நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#60
நண்பனின் முன்னால் காதலி – 25

பின் விக்கி காரில் ஏறி கொண்டு ஓகே விக்கி இனி எதுனாலும் வீக் எண்டுல பாத்துக்குவோம் அதான் நல்லது என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டு காரை மெதுவாக ஓட்டினான் .

பின் காரில் உள்ள ஏப் எமை தட்டினான் அவன் ஏப் எம்மை தட்டிய நேரம் அதில் சுவாதி பேசி கொண்டு இருந்தாள் .வணக்கம் நேயர்களே இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் .நான் உங்க பேவரைட் ஆர் ஜே சுவாதி வணக்கம் சொல்லுங்க யார் பேசுறது என்றாள் .
ம்ம் இம்ச இந்நேரம் ப்ரோக்ராம் பண்ணுது அப்ப வீட்ல இருக்காதா .சரி அதுவும் நல்லதுதான் நிம்மதியா வீட்ல இருப்போம் என்று நினைத்து கொண்டு வண்டியை ஓட்டினான் .
பின் வீட்டிற்கு போனான் .ஆனால் நேற்று போல இன்று கதவை கோபத்தோடு திறக்கவில்லை .நல்ல சந்தோசத்தோடு விசில் அடித்து கொண்டே திறந்தான் .அவன் சந்தோசமாக இருக்க காரணம் அவன் யாரையும் போடா விட்டியும் அவன் கொள்கையில் இந்த முறை தவறமால் இருப்பது
பின் சுவாதி ரூமை பார்த்தான் .அது பூட்டி இருந்தது .சரி அவள பத்தி நமக்கு என்ன கவலை நம்ம டிவி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஹாலில் உக்காந்து அப்படியே டிவி பார்க்க ஆரம்பித்தான் ,அவன் ஒரு மியூசிக் சேனலை வைத்து விட்டு பாட்டு பாத்து கொண்டு இருந்தான் ,பின் அவன் நன்கு பாடலை ரசித்து பார்த்து கொண்டு இருந்த போது அவன் செல்லுக்கு ஒரு SMS வந்தது ,
அது சுவாதியிடம் இருந்து hai are you there ? and with a girl ? என்று வந்தது .அதை எடுத்து விக்கி no i am single and i am in home என்று பதில் sms அனுப்புனான் .பின் மெல்ல சுவாதி அவள் ரூம் கதவை திறந்து எட்டி பார்த்தாள் .அங்கு விக்கி இருப்பதை பார்த்து கதவை திறந்து வெளியே வந்தாள் .
ஹே ரூம்ல இருக்கும் போது ஏதோ டிவி சத்தம் கேட்டுச்சு அதான் நீ இருக்கியா இல்ல வேற யாரும் புகுந்துட்டான்களோன்னு நினைச்சுதான் SMS பண்ணேன் .மததபடி ஒன்னும் இல்ல ஏதும் உன்னையே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றாள் ,அதலாம் இல்ல ஹ நீ என்ன ரேடியோல இப்பதான் பேசிகிட்டு இருந்த எப்ப வந்த என்றான் .ஹ அது லைவ் கிடையாது நான் மதியம் பேசுன ரெகார்டட் ப்ரோக்ராம் என்றாள் .
ம்ம் ஓகே என்றான் மெல்ல .ஹ என்ன ரொம்ப டல்லா இருக்க இன்னைக்கும் பப் க்ளோஸ் பண்ணிட்டாங்களா என்றாள் .அப்படி எல்லாம் இல்ல பப் எல்லாம் திறந்து தான் இருந்துச்சு என்றான் .அப்புறம் பொண்ணு கிடைக்கலையா என்றாள் .பொன்னும் கிடைச்சுச்சு நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன் என்றான் .
பின் விக்கிக்கு பசி எடுத்தது அவன் வரும் வழியிலும் எங்கும் சாப்பிட வில்லை அதனால் அவன் பசியை போக்க எழுந்து போயி பிரிட்ஜில் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க போனான் .
