04-04-2019, 09:55 AM
MI vs CSK : யானைக்கும் அடி சறுக்கும்.. சென்னை படுதோல்வி.. தொடர் வெற்றிக்கு மும்பை முற்றுப்புள்ளி
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் பெகண்ட்ராஃப் , ராகுல் சஹார் சேர்க்கப் பட்டுள்ளனர். சென்னையில் சாண்ட்னருக்கு பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.
170 ரன்கள் குவிப்பு
க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது. சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அம்பத்தி ராயுடு டக்
இதையடுத்து, சென்னை அணி பெருத்த எதிர்பார்ப்புடன் களம் கண்டது. தொடக்கத்திலே அந்த அணிக்கு அதிர்ச்சி. அம்பத்தி ராயுடு டக் அவுட்டாகி வெளியேறினார்.
வாட்சன், ரெய்னா காலி
அவரை தொடர்ந்து வாட்சனும் 5 ரன்களில் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ரெய்னாவும், ஜாதவும் கைகோர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சின்ன தல ரெய்னா, பொல்லார்டின் அற்புத கேட்சால் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி
மும்பை:நடப்பு சாம்பியன் சென்னை அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை ஐபிஎல் தொடரின் அசத்தல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியிருக்கிறது.மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் பெகண்ட்ராஃப் , ராகுல் சஹார் சேர்க்கப் பட்டுள்ளனர். சென்னையில் சாண்ட்னருக்கு பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.