15-05-2021, 11:39 PM
அடுத்த வாரம், திங்கள் கிழமை அழைத்திருந்தார்கள். ஞாயிறு இரவு அவளுக்கு தூக்கமே
வரவில்லை.
பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
வரவில்லை.
மறுநாள், காலையில் நன்றாக குளித்துவிட்டு, அழகிய ஆகாய வண்ண சேலை அணிந்து, அதற்கு
ஏற்றாற்போல் காதில் கம்மல் செயின் வளையல் அணிந்து, சிம்பிளாக மேக்கப் செய்து ரெடியாக,
அவள் புருஷன் சதிஷ், அவளை ஒரு மாதிரி பார்த்து, ஏண்டி, இன்டெர்வியூக்கு போறியா இல்ல .......
ஐயோ கண்ணு வைக்காதீங்க, சேலை நல்ல இருக்குலே
சூப்பரா இருக்கு, போ எல்லாரும் ஜொள்ளு விடுவாங்க, உனக்குத்தான் வேலை. சதிஷ் கிண்டல்
செய்தான்.
ஐயோ, உங்க வாய் பலிக்கனும். வேலை கிடைச்ச இன்னைக்கு உங்கள் ஸ்பெஷல் ஆ
கவனிக்கிறேன்.
சதிஷ், ஓகே ஓகே
அப்படியே, போகும் போது அத்தை மாமாகிட்டே ஆசீர்வாதம் வாங்கி பின்பு
செல்வி, வெங்கட்டிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் பவி.
ஆட்டோ பிடித்து, இருபது நிமிடம் பயணம் செய்து அந்த கம்பனி போய் சேர்ந்தால் பவித்ரா.
உள்ளே நுழைந்தவுடன் இருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்த அழகான பெண் இவளை பார்த்து
சிரிக்க, தான் வந்த விஷயத்தை பவி அவளிடம் தெரிவிக்க,
அவள் ஒரு கதவை காட்டி உள்ள சென்று உட்கார சொன்னாள்.
உள்ள சென்ற பவிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.
ஆமாம். கிட்டத்தட்ட 30 பெண்கள் அங்கே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள்.
பட படக்கும் மனசோடு, அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தா பவித்ரா,
ஒவ்வொருத்தரா உள்ள சென்று மீண்டும் வெளிய வந்து உட்கார்ந்தார்கள்.
பவி முறை வந்த போது, உள்ளே செல்ல, அவளுடைய நேம் வெரிஃபிகேஷன் மற்ற அவளுடைய
ஐடென்டிபிகேஷன் சரி பார்க்க பட்டது.
சிறிது நேரத்தில் எழுத்து தேர்வு இருக்கு என்று சொல்ல பட்டது.
அதே படபடப்புடன் வெளிய வந்து உட்கார்ந்தா.
சிறிது நேரத்தில் அவளுக்கும் மற்ற அனைவர்க்கும் ஒரு தாள் கொடுக்கப்பட்டது.
கேள்வியும் கொடுத்து, கீழே பதில் கொடுத்து, சரியான பதிலை டிக் அடிக்க சொல்லி இருந்தார்கள்.
நேரம் அரை மணி நேரம்.
பவி ஏற்கனவே புத்திசாலி பெண். இதுஎல்லாம் கால் தூசு.
நேரம் முடிந்தவுடன் தாள் வாங்கப்பட்டு, அனைவரையும் காத்து இருக்க சொன்னாங்க,.
அனைவருக்கும், ஸ்னாக்ஸ் டீ வழங்க பட்டது.
இதுவே பவித்ராவுக்கு கம்பனி மேல் இருந்த மதிப்பு கூடியது.
வேறு எந்த கம்பனியில் இப்படி கவனிக்க வில்லை.
ஒரு மணி நேரம் அனைவரும் அமைதியாக இருக்க, டை கட்டிய ஒரு நபர் ஒருவர்,
தன்னை செக்ரட்டரி என்று தன்னை ஆறுமுக படுத்தி, டெஸ்ட் ரிசல்ட் சொல்லி மொத்தத்தில்,
32 நபரில் 5 நபர் மட்டும் முதல் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்க, அதில் நம்ம பவியும் ஒரு நபர்.
பவிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .
மற்ற அனைவரும் அனுப்ப பட்டார்கள்.
இரண்டாவது ரவுண்டு ஆரம்பம் ஆனது.
ஒருத்தர் ஒருதராக மேனேஜர் ரூமில் அனுப்ப பட்டார்கள்.
அவர், அவர்களிடம் பேசி அவர்கள் திறமையை கண்டு பிடித்து மார்க் போட்டார்.
அதில், மூன்று நபர் செலக்ட் ஆனாங்க,. அதிலே நம்ம செல்லக்குட்டி பவியும் ஒரு ஆள்.
இரண்டு நபர் வீட்டுக்கு அனுப்ப பட்டார்கள்.
மற்ற மூன்று நபருக்கும் கான்டீன் டோக்கன் வழங்க பட்டது. அதே கட்டடத்தில் மேல் மாடியில்
இருந்த கேன்டீனை நோக்கி மூன்று பேரும் லிப்ட்டில் பயணப்பட்டு சென்றார்கள்.
மூன்று பேரும் பேசி கொண்டே கான்டீன் சென்று, டோக்கனை கொடுக்க, அருமையான வெஜ் சாதம்
அவர்களுக்கு வழங்க பட்டது.
கான்டீன் கூட முழு ஏர் கண்டிஷனர்.
பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.