அவன் அந்த பக்கம் போனதும் சுவாதி ஹாலுக்கு வந்தாள் விக்கி if you dont mind நானும் கொஞ்ச நேரம் டிவி பாத்துகிறேன் .சும்மா லேப்டாப் பாத்து பாத்து கிட்டு இருக்க போர் அடிக்குது என்றாள் .ஒகே சுயர் என்றான் .பின் பிரிட்ஜில் இருந்து பழைய பழங்கள் ஒன்று இரண்டை எடுத்து தின்னு கொண்டு இருந்தான் .அதை பார்த்த சுவாதி டேய் உனக்கு பசிச்சா கிச்சன்ல சாப்பாடு இருக்கு எடுத்து சாப்பிடு என்றாள் .
விக்கிக்கு பசி இருந்தாலும் அவள் சாப்பாட்டை எடுத்து சாப்பிட மனம் வரல இல்ல பசிக்கல சும்மாதான் ப்ருட்ஸ் சாப்பிடறேன் என்றான் .ஹ நான் ஏதும் சாப்பட்ட வச்சு ப்ளாக் மெயில் பண்ண மாட்டேன் நீ சும்மா சாப்பிடு நான் வாடைகைல கழிச்சுகிறேன் என்றாள் சிரித்து கொண்டே .அதை கேட்ட விக்கி ஒகே என்ன வச்சு இருக்க என்றான் .சோறுதான் என்றாள் .என்னது சோறா என்றான் .
ஆமா நைட் சோறு சாப்பிட்டாதான் வயிறும் நிறையும் ,தூக்கமும் நல்லா வரும் என்றாள் .விக்கிக்கு அவள் சொன்னது எங்கயோ கேட்டது போல இருந்தது .ஆமாம் அவன் வீட்டில் இருந்த போது அவன் அம்மாவிடம் நைட் ஏன் சோறு வச்ச என்று திட்டிய போது அவன் அம்மா சொன்ன வார்த்தை சோறு சாப்பிட்டா நல்ல வயிறும் நிறையும் தூக்கமும் வரும் அதனால சாப்பிடு சாமி என்று அவன் அம்மா சொன்ன அதே வார்த்தைகள் .
விக்கி அதை நினைத்து கொண்டே நின்று கொண்டு இருந்தான் ,பின்னர் விக்கி விக்கி என்று சுவாதி கூப்பிடவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .ஏன் சோறு பிடிக்காதா என்றாள் .அவன் அப்படி இல்ல சோறு எங்க இருக்குன்னு சொல்லு நான் சாப்புடறேன் என்றான் .அந்த கிச்சன்ல ஹாட் பாக்ஸ்ல இருக்கு என்றாள் .பின் விக்கியாக போயி சோற்றை தட்டில் வைத்து சாப்பிட்டு கொண்டே கிச்சனுக்கு வந்தான் .
சுவாதி ஏதோ ஒரு ஆங்கில சேனல் வைத்து படம் பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் ஹாலுக்கு வந்து அவளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி உள்ள சோபாவில் உக்காந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் .பின்னர் அவனை பார்த்து சுவாதி கேட்டாள் விக்கி சாப்பாடு பரவலையா என கேட்டாள் .ம்ம் சாப்பிடும் போது பேச கூடாது .சாப்பிட்டு முடிச்சுட்டு சொல்றேன் என்றான் .பின்னர் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .அவன் தட்டை பார்த்தாள் .அவன் வின்ஜனம் இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தான் .
டேய் விஞ்சனம் வச்சு சாப்பிடுடா என்றாள் .விஞ்சனமா அது எங்க இருக்கு என்று பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டு இருந்தான் .இரு நானே போயி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு சுவாதி போயி அவனுக்கு விஞ்சன்மும் ஹாட் பாக்ஸ் மற்றும் ரச பாத்திரமும் எடுத்து வந்து வைத்தாள் .பின் விக்கி அதை அவனே எடுத்து சாப்பிட்டான் .
