04-04-2019, 09:46 PM
கார்த்திக் உச்ச கட்ட கடுப்பில் இருந்தான். வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்றே இல்லாமல் வாழ்வதே தன் லட்சியமாக கொண்டிருக்கையில் இவள் வேறு எதற்கு இடையில் வந்து குழப்பி விடுகிறாள்.
வேறு யாராக இருந்தால் இந்நேரம் தட்டி கழித்து விடலாம். பெற்ற தாயே தனக்கு எதிரில் இருக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தான்.
ராஜியிடம் சொல்லி பார்த்தாயிற்று. அவளும் மசியவில்லை. ஏன் யாரும் என் நிலையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இதற்கு வேறு வழியே இல்லையா. விடிந்தால் கல்யாணம். நாளை காலை வரை தான் டைம். யோசி கார்த்திக். பேசாம யார்ட்டையும் சொல்லாம நைட்டோட நைட்டா சென்னை போய்டலாமா.
எஸ்.அது தான் கரெக்ட். இது என்னோட லைப். நான் ஏன் மத்தவங்களுக்காக யோசிக்கணும். கிளம்புடா கார்த்திக்.
உடுத்திய டீ ஷார்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் பர்ஸை மட்டும் எடுத்து கொண்டு வெளியே வந்தான்.
கார்த்திக் வெளியே வருவதை கண்ட அவன் தாய் அவனிடம் வந்து என்னடா மணி 11 ஆகுது இந்நேரம் எங்க போற.
அம்மா அது வந்து பக்கத்துல போயிடு வரேன்மா. பிரெண்ட்ஸ் எல்லாரையும் பாத்துட்டு வரேன்.
இந்நேரம் எங்கடா. அதான் எல்லாரும் நாளைக்கு கல்யாணத்துக்கு வருவங்கள்ல அங்க வச்சி பாத்துக்கலாம். இப்போ போய் நீ ரெஸ்ட் எடு.
அம்மா இல்லமா. பாலா எங்க. அவனை பாத்துட்டு வரேன்.
ப்ச். அவன் எங்க போக போறான். நான் தான் அவனை ஒரு வேலையா மண்டபம் வரை அனுப்பிருக்கேன். இப்போ வந்துடுவான். நீ முதல்ல ரூமுக்கு போ.
மண்டபத்துக்கு தான் போயிருக்கானா. சரிம்மா நான் அங்க போய்ட்டு அவனை பாத்துட்டு அவன் கூடவே வந்துடுறேன். சொல்லி விட்டு நிற்காமல் சென்றான்.
டேய் டேய் நில்லுடா. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுடா.
அப்போது வாசலில் பாலா டேய் மாப்ள எங்கடா போற. அம்மா கூப்பிடுறாங்கடா என்றான்.
கார்த்திக் கொலை வெறியுடன் நின்று திரும்பினான்.
அவனை பார்த்து சிரித்த முகத்துடன் என்ன மாப்ள நீ. அம்மா கூப்பிடுறாங்க. அதுவும் இல்லாம நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போ நீ எங்க அவசரமா போற. இங்க வா என்று கார்த்திக்கின் கையை பிடித்து கொண்டு இழுத்து வந்தான்.
அவனை வைத்த கண் வாங்காமல் முறைத்து கொண்டே அட சனியன் பிடிச்ச நாயே. எங்க இருந்துடா வருவீங்க. நல்ல டைமிங்கில வந்து என்ன மாட்டி விடுறீங்கடா. டேய் பாலா இந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு நாளைக்கு விழுற முதல் டெட் பாடி நீதான் டா. மவனே. மனதிற்குள் நினைத்து கொண்டான்.
கார்த்திக்கின் ரியக்ஷனை ஓரளவு புரிந்து கொண்டவனாக அவன் அருகில் சென்று என்ன மாப்ள. நான் ஏதும் டைமிங்கில சொதப்பிட்டேனோ. கரெக்டா தாண்டா வந்துருக்கேன். நீ வெளிய போகவும் உன்ன வந்து காப்பாத்திட்டேன்ல. அப்போ ஏன் மொறைக்கிற. சன்னமாக கேட்டான்.
நீ ரூமுக்கு வா. உன்ன வச்சிக்கிடுறேன். மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
அப்புறம் என்னடா அவனே வந்துட்டான். டேய் பாலா அவனை கூட்டிட்டு ரூமுக்கு போ. நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். போங்கடா ரெண்டு பெரும். இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்கு. போங்க சொல்லி விட்டு லட்சுமி சென்று விட கார்த்திக் பாலாவின் கழுத்தில் கையை போட்டு அவனை தன் மார்போடு இறுக்கி கொண்டு அவனை இழுத்தான்.
மாப்ள. நீதாண்டா என் உயிர் நண்பன். வா டா. உனக்கு இணைக்கு என்னோட மேரேஜ் ட்ரீட் இருக்கு. ரூமுக்கு வா. உனக்கு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு தரேன்.
மாப்ள மாப்ள நான் உன் பிரென்ட் டா. விற்றுடா . வீட்ல எல்லாரும் இருக்காங்க. யாராச்சும் பார்த்துட போராங்கடா.
யாரும் பாக்களை. நீ வா என்று ரூமுக்கு இழுத்து சென்று.கதவை தாளிட்டான்.
உள்ளே வந்த கட்டிலை அங்கும் இங்குமாக சுற்ற கார்த்திக் மறுமுனையில் துரத்தி கொண்டிருந்தான்.
மாப்ள நாளைக்கு இந்நேரம் உன் பொண்டாட்டிய இப்படி சுத்தி பிடிச்சி விளையாடுடா.என்ன விற்றுடா.
என்னது பொண்டாட்டியா. மவனே.முடிவே பண்ணிட்டியா. நான் பாட்டுக்கு ஜாலியா சென்னைல இருந்தவனை அதையும் இதையும் சொல்லி இங்க வரவச்சி கல்யாணம் பண்ணவா பாக்குறீங்க. மரியாதையா நின்று. மாட்டின செத்த.
மாப்ள சொல்றத கேளு. அம்மா தான் செய்ய சொன்னாங்க. நான் ஹெல்ப் பண்ணேன். அவ்ளோதான்.நீ எது கேக்கனும்னாலும் அம்மா கிட்ட கேளு.
முதல்ல நில்லுடா என்று ஒரே எட்டில் தாவி அவனை பிடித்து அவனை எட்டி உதைத்தான்.
பாலா வசமாக சிக்கி கொள்ள அம்மா அம்மா என கத்த தொடங்கினான்.
டேய் கத்தாதே. அவன் வாயை பொத்தினான்.
மம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
மீண்டும் அவன் வாயை பொத்திக்கொண்டு அடிக்க தொடங்கினான்.
ஒரு கட்டத்திற்கு மேல் திமிறி எழுந்த பாலா டேய் நிறுத்துடா. என்னடா. என்ன பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது. நான் எதுக்காக இதெல்லாம் பண்ணேன்னு தெரியுமா. என்று கார்த்திக்கை விட்டு விலகினான்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நானும் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப தான் ஓவரா போற.