06-05-2021, 02:23 PM
பாகம் - 73
காட்டாற்று வெள்ளத்தில் மணி தன்னைக் கரைத்துக் கொண்ட மறுநாள்.
இரவு உணவை முடித்துக் கொண்டு, சிவகாமியும் மதுவும், டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இருவரது கவனமும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது இல்லை.
தன் மகள் தன்னுடன் பேச ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஆகி இருந்தாலும், நேருக்கு நேர் முகம் பார்த்து பேச, தன் மகளுடன் ஆன உறவைப் புதுப்பித்துக் கொள்ள சிவகாமிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு. கடந்த மூன்று நாட்களாக ரஞ்சித் உடன் இருந்ததால், அவளால் இயல்பாக தன் மகளுடன் பேச முடியவில்லை. இன்று அதற்கான வாய்ப்பு கிடைக்கவே, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாத குழப்பத்தில், தயக்கத்தில் கண்களை தொலைக்காட்சியின் மீது பதித்து இருந்தாலும் கவனம் மொத்தத்தையும் தன் மகளின் மீதே வைத்திருந்தாள் சிவகாமி. மது, சிவகாமி என இருவருமே கொஞ்சம் அசூசையாகவே உணர்ந்தார்கள். பழைய இயல்புக்கு தங்கள் உறவு உடனே திரும்பாது என்பதை இருவருமே உணயர்ந்திருந்தார்கள். தன் மகளுடனான உறவை புதுப்பித்துக் கொள் துடித்துக் கொண்டிருந்தவளுக்கு மகளின் திடீர் வருகை சொல்ல முடியாத அளவுக்கு இன்பத்தை கொடுத்தாலும், அவளை எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றத்தையும் கொடுத்து.
மதுவின் மனமோ வேறு மாதிரியான குழப்பத்தில் சிக்கித் தவித்து இருந்தது. நேற்று இரவு அகாடமியில் இருந்து நேராக மணியின் வீட்டுக்குத்தான் அவளும் ரஞ்சித்தும் சென்றார்கள். கேட்டிலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா உரிமைகளையும் கொண்டு, சர்வ சாதாரணமாக சென்று வந்த வீட்டிற்குள் கூட அனுமதிக்க கூட படாததில் நொந்தவள், மணியன் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாத ஏமாற்றத்தில் மேலும் நொந்து போனாள்.
ரஞ்சித் தான் "மணிக்கு ஒன்னும் ஆயிருக்காது, நடந்து போனார்னு தானே சொன்னாங்க!!" என்று சொல்லி தேற்றி அழைத்து வந்திருந்தான்.
இன்று காலை சென்ற போதும் அதே நிலைதான். வீட்டின் செக்யூரிட்டி ஆட்கள் அலுவலகத்தில் சென்று பார்க்கும்படி அறிவுறுத்த, மணியின் அலுவலகத்திலோ எப்படியும் அவனை பார்க்க ஒரு வாரத்திற்கு அப்பாயின்ட்மெண்ட் கிடைக்காது என்ற தகவல் சொல்லப்பட மேலும் சோர்வானாள். மதுவிற்கு ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை, சீக்கிரம் அவனை சந்திப்பது எப்படி என்ற குழப்பத்தில் இருந்தாள் மது.
"பத்து நாளுனு சொல்லிட்டு, மாப்பிள திடீர்னு இன்னைக்கே கிளம்பி போயிட்டாரு?"
ஒருவாராக குழப்பத்தில் இருந்து வெளிவந்த சிவகாமி, இருவருக்குமான அமைதியை உடைத்தாள்.
"இல்ல, ரொம்ப முக்கியமான விஷயம், அதான்!!"
தன் மனக் குழப்பத்திலிருந்து மீளாமல் பதில் சொன்னாள் மது.
"நீயும் மாப்பிள்ளை கூட போயிருக்கலாமே மா!!" தவிப்பாக சொன்னாள் சிவகாமி.
தன் தாயைப் பார்த்து வாஞ்சையாக சிரித்த மது, எழுந்து சென்று அவள் அருகே அமர்ந்து
"உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் வந்தேன். அதனாலதான் போகல!!"
