08-05-2021, 08:40 AM
(08-05-2021, 06:36 AM)jakash Wrote: நிருதி அண்ணா நீங்க இருக்கிற இடத்துல நானும் ஒரு எழுத்தாளர் னு சொன்னா நல்லா இருக்காது .இருந்தாலும் ஏதோ எழுதி கிட்டு இருக்கேன் .உங்களோட அனுபவத்துல எனக்கு சில அறிவுரைகள் சொல்லுங்க இந்த காம தளத்தில் எழுதும் கதைகளை தவிர நார்மலாக காதல் கதைகள் எழுத வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை ஆனால் ஒரு பக்கம் எழுதுவேன் அதன் பின் விட்டு விடுவேன் .நல்ல கதை எழுத என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்
இங்க யாரும் பெரியவங்க, சின்னவங்க இல்லை நண்பா. எனக்கு தெரிந்ததை நான் எழுதிட்டிருக்கேன். நீங்க உங்க மனசுக்கு புடிச்சதை எழுதுங்க. ஆனா எத எழுதினாலும் கொஞ்சம் ஆழமா எழுதுங்க. பேருக்காக, புகழுக்காகனு எழுத வேண்டாம். அப்படி எழுதினா கதை வரும் ஆனா எழுத்து வராது.
எழுதின ஒண்ணு திருப்தியில்லேனா திரும்பத் திரும்ப எழுதுங்க. சலிக்காம எழுதுங்க. ஒவ்வொரு தடவை எழுதறப்பவும் புதுசு புதுசா ஒண்ணு தோணும். அது கதையை ஆழமாக்கும். அதே சமயம் நிறைய பேர் படிக்கணும்னு நெனச்சு, படிக்கறவங்களை மனசுல வெச்சு எழுத வேண்டாம். அது எழுத்தை தடை பண்ணிரும். நாம என்ன எழுத நினைக்கறமோ அத மட்டும் எழுதணும். பாராட்டை எதிர்பார்த்து எழுதக்கூடாது. எழுத்து நல்லா வந்தா கதை விரும்பி படிக்கப்படும். பாராட்டு கிடைக்கும்.
நல்ல கதை எழுத வெறும் கற்பனை மட்டும் பத்தாது. கொஞ்சம் உண்மையும் வேணும். உண்மை கலந்து எழுதப்படற கதைகள் படிப்பவர்களை விரும்ப வைக்கும்.
மிக முக்கியமானது. எழுதணும்னு ஆசை இருந்தா பத்தாது. அது ஓர் உத்வேகமாகணும். அதுக்கு நிறைய நேரம் ஒதுக்கணும். நிறைய படிக்கணும். நல்ல எழுத்தாளர்களையும், கதைகளையும் தேடித்தேடிப் படிக்கணும். அவங்க எழுதினதை உள்வாங்கி படிக்கணும். ஒரு கருத்தை, சம்பவத்தை எப்படி சொல்லியிருக்காங்கனு புரிஞ்சு படிக்கணும்.
காமக்கதையோ காதல் கதையோ சம்பவங்களாலதான் கதை விரியும். நிறைய சம்பவங்களை எழுதுங்க. அதை உடனே பதிவிடாம மேல மேல எழுதி இன்னும் நல்லா கொண்டு வந்தபின்னால பதிவிடுங்க. ஆர்வக்கோளாறு இல்லாம பொறுமையா எழுதி பதிவிடுங்க.. !!
வாழ்த்துக்கள்.. !!