15-05-2021, 11:44 PM
அங்கே ரூபாவும் பவித்ராவும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்.
பவியும் சிரித்தாள்.
இவளை பார்த்ததும் சினேக புன்னகை வீச
பவி, அவர்களை பார்த்து சிரித்து, சாரை பார்த்து பேசிட்டு வந்துடறேன்.
அவர்கள் தலையை அசைக்க
அவள், கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்து கொண்டு,
பட படக்கும் மனசுடன் அவருடைய ரூம் வாசலில் நின்று,
மே ஐ கம் இன் சார்,
உள்ளே வாம்மா , குரல் வர
உள்ளே கோட்டில் டிப் டாப்பாக ஆசாமி உட்கார்ந்து இருப்பார் என்று நினைத்துக்கொண்டு போன
பவித்ராவுக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது.
உள்ளே, அமீர் சொன்ன 500 கோடி சொத்துக்கான உரிமையாளர் ஹசன் சார் மிக சாதாரணமாக
வேஷ்டி சட்டையில் இருந்தார்.
55 வயது இருக்கலாம்.
உள்ளே நுழைந்த பவித்ராவை புன்னகை முகத்துடன், வாம்மா உட்கார்
பவித்ரா, கை கூப்பி அவரை வணங்கி, இமைக்க மறந்து அவரை பார்க்க
அவரோ, உட்கார் மா, எதிர்த்த நாற்காலியை காண்பிக்க
நன்றி சொல்லி உட்கார்ந்தாள் பவித்ரா.
என்னமா அப்படி பார்க்கிற
சாரி சார், நத்திங் சார்.
பயப்படாதே மா, சொல்ல வந்ததை தைரியமா சொல்லு பவித்ரா
இல்ல சார், தமிழ்நாட்டில் லீடிங் கம்பெனி, நீங்க மல்டி மில்லியனர், ஆனா இவ்வளவு சிம்பிளா....
ஹசன் சார், அவளை பார்த்து புன்னைகைத்து கொண்டே,
தன்னை பற்றி அவளிடம், தான் சிறிய வயதில் சாப்பாட்டுக்கே கஷ்ட பட்டதாகவும்,
கடின உழைப்பினால் இந்த நிலைக்கு வந்ததாகவும்,
பணத்தை விட மனித தன்மையே முக்கியம் என வாழ பிடிக்கும் என கூறினார்.
பவித்ரா அவரை இன்னும் ஆச்சர்யம் விலகாத கண்களோடு பார்த்தாள்.
பின்பு, இந்த வேலையின் தன்மை பற்றி சுருக்கமாக அவளுக்கு விளக்கினார்.
வேலை ரொம்ப சுலபம்.
ஆனால் பொறுப்பு மிக்கது.
தினசரி வேலைகளை ஹசன் சாருக்கு சரியான நேரத்திற்கு டைம் பிரகாரம் நியாபக படுத்த
வேண்டும்.
அவருக்கு வரும் டைரக்ட் போன் கால்ஸ் அட்டென்ட் செய்து, தேவை பட்டால் மட்டுமே அவருக்கு
கனக்சன் கொடுக்க வேண்டும்.
சரியாக பதினோரு மணிக்கு அவருக்கு ஒரு கிறீன் டீ போட்டு கொடுக்க வேண்டும்.
மதியம் சாப்பிடும் போது எந்த தொந்தரவு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஹார்ட் problem உள்ளவர் என்பதால், நேரத்துக்கு மாத்திரை கொடுக்க வேண்டும்.
ஆஃபிஸில் ரௌண்ட்ஸ் சென்று, எல்லாரும் பேசாமல் வேலை செய்கிறார்களா என்று பார்க்க
வேண்டும்.
பவித்ரா கவனமாக கேட்டு குறித்து கொண்டாள்.
ஜி எம் அமீர், என்னுடைய உறவு கார பையன்.
படிப்பு முடிந்தவுடன் இங்கு இங்கே வேலை போட்டு கொடுத்து இருக்கேன்.
என்னுடைய மகன், ரோஹன் டிகிரி முடித்து லண்டனில் MBA படித்து கொண்டு இருக்கிறான். அடுத்த
வருடம் வந்து கம்பெனி பொறுப்பை எடுத்து கொள்வான்.
அது வரைக்கும் எனக்கு என்ன ஆனாலும் நீ தான் பொறுப்பு, னு சொல்லி சிரிக்க
பவியும் சிரித்தாள்.