யே இது என்ன காய் என்றான் .அவர காய் என்றாள் .காய் எல்லாம் நான் வீட்ல வச்சுருக்கவே இல்லையே எப்ப வாங்குன என கேட்டான் .நீ பப்க்கு போனப்ப வீட்ட பூட்டாம போயிட்ட நாந்தான் போயி சமையல் பண்றதுக்காக போயி வாங்கிட்டு வந்தேன் .ஒகே என்று சொல்லி விட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தான் .டேய் ரசம் இருக்கு எடுத்துக்கோ என்றாள். சரி என்று சொல்லி விட்டு நல்லா சாப்பிட்டான் .ஹாட் பாக்சில் இருந்த சோறு முழுதையும் காலி பண்ணினான்
சாப்பிட்டு முடித்து விட்டு வந்து உக்காந்தான் .என்ன சாப்பாடு ஓகேவா என்று கேட்டாள் .உண்மையை சொல்ல போனாள் விக்கி ரொம்ப நாள் கழித்து சோறே அன்றுதான் சாப்பிட்டு உள்ளான் .என்னதான் அவனிடிம் பணம் நிறைய இருந்தாலும் மும்பையில் அவன் எப்போதும் துரித உணவுகளான பிசாவும் பர்கரும் இல்லை பிரைட் ரைஸ்ம் தான் சாப்பிட்டு வந்து இருக்கிறான் .எப்போதுவாதுதான் வள்ளி வீட்டிற்கு போயி சோறு சாப்புடுவான் ,இன்று சுவாதி அவன் அம்மா வார்த்தைகளை மட்டும் அல்ல
ஒரு விளம்பரத்தில் காட்டுவது போல அவன் அம்மா சமையலையும் நினைவு படுத்தி விட்டாள் .அன்றுதான் ரொம்ப நாள் கழித்து அவன் வயிறு மட்டும் அல்ல மனதும் நிறைந்து விட்டது .இருந்தாலும் சுவாதியை நேரடியாக புகழ விக்கிக்கு மனசு வர வில்லை .பரவல ஏதோ இருக்கு என்றான் சாதாரணமாக .ஒ அவேறேஜ் ஆச்சும் இருந்துச்சா என கேட்டாள் .அடி பாவி சூப்பரா இருந்துச்சுடி என்று சொல்லாலம் என்று நினைத்தான் .ஆனால் ம்ம் ஆமா அவேறேஜா தான் இருந்துச்சு குறிப்பா ரசமும் அந்த காயும் ரொம்ப சுமார் என்றான் .ஆனால் விக்கி அந்த ரெண்டையும் தான் மிகவும் ரசித்து சாப்பிட்டு இருந்தான் .
சாரி விக்கி கொஞ்சம் அவசரத்துல சமைச்சது அதனால் தான் அப்படி இருக்கு நான் நாளைக்கு நல்லா பண்றேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹலோ நீ என்ன என் பொண்டாட்டியா ஏதோ ஒரு அவசரத்துக்கு சாப்பிட்டேன் டெய்லி லாம் சாப்பாடு போட்டு என்னையே மயக்கலாம்னு பாக்காத விக்கி சாப்பாடுக்கு எல்லாம் மயங்குற ஆள் இல்ல என்றான் .
ஐயோ இவர் பெரிய மன்மதன் இவர மயக்க பாக்குறோம் ஏதோ பாவம் ஒரு பிரண்டா நினைச்சு வீட்டு சாப்பாடு கொடுப்போம்ன்னு பாத்தா ரொம்பதான் பிகு பண்றே போடா எனக்கும் வேல மிச்சம் என்றாள் .
அவனும் போடி என்று சொல்லி விட்டு தூங்க போனான் .ஆனால் அவன் ரூமுக்கு போயி அப்பா ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் நல்லா சாப்பிட்டு இருக்கோம் .பரவல இம்சை நல்லாத்தான் சமைக்குது .என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஏப்பம் விட்டுவிட்டு தண்ணியை குடித்து விட்டு தூங்கினான் .ரொம்ப நாள் கழித்து அன்றுதான் நல்லாவும் தூங்கினான் .
அடுத்த நாள் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது .முந்தைய இரவில் நடந்தை எல்லாம் நினைத்து பார்த்தான் .பப்பில் அவன் செக்ஸ் ஆசைக்கு என்று ஒரு பெண் கிடைத்தும் அவளை தன் கொள்கைக்காக விட்டு கொடுத்தது வீட்டிற்கு வந்து சுவாதி சாப்பாட்டால் அவன் அம்மா அவனுக்கு ஞாபகம் வந்தது என்று எல்லாத்தையும் நினைத்து பார்த்தான் .