தான் கேட்க தவித்த வார்த்தைகளே தன் மகளின் வாயிலிருந்து வந்து விழ, லேசாக கலங்கிய கண்களுடன் சிரித்தவள், தன் மகளின் இரு கைகளையும் பிடித்து கொண்டாள்.
"சரி டா.... போய் தூங்கு!!" என்று சொல்லிவிட்டு எழப் போனவளின் கைகளில் அழுத்தம் கொடுத்து அமர வைத்தாள் மது.
மீண்டும் அங்கே சில நிமிட அமைதி நிலவியது. தன் மகள் தன்னிடம் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்றதுமே ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது சிவகாமியின் மனதில்.
"உனக்கு தெரியுமான்னு தெரியல!!........நானும் மணியும் லவ் பண்னோம்!!......... அவ......" என்று நிறுத்த, சிவகாமியின் முகத்தில் கலவர ரேகைகள்.
"அவன ரொம்ப கஷ்டப் படுத்திருக்கேன் மா!!....... வாழ்க்கையில நான் பண்ண சில தப்ப சரி செய்யணும்னு தான் கோயம்புத்தூர் வந்தேன்!!" சிவகாமியின் முகத்தில் இருந்த கலவரம் அதிர்ச்சியாக மாறியது.
"உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண...... உனக்காகத்தாமா இங்கே வந்தேன்!!........ முடிஞ்சா அவனுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு தோணுச்சு!!" தன் தாயின் அதிர்ச்சியைக் கண்டவள் பொய் சொன்னாள்.
மீண்டும் அந்த அறையில் சில நிமிட அமைதி. இருவரது மனமும் வெவ்வேறான குழப்பத்தில் சிக்கித் தவித்தது. தன் தாய் காயப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மதுவுக்கு. தன் மகளின் இந்த விபரீத முடிவால் அவளது திருமண வாழ்விற்கு எந்த குந்தகமும் வந்து விடக்கூடாது என்ற கவலை சிவகாமிக்கு.
"வேணாமே!!......" என்று ஆரம்பித்த சிவகாமி, நிறுத்தி தன் வார்த்தைகளை திருத்தினாள்.
'மாப்பிள்ளைக்கு தெரியுமா?!!" மது ஆமோதிப்பாக தலையாட்ட என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியானாள் சிவகாமி.
அரை மணி நேரம் கழித்து,
சிவகாமியும் மதுவும் அவரவருக்கான அறையில் படுத்திருக்க இருவரது மனதிலும் பெரும் குழப்பமும் பயமும். அந்த இரவு இருவருக்கும் நிம்மதியில்லாத தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது.
*************
“ஹேய்!! என்ன நீ இவ்வளவு நர்வஸா இருக்க?” என்ற ரஞ்சித்தைப் பார்த்து மறுப்பாக தலையசைத்த மதுவின் கண்கள் கதவுகளில் நிலைத்திருந்தது. ரஞ்சித்தும், மதுவும் அந்த டென்னிஸ் கோர்ட்டீன் மேல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அவள் கண்கள் தேடிய உருவம் அந்த உள் விளையாட்டாரங்கத்தில் நுழைந்தது. அவன் நடையில் அவள் அறிந்த, ரசித்த துள்ளல் இல்லை. தன் மொத்த உடல் எடையையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றியவாறு நிதானமாக நடந்தவாறு அந்த கோர்ட்டுக்குள் நுழைந்தான் மணி. மதுவின் நினைவு அடுக்குகளில் இருந்த அவனது பிம்பத்துக்கு எந்த வித பொருத்தமும் இல்லாத மணிகண்டன். மதுவால் உணர்ந்து கொள்ள முடிந்த ஒன்றே ஒன்று அவன் முகத்தில் தென்பட்ட பதற்றம். அவனின் பதற்றம் அவளுக்குள் இருந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க,
“He too.....” என்றவாரு மதுவைப் பார்த்து திரும்பியவன், பாதியில் இருத்தினான்.
