Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
போலி அறிக்கை! - சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகர் கைது

உதவி ஆய்வாளர் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[Image: handcuffs_approved_(3)_11079.jpg]

தமிழக காவல்துறையில் விரல் ரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியானது. இதில் தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றும் அருணாச்சலம் என்பவர் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் சரியாக பதிலளித்தும் இவருக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவில்லை. ``சரியான பதிலளித்தும் எனக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவில்லை. எனக்குத் தகுந்த மதிப்பெண்கள் வழங்கத் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐஐடி பேராசிரியர்களிடம் அறிக்கைப் பெற்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மனுதாரர் அளித்த விடை தவறு என அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உடனே அருணாச்சலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் பெற்ற ஒரு தகவலின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில்  டி.மூர்த்தி என்பவர் சென்னை ஐஐடியின் கணிதப்பிரிவில் பணியாற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். 
இந்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் அளித்த கடிதத்தை சமர்ப்பித்தார். அதில்  ‘இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தை ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எதற்காகப் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜி.வி.குமார், டி.மூர்த்தி இவர்கள் யார். இதுதொடர்பாக ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான பதிலளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.
[Image: higu_11500.jpg]

இதுதொடர்பாக ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர்தான் டி.மூர்த்தி ஐஐடி கணிதப் பேராசிரியர் என அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரிடம் இருந்துதான் அறிக்கைப் பெற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் முறைகேடு செய்தது தெரியவந்ததையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ள ஜி.வி.குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். டி.மூர்த்தி கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எனத் தெரிகிறது. ஐஐடி பேராசிரியரிடம் அறிக்கைப் பெறாமல் பள்ளி ஆசிரியரிடம் அறிக்கை பெற்று சமர்ப்பித்துள்ளனர். 
 
முன்னதாக செவ்வாய்க்கிழமை வழக்கின் விசாரணையின்போது டி.மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குமார் தன்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பேசினார். கணித ஆசிரியரான தன்னை ஐஐடி பேராசிரியர் போல் ஜோடித்து இந்த வழக்கில் சேர்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குமார் மோசடி செய்த நிலையில், விடை சரிபார்த்த காரணத்துக்காகக் காவல்துறையினர் மூர்த்தியை துன்புறுத்தக்கூடாது என நீதிபதி தெரிவித்தார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 04-04-2019, 05:36 PM



Users browsing this thread: 104 Guest(s)