04-04-2019, 07:29 PM
சிறுவனின் மனிதாபிமானம். வைரலாகும் புகைப்படம் !
மிசோரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் வளர்ந்து வந்த ஒரு கோழிக்குஞ்சின் மீது அவனது சைக்கிளை ஏற்றினான்.
செய்வதறியாத சிறுவன், உடனடியாக தனது சேமிப்பில் இருந்த 10 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளான்.
அந்த கோழிக்குஞ்சு இறந்தது அறியாமல் ஒரு கையில் பணமும் மறுகையில் கோழியுடன் இருந்த அவனை கண்ட ஊழியர் ஒருவர் அவனை புகைப்படம் எடுத்து நடந்ததை விவரித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். பதிவேற்றிய சில மணி நேரங்களில் அந்த விஷயம் 1 லட்சத்திற்கும் அதிகமான பகிர்வை அடைந்துள்ளது.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற வாக்கியத்தை நிரூபித்த அந்த சிறுவனின் செயலை பலரும் வெகுவாக பாராட்டினார்.