அவள் தோளை அசைத்தவன், இரு கைகளையும் விரித்து என்னவென்று கேட்க, மீண்டும் மறுப்பாக தலையசைத்தாள். அதன் பின் அவளை ரஞ்சித்து தொந்தரவு செய்யவில்லை. மணியின் பதற்றமான முகத்தை பார்க்க பார்க்க மதுவின் இதயத்துடிப்பு எகிறியது. இதயத்தின் "லப்.. டப்" ஓசை அந்த அரங்கத்தின் இரைச்சலையும் மீறி அவள் காதுகளுக்கு கேட்பது போல் தோன்றியது. எதிராளிக்கு கை கொடுத்தவன் அவனது பக்கம் சென்று நின்றான். கேலரி சுற்றிப் பார்க்கவில்லை, உடலை ஸ்ட்ரெச் செய்யவில்லை. விளையாடவே விருப்பம் இல்லாதவன் போல் வெறுமன நின்றான். மது அறிந்த மணியோ டென்னிஸ் கோர்ட்க்குள் நுழைந்தால் எதோ டென்னிஸ் கோர்ட்டை குத்தகைக்கு எடுத்தவன் போல், காலில் ஸ்பிரிங் வைத்தது போல் எல்லைக் கோடுகளை சிலமுறை அளந்து விட்டுத்தான் அவன் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பான். முன்னங்கால் மட்டுமே தரையில் அழுந்தியிருக்க மொத்த உடலும் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டே இருக்கும்.
"Are you ready?" என்று ரெபரி கேட்க, அரை விழியில் அவரைப் பார்த்து தலையசைத்தவன் நின்ற நிலை மதுவை குழப்பம்முற செய்தது.
கோகோர்ட் வலதுபுற எல்லையில் இருந்து இரண்டு அடி தள்ளி நின்றவன் கால்கள் வலதுபுறம் திரும்பி நின்றது. அவன் நிற்கின்ற நிலையில் பந்து அவனுக்கு இடதுபுறம் அடிக்கப்பட்டால் பந்தை எதிர் கொள்வதற்கு ஒரு வினாடி எனும் அதிகம் தேவைப்படும். டென்னிசில் மிகவும் அடிப்படையான ஒன்று. என்னதான் நீண்ட நாட்கள் விளையாட விட்டாலும் இதெல்லாம் மறக்கக் கூடியதல்ல. விசில் ஊதப்பட்டும் அவன் தலை நிமிராமல் குனிந்தவாறே இருக்க, மதுவுக்கு வாய் எடுத்து கத்தவேண்டும் போல் இருந்தது. மது எதிர்பார்த்தது போலவே பந்து மணிக்கு இடதுபுறமாகவே அடிக்கப்பட்டது. மணியின் உடலில் எந்தவித அசைவும் இல்லை, அரங்கத்தில் "ஓ" என்று எழுந்த சத்தம் ஓரிரு நொடிகளில் அடங்கியது. மொத்த அரங்கமும் மயான அமைதியாக இருக்க, முகம் தரையில் மோத பொத்தென்று விழுந்தான். மீண்டும் அந்த அரங்கமே "ஓ" என்று அதிர்ந்தது.
திதிடுக்கிட்டு விழித்தால் மது. உடலெல்லாம் வேர்த்திருந்தது
விழித்த பின்னும் அவன் தரையில் உயிரற்ற சடலம் போல் விழுந்தது அவள் கண் முன்னே திரும்பத் திரும்ப வந்தது. மயங்கி விழும் போது யாரும் அப்படி மொத்தமாகச் சரிந்து விழ மாட்டார்கள். கையையோ காலையோ ஊன்றி தனக்கு அடிபடாதவாறு உடலே தன்னிச்சையாக செயல்படும். அவன் அப்படி மொத்தமாக சரிந்து விழுந்தான் என்றால் சில நொடிகளுக்கு முன்பாகவே நினைவு இழந்திருக்க வேண்டும். உடலை நிலை நிறுத்தி இருந்த நிலையில் உடல் சிறிது நேரம் தாக்கு பிடித்தே அப்படிச் விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவனைக் காண இன்னும் ஒரு வாரம் காத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. எப்படியாவது இன்று அவனை பார்த்தால்தான் தன் மனம் ஆறும் என்று உணர்ந்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வாட்ச்சைப் பார்த்தால், அது ஆறு என்று காட்டியது.
