நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#72
அவளை கிருஷ்ணவேணி பொன்னிம்மா என்று தான் அழைக்கிறாள்.

பொன்னிக்கும் அவள் மீது அந்த வீட்டினரைப்போன்றே ஒரு பாசம் உண்டாகியிருந்தது.
பொன்னியும் வனிதாமணியும் தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பித்தனர்.
சிறியவர்கள் இருவரும் ஊர் சுற்றக் கிளம்பினர்.

கேந்திரன் வீட்டுக்குள் நுழைந்தான்.

வீடே அமைதியாக இருந்தது.

யுகேந்திரன் இருந்திருந்தால் எப்போதும் ஏதாவது கலகலத்துக்கொண்டேயிருப்பான். இப்போது அந்த சத்தம் இல்லாதது என்னவோ போல் இருந்தது. 

அவன் வீட்டுக்குள் நுழைவதை சமையல் அறைக்குள் இருந்தாலும் எப்படித்தான் கண்டுகொள்வாரோ? வனிதாமணி அவனுக்குக் குடிக்க கொறிக்க என்று ஏதாவது சமயத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வந்து கொடுப்பார்.

அத்துடன் இப்போது கிருஷ்ணவேணியும் சேர்ந்துகொண்டுள்ளாள்.

அவர்கள் யாரும் இல்லாத வீட்டில் இருப்பதே என்னவோ போல் இருந்தது.

ஹோட்டலுக்கு போன் செய்து தனக்கும் தந்தைக்கும் உணவினை கொண்டுவரச்சொன்னான்.

வீட்டில் மற்ற வேலைக்கெல்லாம் வேலையாட்கள் இருந்தாலும் சமைலை வனிதாமணி தானேதான் செய்வார்.

அதனால் அதற்கென வேலையாள் யாரும் இல்லை. வனிதாமணி ஊருக்குச் சென்று தங்குவதும் அரிது. இப்போதுதான் சிறியவர்களுக்கு முன்பே விடுமுறை வந்திருப்பதால் அவர்களை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

இதுவரை அவர்கள் அனைவரும் சேர்ந்தேதான் செல்வர்.
ரவிச்சந்திரன் உள்ளே நுழையும் நேரத்தில் உணவும் வந்துவிட இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
மற்றவர்களுக்கு தீபாவளிக்கு புத்தாடை எடுத்து வரச்சொல்லி தன்னிடம் மனைவி சொல்லிவிட்டதாக அவர் கூறினார்.

“நீதான் நல்லா பார்த்து எடுப்பியே. நாளைக்கு போய் எடுத்துட்டு அப்படியே ஊருக்குப் போயிடலாமா?”

“சரிப்பா.”

ரைச் சுற்றிவிட்டு கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் தங்கள் வீட்டுக்கு வர அப்போதுதான் மகேந்திரன் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான்.

அவர்கள் முகம் மலர்ந்தது.

இறங்கி வந்த மகேந்திரன் அவர்கள் கைகோர்த்து நின்றிருந்ததைப் பார்த்தான்.

ரவிச்சந்திரன் அவர்களைப் பார்த்து தலையாட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

“இப்படித்தான் ஊரைச் சுற்றிவிட்டு வர்றீங்களா?”

அபஸ்வரமாய் ஒலித்தது சாருலதாவின் குரல்.

‘இவள் எங்கே இங்கே வந்தாள்?’

யுகேந்திரன் சலித்துக்கொண்டான்.

அவள் தங்களைப் பார்த்துதான் ஏதோ கேட்டாள் என்ற ஞாபகம் வர

“என்ன சொன்னே சாருக்கா?”

என்று வேண்டுமென்றே அவளை அக்கா என்றழைத்துக்கேட்டான்.

அதிலேயே அவள் முகம் கருத்தது. இருந்தாலும் அத்துடன் விட்டுவிட்டால் அவள் சாருலதா அல்லவே.

அவர்களது குற்றத்தை மற்றவர்களிடம் சுட்டிக்காட்ட கிடைத்த இந்த வாய்ப்பை நழுவவிடலாமா?

“இப்படித்தான் ஊரைச் சுற்றிவிட்டு வர்றதான்னு? கேட்டேன்.”

என்றாள் மீண்டும் அழுத்தமாய்.

“அப்படி என்ன தப்பு செய்திட்டோம்?”

“நீங்க நம்ம ஊரில் என்ன கொட்டம் அடிச்சாலும் யாரும் கண்டுக்கப்போறதில்லை. இது கிராமம். இங்கே ஆணும் பொண்ணும் கைக்கோர்த்துக்கிட்டு சுற்றினா மத்தவங்க நம்ம குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க? அவளுக்குத்தான் நம்ம குடும்பத்து மேல் அக்கறை இல்லைன்னா உனக்குமா?”

மகேந்திரன் பார்த்த உடனே இருவரும் கைகளை விலக்கிக்கொண்டிருந்தனர். இப்போது மீண்டும் அழுத்தமாய் அவளது கையைப் பற்றினான் யுகேந்திரன்.

சாருலதாவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் கிருஷ்ணவேணி கையைப் பற்றியவாறே உள்ளே சென்றான்.

“பார்த்தீங்களா அத்தான். அவ நம்ம குடும்பத்து மானத்தை வாங்காம விடமாட்டா போல. நம்ம யுகேந்திரன் இன்னும் விளையாட்டுப்பிள்ளையாவே இருக்கான்.”

மகேந்திரன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.



‘ஏதாவது சொல்றானா பாரு. அப்படியே அழுத்தம். இவன் அவளைப் பத்தி என்ன நினைக்கிறான்னு தெரியலையே?’
தனக்குள் புலம்பிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 04-04-2019, 05:49 PM



Users browsing this thread: 30 Guest(s)