ஜினாடின் ஜிடேன், இத்தாலி வீரர் மடாரஸியை தலையால் முட்டினார். அப்போது பந்து எதிர்த்திசையில் இருந்தது. ரெஃப்ரியும் அந்தப் பக்கம்தான் இருந்தார். ஆனால், டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ரெஃப்ரி, உடனடியாக களத்தில் இருந்த ரெஃப்ரியை அலர்ட் செய்து, ஜிடானுக்கு ரெட் கார்டு கொடுக்க பரிந்துரைத்தார். அதன்பின்னரே, ரெஃப்ரி பாக்கெட்டில் இருந்து கார்டை வெளியே எடுத்தார். இப்படியான சூழலில் களத்தில் இல்லாத நடுவரின் (டிவி அம்பயர்) பங்கு அவசியமாகிறது. 
`90 நிமிடங்களுக்குள்...’ என்பதே கால்பந்தின் சுவாரஸ்யம். அதிலும் கூட, ஒவ்வொரு போட்டியிலும் இஞ்சுரி டைம் ஏன் 5 நிமிடங்கள் வரை நீள்கிறது என ஆய்வு செய்து, அதை எப்படி குறைக்கலாம் என யோசித்து வருகிறார்கள். கோல் கீப்பர்கள் கிக் அடிக்க தாமதிப்பதாலும்,  சப்ஸ்டிட்யூட்டின்போது களத்தில் இருந்து வெளியேறும் வீரர் அன்னநடை நடந்து வருவதாலும், காயம் உள்ளிட்ட சில விஷயங்களாலும், இஞ்சுரி டைமின் நீளம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
[Image: 1024-preview_15037.jpg]
மான்செஸ்டர் யுனைடெட் கோல் கீப்பர் டி கே சிறந்த கோல் கீப்பர். ஆனால், அவர் பந்தை ரிலீஸ் செய்யாமல் தாமதிப்பவர்களில் நம்பர் -1 இடத்தில் இருக்கிறார். 30 விநாடிகளுக்குள் பந்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதையும் மீறி இப்படி நேரத்தைக் கடத்துகிறார்கள் எனில், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள். முடிந்தவரை, ஆட்டத்தின் ஜீவன் கெடாதவாறு இஞ்சுரி டைமை இன்னும் எப்படி குறைக்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. அதற்கேற்ப விதிகளை மாற்றுகிறார்கள். விரைவில் அந்த விதியும் அமலுக்கு வரும். 

அதேபோல, 200 நிமிடங்கள்தான் லிமிட் எனில், அதற்குள் ஐ.பி.எல் போட்டிகளை முடிக்கப் பார்க்க வேண்டும். அம்பயர்களின் பணி ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். கால்பந்து பாணியில் கிரிக்கெட்டிலும் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், ஐ.பி.எல் என்பதே பிரிமியர் லீக்கின் நகல்தானே!
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 09-04-2019, 11:48 AM



Users browsing this thread: 21 Guest(s)