குளித்துவிட்டு வந்தவுடன் மனம் சற்று அடங்கி இருந்தது. நேற்றிரவு தன் தாயிடம் மணியை காதலித்ததை சொன்னது நினைவுக்கு வந்தது. “வேணாமே" என்று அவள் தாய் வேண்டியதில் இருந்தே தேவயில்லாத குழப்பத்தை அவள் மனதில் விதைத்துவிட்டோம் என்று உணர்ந்தவள் முதலில் அதை எப்படி சரி செய்வது என்று நினைக்கலானாள். உடை மாற்றும் பொழுத்துதான் அந்த பேக்-கைப் பார்த்தாள். இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாய் தன்னிடம் கொடுக்கச் சொல்லி, ரஞ்சித்திடம் கொடுத்தது. அதில் என்ன இருக்கும் என்று தெரிந்ததாலேயோ என்னவோ அதை திறந்து கூடப் பார்க்கவில்லை. அதற்குள் சிவகாமி சாப்பிட அழைக்க, சாப்பிட சென்றாள்.
காலை சாப்பாட்டின் போது பெரிதாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. யோசனையுடனே சாப்பிட்ட மது, சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்ததும் அந்த பேக்-கை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
எடுத்து வந்ததை தாயிடம் கொடுக்க
"என்னமா?” என்று குழப்பமாக பார்த்தவளிடம்
“பழசு எல்லாத்தையும் நான் மறக்கணும்னு நினைக்கிறேன்!!...... அத நான் திறந்து கூட பாக்கல!!” என்றாள். மகளை நிமிர்ந்து பார்த்த சிவகாமி,
“என்ன மன்னிச்சிருடா!!” என்றாள்.
மது பேச ஆரம்பித்த பின், கடந்த கால கசப்புகளை மறக்க நினைத்து மன்னிப்பு கேட்காதவள், முதல்முறையாக தன் செயலுக்காக மன்னிப்பை கேட்டாள். அருகில் அமர்ந்த மது ஆறுதலாக தன் தாயை அணைக்க தாயிற்கும் இருவருக்கும் இடையே இருந்த மாயத்திரையின் அடர்த்தி குறைவது போல் தோன்றியது.
அரைமணி நேரம் கழித்து
மகள் மீண்டும் அவளது அறைக்கு சென்றுவிட, தன் அறைக்கு வந்த சிவகாமி, மது கொடுத்த பேக்-கை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழப்பமான மனநிலையில் இருந்தாள், பின் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தவள், அதை அறையில் இருந்த கப்போர்ட்டில் வைத்து பூட்டிவிட்டாள்.
அதே சமயம் தன் அறையில் இருந்த மதுவின் முகத்தில் பெரும் படபடப்பு. மொபைல்லை காதுக்கு கொடுத்திருந்தாள். அழைப்பின் ஓசை காதில் விழ, அந்த படபடப்பு அதிகரித்துக் கொண்டே போனது. நீண்ட சிந்தனைக்குப் பின் ஒருவாராக முடிவுக்கு வந்தவளாக நேத்ராவுக்கு அழைக்க தொற்றிக் கொண்ட படபடப்புத்தான் அது.
“ஹலோ!!” பிரதீப் தான் அழைப்பை எடுத்தான்.
“ஹலோ!!”
“எஸ்!!”
“பிரதீப், நான் பானு!!” என்றவளின் குரலில் படபடப்பு அடங்கவில்லை.
“பானு?......” என்றவன், இரண்டு நொடிகளுக்குப் பின்
"ஹேய் பானு!!.. எப்படி இருக்க?” என்க, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“நேத்ரா..?” பொதுவான உரையாடலுக்குப் பின்னர், கொஞ்சம் தயக்கமாகவே கேட்டாள் மது.
“தூங்குறா!!” பதில் சொன்ன விதத்தில் இருந்தே அவளை எழுப்புவதை அவன் விரும்பவில்லை என்று புரிந்தது மதுவுக்கு. சில நொடி தயக்கத்துடன் மௌனமானாள்.
“ஃபேஸ்புக் பாத்தியா?” என்றான் பிரதீப்
“இல்லையே!!.... ஏன்?”
