09-04-2019, 11:33 AM
எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்துக்குத் தடை அல்ல..! நிலம் கையகப்படுத்தும் அரசாணை மட்டுமே ரத்து!
எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்குத் தடை அல்ல - நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது, அரசு அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் பட்சத்தில், இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் மத்திய அரசின் பாரத்மால பரியோஜனா என்னும் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக 276 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு அதிகம் எனவும், இந்தத் திட்டத்தால், உண்மையில் சென்னை - சேலம் இடையே உள்ள தூரம் 45 கிலோமீட்டர் மட்டுமே குறைக்கப்படும் எனவும், அரசு சொல்வதுபோல, இந்தத் திட்டம் சென்னை - வண்டலூர் சாலை உள்ளிட்ட சாலைகளில், குறித்துக் கூறப்படும் அளவு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை எனவும், இந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் சட்ட மீறல்கள் இருப்பதாகவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும், எட்டுவழி பசுமைச் சாலை திட்டமே ரத்து செய்யப்பட்டதாகச் செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்குத் தடை அல்ல - நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அரசு அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும்பட்சத்தில், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்பு உள்ளது" என்றார்.
[/font][/color]
தமிழக மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றிருக்கும் இந்தத் தீர்ப்பின் விசாரணை ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் நேரடியாகப் பாதிப்படைந்த மக்களும், விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவது, இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக பல்வேறு பொது நல வழக்குகளும் எனச் சுமார் 45 வழக்குகளை ஒன்றாக விசாரித்த நிலையில், இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் டிசம்பர் 14-ம் தேதி முடிவடைந்தது, வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
[/font][/color]
மனுதாரர் தரப்பு வாதங்கள் :
* 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் இல்லை.
* தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு முன்னதாகவே அரசு நிலம் கையகப்படுத்துவதை ஆரம்பித்தது சட்டத்துக்குப் புறம்பானது.
* சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் விவசாய நிலங்கள், கிணறுகள், குளம், ஏரி மற்றும் மலைகள், வனங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட உள்ளது.
* இயற்கை வளங்களைப் பாதிப்புக்குள்ளாகி இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது, (sustainable development) எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு எதிரானது. இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது.
* இந்தத் திட்டத்தால் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் அதற்கான சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை.
* J.S.W ஸ்டீல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம், சேலம் அருகே கனிம வளங்களுக்காக ஏறத்தாழ 4,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியிருக்கிறது. இப்படி, தனியார் நிறுவனங்களின் கனிமவளச் சுரங்கங்கள் பயன்பாட்டுக்காகத்தான் இந்த எட்டுவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த மறைமுக நலனுக்காகவே அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
* இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி அரசு முழுமையாக ஆராயாமல், அவசரமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* மத்திய அரசு, முதலில் மதுரை - சென்னை இடையே சாலை அமைக்கப் போடப்பட்ட திட்டம், பின்னர் அறியப்பட்ட காரணங்களுக்காகவே சென்னை - சேலம் இடையே மாற்றி அமைக்கப்பட்டது.
* இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் குறித்து ஆலோசனைகளை வழங்கி தனியார் நிறுவனம் அளித்த மதிப்பீட்டு அறிக்கை பிழையானது.
* இந்தத் திட்டத்துக்காக வனங்கள் அழிக்கப்பட்டு சாலை அமைக்கப்படுவது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் புறம்பானது.
இவ்வாறு ஏராளமான வாதங்கள் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்குகள் மிக அவசரமாகத் தொடுக்கப்பட்டவை என்றும், அரசு அதன் முழு திட்ட விளக்கத்தையும் அளிக்கும் வரையில், இந்த வழக்குகளுக்கு முகாந்திரம் இல்லை எனவும், பல்வேறு வகைகளில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களின் அடிப்படையில், நீதிமன்றம் கீழ்க்கண்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது,
* சென்னை - சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காகத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து.
* இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
* எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்காக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது மிகவும் அவசியம்.
* இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, மதிப்பீட்டு அறிக்கை வழங்கிய தனியார் நிறுவன அறிக்கை, இந்தத் திட்டத்துக்காகப் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டதில்லை எனும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* எட்டுவழி பசுமைச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும்போது, அதில் சுமார் ஆறு இடங்களில் மட்டுமே நுழைவு வழிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல... சிறு ஊர்களில் உள்ள மக்கள், எட்டுவழிச் சாலையைப் பயன்படுத்தவே பல கிலோமீட்டர் தூரம் பயணப்பட வேண்டும் என்பது மக்கள் நலனுக்கு ஏற்றதல்ல... எனவே, இதுகுறித்து அரசு ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
* இந்த வழியில் உள்ள சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுடன் முன்னர் கையெழுத்திட்ட ஆவணப்படி, சுங்கச்சாவடிகள் விரிவுபடுத்தப்படும் வேலைகளுக்காக மூடப்பட்டால், அவர்கள் சுங்கம் வசூலிக்கும் காலம் மீண்டும் ஐம்பதிலிருந்து, நூறு சதவிகிதம் அதிகரிக்கப்படும். ஆதலால், அவர்கள் பல வருடங்களுக்குச் சுங்கம் வசூலிப்பார்கள். இது, பொதுமக்களைக் கடும் அவதிக்குள்ளாகும்.
* இவ்வளவு பெரிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும், அதைச் செய்யாதது தவறு.
* விதிமீறல்களால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் அதற்குரியவர்களிடம் எட்டு வாரங்களுக்குள் ஒப்படைக்கப்பட்டு, அந்த நிலங்களின் அரசு ஆவணங்களை அவர்களின் பெயர்களில் பழைய நிலையிலேயே பதிவுசெய்து தர வேண்டும். அதிலிருந்து இரண்டு வாரங்களில் நிலத்துக்குச் சொந்தக்காரர்களிடம் இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும்.
இத்தகைய முக்கிய அம்சங்களைக் கொண்ட 117 பக்க தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பல இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாடி வருகின்றனர். [/font][/color]
எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்குத் தடை அல்ல - நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது, அரசு அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் பட்சத்தில், இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் மத்திய அரசின் பாரத்மால பரியோஜனா என்னும் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக 276 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு அதிகம் எனவும், இந்தத் திட்டத்தால், உண்மையில் சென்னை - சேலம் இடையே உள்ள தூரம் 45 கிலோமீட்டர் மட்டுமே குறைக்கப்படும் எனவும், அரசு சொல்வதுபோல, இந்தத் திட்டம் சென்னை - வண்டலூர் சாலை உள்ளிட்ட சாலைகளில், குறித்துக் கூறப்படும் அளவு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை எனவும், இந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் சட்ட மீறல்கள் இருப்பதாகவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்காக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன்கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு.
[color][font]மேலும், எட்டுவழி பசுமைச் சாலை திட்டமே ரத்து செய்யப்பட்டதாகச் செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்குத் தடை அல்ல - நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அரசு அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும்பட்சத்தில், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வாய்ப்பு உள்ளது" என்றார்.
[/font][/color]
[color][font]