எல்லாவற்றிற்கும் மேலாக அன்று அவன் யார் கூடவும் உடலறுவு கொள்ளா விட்டாலும் நிம்மதியாக இரவு தூங்கியாதல் ஒரு வித சந்தோசத்தோடு எழுந்தான் .பின் சவரில் நன்கு பாட்டு பாடி கொண்டே குளித்து விட்டு உற்சாகத்தோடு ஆபிஸ் கிளம்பினான் .அப்போது அவன் கிளம்பும் போது சுவாதி கூப்பிட்டாள் .அதனால் எரிச்சலடைந்து ஏன் ஆபிஸ் போறப்ப கூப்பிடுர என்றான் ,அது வந்து என்று சுவாதி இழுத்தாள் .
இங்க பாரு நைட் நீ கொடுத்த சாப்பாடுக்காக எல்லாம் உன்னையே என் கார்ல உன் ஏப் எமுக்கு கொண்டு போயி விட முடியாது என்றான் ,நான் அத கேக்க வரலடா என்றான் .
பின்ன என்ன கேக்க வந்த என்றான் .அது எப்ப ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வருவ என கேட்டாள் .நீ என்ன என் பொண்டாட்டியா உனக்கு நான் எப்ப வருவேன்னு சொல்லி கிட்டு இருக்க என்றான் ,டேய் லூசு அதுக்கு இல்லடா வீட்டுக்கு கீ உன்கிட்ட மட்டும்தான் இருக்கு அதான் நீ வர டைத்துக்கு வீட்டுக்கு வர என்றாள் .
அதலாம் எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது .நீ முன்னாடி வந்த வெளிய உக்காந்து வெயிட் பண்ணு என்றான் .ஓகே விக்கி நான் வெயிட் பண்றேன் நீ ஆபிஸ் போ என்றாள் .
பின் இருவருமே கிளம்பி வெளியேறினார்கள் .விக்கி காரில் உக்காந்து இருந்தான் .சுவாதி நடந்து கொண்டு இருந்தான் .காரில் உக்காந்து யோசித்தான் சே நைட் அவ போட்ட சோறுக்காக வாச்சும் அவள திட்டாம இருந்து இருக்காலம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .
உண்மையில் விக்கியிடிம் வீட்டிற்கு ரெண்டு கீ வைத்து இருந்தான் .ஆனால் வேண்டுமென்றே தான் அவன் சுவாதியிடம் பொய் சொல்லி அதை தரமால் வைத்து இருந்தான் .
பின்னர் காரை மெல்ல மூவ் பண்ணி அவ கிட்ட போயி நிப்பாட்டி ஆரன் அடித்தான் .பின் இவன் கார் கண்ணாடியை திறந்து அவளை கூப்பிட்டான் .இங்க பாரு என்னால உன்னையே கார்ல எல்லாம் ஏத்தி கொண்டு போயி விட முடியாது ஆனா ஸ்பேர் கீ தரேன் என்றான்
அவள் அடப்பாவி வச்சுகிட்டே தான் பொய் சொன்னாயா என்று நினைத்து கொண்டு அவனிடிம் தேங்க்ஸ் விக்கி என்று சும்மா சிரித்து கொண்டு வாங்கினாள் .இங்க பாரு வீட்டு சாவியவே கொடுத்துட்டேன்ன்னு என் கிட்ட வேற ஏதும் நீ எதிர் பாக்க கூடாது சரியா என்றான் .
சரி சரி உன்கிட்ட ஒன்னும் எதிர் பாக்கல நீ கிளம்பு என்றாள் .அவனும் கார் கண்ணாடியை ஏற்றி விட்டு வேகமாக போனான் .சுவாதியும் அவள் வழக்கம் போல ரோட்டிற்கு போயி ஆட்டோ பிடித்து போனாள் .
தொடரும்
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 04-04-2019, 06:09 PM



Users browsing this thread: 58 Guest(s)