“இல்ல...... நேத்து உனக்கு மெசேஜ் அனுப்பிருந்தேன்.... அத பாத்திட்டுதான் கூப்பிட்டேயோனு நினச்சேன்!!”
“ஸாரி.. பிரதீப்!! நான் பாக்கல” என்றவளின் மனதில் எண்ணற்ற கேள்விகள்.
“கோயம்புத்தூர் வர முடியுமா பானு??......” என்று சொல்லி நிறுத்தியவன் பின் தொடர்ந்ததான்
"நேர்ல பாக்கனும்.... பிளீஸ்!!” என்று பிரதீப் கூற, மதுவின் மனம் சீரில்லாமல் சிந்தித்து.
“இப்போ நான்...... ஊர்ல தான் இருக்கேன்!!” தயங்கி தயங்கியே பதிலுறைத்தாள் மது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிரதீப்
“லஞ்சுக்கு மீட் பண்ணலாமா?...... நான் ஒரு ரெஸ்டரண்ட் லொகேஷன் மெசேஜ் அனுப்புறேன்!!”
“ம்ம்ம்!!”
“வாட்ஸ்அப் இதே நம்பர் தான?”
“ம்ம்ம்"
“ஓகே!! பை..”
“பிரதீப்..” அழைப்பை தூண்டித்துவிடுவானோ என்று அவசர அவசரமாக அழைத்தவள்
“அவன் கூட.... டச்ல இருக்கியா?” ஏனோ நாக்கு ஒட்டிக் கொண்டது போல தோன்றியது மதுவுக்கு.
“ம்ம்ம்!!”
“எப்படி இருக்கான்?” என்றவளின் காதுகள் கூர்மையடைந்தன
“அவனுக்கு என்ன செமய்யா இருக்கான்.... பெரிய ஆள் ஆயிட்டான்.... ஏன் நீ நியூஸ் எல்லாம் பாக்குறது இல்லையா?” என்று கேட்டவனின் குரலில் இருந்தது வருத்தமா?? கோபமா என்று தெரியவில்லை. கோயம்புத்தூரில் இருந்து அவ்வளவு தூரம் விலகியிருந்தாள்.
“சரி..... லஞ்சுல பார்க்கலாம்!!” என்றவன் அழைப்பை தூண்டிக்க, கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள் மது.
பிரதீப் பேசியவிதத்தில் இருந்து அவனுக்கு தன் மேல் வருத்தமொ கோபமோ இருப்பது புரிந்து கொள்ள முடிந்தாலும், மணியிடன் அவன் தொடர்பில் இருப்பது கொஞ்சம் ஆறுதலிப்பதாக இருந்தது. ஏப்படியும் இன்று அவனை பார்த்துவிடலாம் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அவன் சொன்ன "பிளீஸ்" அவளுக்குள் சொல்ல முடியாத பயத்தையும் தூண்டியது. ஒருவேளை மணிக்கு? இல்ல நேத்ராவுக்கு? என்று எழுந்த கேள்விகளை அவளது மொபைலின் ஓசை கலைத்து. பிரதீப் தான் ரெஸ்டரண்ட் லொகேஷன் அனுப்பியிருந்தான்.
பிரதீப் சொன்ன நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாகவே அந்த ரெஸ்டரண்ட்டை என்றடைந்தாள். ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கிடந்தது அவளது மனம். மணியை சந்திப்பது என்று முடிவு செய்துவிட்டாலும், அந்த சந்திப்பிற்கு பின் அவர்களது வாழ்வு உறவு எந்த திசையில் பயணிக்கும் என்ற பயம் கொடுத்த விளைவு அது. பேசுவானா? இல்லை கடைசியாக சந்தித்த போது யாரோ ஒருவரிடம் பேசுவது போல் நடந்து கொள்வானா? அன்புடன் அவன் நடந்து கொண்டாள் என்ன செய்வது? என்பது போன்ற கேள்விகளுக்கு இடையில் அவள் எண்ணம் அங்கும் இங்கும் ஓட, அவளது கண்களோ பிரதீப்பின் வரவை எதிர்பார்த்து வாயிலையே வெறித்திருந்தன.
மதுவை நீண்ட காத்திருக்க வைக்காமல் அவனும் கொஞ்சம் முன்னதாகவே வந்தான், அவன் உள்ளே நுழைந்ததும் இவள் எழுந்து கைகாட்ட, கவனித்தவனின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை. இருவரும் அனைத்துக் கொண்டபின் எதிரே அமர,
“என்ன டா தோப்ப போட்டுட்ட?” தொலைபேசியில் தயங்கிய வார்தை, நேரில் பார்க்கும் போது எளிதாக வந்தது.
மதுவின் மனதை குழப்பிய கேள்விகள் எங்கோ காற்றில் கரைந்தது. நட்பில் மட்டுமே நடக்கும் மாயாஜாலம் அது. மதுவின் கேள்விக்கு பெரிதாக சிரித்தவன் தன் வயிறைப் பார்த்தான்.
“ஹா ஹா.... வாயாசாயிடுச்சு!!” சிரித்தவன், மதுவின் முகத்தை கவனித்தான்.
“ஆனா நீ இன்னும் அப்படியேதான் இருக்க..... நெத்தில குங்குமம் மட்டும் தான் புதுசு" என்றவனின் கண்கள் இயல்பாக அவள் கழுத்தில் எதையோ தேடியது. தேடியது கிடைத்தவுடன்
“அப்புறம்.... ஹோவ் இஸ் ரஞ்சித்?” என்க
“நல்ல இருக்கான்!!” என்றவள் லேசாக புன்னகையித்தாள்
“நேத்ரா வருவானு எதிர் பார்த்தேன்!!” அவள் புன்னகை வரண்டது.
மதுவுக்கு பதில் சொல்லாமல் மெனு காரட்டை புரட்டியவன், மதுவுக்கும் என்ன வேண்டும் என்று கேட்டு அதையும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
“நீ கோயம்புத்தூர் வந்தத இன்னும் அவ கிட்ட சொல்லல!!”
“......................”
இருவருக்கு இடையில் ஏதோ வந்து உட்கார்ந்து கொண்டதைப் போல ஒரு அமைதி நீடிக்க, பிரதீப்பே அதை உடைத்தான்.
“ மணி உன்ன பாக்கனும்னு ஹெல்ப் கேட்டான்!!,...... உனக்கு எந்த ப்ராப்ளமமும் இல்லனா நான் கூட்டிட்டு போறேன்!!...... நான் உன்ன கட்டாயப் படுத்தல...... உனக்கு ஓகேனா மட்டும் வந்தாப் போதும்..... இல்லனா நான் அவன சமாளிச்சுக்கிறேன்!!” கொஞ்சம் தயங்கி தயங்கிய கேட்க, ஒரு சில நொடி வாயடைத்துப் போனாள் மது.
மீண்டும் அவளது மனம் சந்திப்பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து. மதுவின் தயக்கத்தைப் பார்த்த பிரதீப்
“இட்ஸ் ஓகே!!.... ஐ அண்டர்ஸ்டாண்ட்!! நீ தேவை இல்லாம ஃபீல்....” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சரி என்று தலையசைத்தாள்.
“ஆர் யு சூர்?!!” பிரதீப் தயக்கமாக கேட்க, இந்தமுறை ஆமோதிப்பாக தலையசைத்தாள், வேக வேகமாக. வார்த்தைகள் ஏனோ அவள் உதடுகளை விட்டு வருவேணா என்றது.
முக்கால் மணி நேரம் கழித்து,
நெஞ்சம் படபடக்க காரில் அமர்திருந்தாள் மது. அவளது வலது கை பெருவிரல் இடது உள்ளங்கையின் ரேகைகளை அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. எண்ணங்கள் எதுவும் இல்லா ஒரு அடர்த்தி அவள் மனதை அழுத்த, அவளது பார்வையோ ரேகையை அழிக்க முயற்சி செய்யும் விரலை உற்சாகம் ஊட்டியது. பிரதீப் ஒட்டிக் கொண்டிருந்த அந்த காரின் வேகம் குறைந்து, வலது புறமாக திரும்ப, தயக்கமாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் பெரிதாக விரிந்தது.
மதுவின் மனமோ விரிந்த விழிளில் விழுந்த காட்சியை நம்ப மறுத்து.
***********************