Romance சிவகாம சுந்தரி பார்மசி (completed) + pdf link
#7
காரிலிருந்து இறங்கிய டேவிட் என்னை நோக்கி கையை அசைத்தான். பதிலுக்கு நானும் “ஹாய்.. எனகையை அசைத்தேன். கடையின் கவுண்டர் பகுதிக்கு வந்து இந்தப்பா பிரிஸ்கிரிப்சன். வழக்கம் போல அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தனித்தனியா பேக்கிங் பண்ணிடு. இன்சுலின் அதிலேயே எழுதியிருக்கு,. ஒரு இருபது இன்சுலின் சிரன்ச் கூட வைச்சுடு” என்று பிரிஸ்கிரிப்சனை தந்துவிட்டு சென்றான். நடந்ததை எல்லாம் நான் மறந்துவிட்டது போல “சிவகாமசுந்தரி இந்த பிரிஸ்கிரிப்சன் ஸ்டீபன் சாருக்கு நீ எடு. நான் ஸ்டெல்லா மேடமுக்கு எடுக்கறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் குடும்பத்திற்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் சர்க்கரை வியாதி வந்தவர்கள். ஒரு காலத்தில் ராகியும், கேழ்வரகினையும் தின்று கொண்டிருந்த மக்களிடம் ஒரு படி அிரிசியை அரசே தந்து அரிசியின் சுவையை காட்டியது. பிறகு மக்கள் அரிசியை மட்டுமே பிரதான உணவாக கொண்டுவிட்டார்கள். இப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து எல்லாம் விலக ஆரமிருத்திருக்கிறார்கள்.
ஆனால் மருத்துவ உலகில் சர்க்கரை வியாதி என்பது ஒரு பணம் கொட்டும் வியாதி. காய்ச்சல், சளி என வந்தால் மூன்று நாட்களே அதிகபட்சம் மருந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சர்க்கரை வியாதி ஒரு முறை வந்துவிட்டால் சாகும் வரை மருந்துதான். தொடக்கத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் அளவிற்காவது மாத்திரை வாங்க வேண்டும். நாளாக நாளாக சர்க்கரை வியாதி இந்த மாத்திரைக்கு கட்டுப்படாது. பிறகு பவர் ஏற்றப்பட்ட மருந்துகள் வாங்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாத்திரைகள் எல்லாம் வேலைக்கு ஆகாமல் கொஞ்சம் இன்சுலின் ஊசி ஏற்ற வேண்டும். பிறகு இன்சுலின்தான் வாழ்க்கையே..
“அண்ணா.. டையாமேக்ரான் 100 இல்லையே..”
“இன்னைக்குதான் கோயம்புத்தூருக்கு ஆர்டர் போட்டிருக்கேன் சிவகாமி. அதை விட்டுட்டு மத்ததை எடுத்துவை. டேவிட்க்கிட்ட கேட்டுட்டு டையாமேக்ரான் எஸ்ஆர் மேக்ஸை வைச்சிடலாம். மாத்திரையை பாதியா ஒடச்சு சாப்பிட்டா ஒன்னும் பண்ணாது. “
“சரிண்ணா.” என சிவகாமசுந்தரி எல்லா மாத்திரைகளையும் எடுத்துவைத்தாள். நானும் என் பங்கு மாத்திரைகளை எடுத்துவைத்துவிட்டு எதற்கும் அருகிலுள்ள மாமா கடையில் டையாமேக்ரான் இருந்தால் வாங்கி கொடுத்துவிடலாமென கடையை சிவகாமசுந்தரியிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு சென்றேன்.
நான் திரும்பி வந்தபோது என் கடையின் டேவிட்டும் சிவகாமசுந்தரியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் என்னுடையவள் என்பது போல எனக்கு கோவம் வந்தது. “ஏய்.. கடை கல்லாவுல இல்லாமல எதுக்கு வெளியே வாரே” என்று கடிந்து கொண்டே கடைக்குள் சென்றேன். எனக்குப் பிறகு சிவகாமசுந்தரி உள்ளே வந்து நின்று கொண்டாள். நான் டையாமேக்ரான் மாத்திரையையும் உள்ளே வைத்து அந்த பேக்கை டேவிட்டிடம் தந்தேன்.
“அவள திட்டாதிங்க. நான்தான் போர்ஸ் பண்ணி வெளியே வர வைச்சு பேசிக்கிட்டு இருந்தேன். அவ வெளியே வர மாட்டேனுதான் சொன்னா” என டேவிட் அவளுக்கு பரிந்து பேசினான். என்னால் டேவிட்டை திட்டமுடியாது. அவன் ரெகுலர் கஸ்டமர். வீட்டில் இரண்டு சர்க்கரை வியாதிக்காரர்களை வைத்திருப்பவன். பணம் காய்க்கும் மரம். “அதெல்லாம் ஒன்னுமில்லை டேவிட். கடைக்கு உள்ளிருந்தே பேசனும். இந்தக்காலத்தில் நாமதான் ஜாக்ரதையா இருக்கனும். அதான் சொன்னேன்..”
“சரி நான் வாரேன்..” என என்னிடம் கொடுத்த பணத்திற்கு மீதம் வாங்கிக் கொண்டு சென்றான். போகும் போது சிவகாமசுந்தரிக்கும் அவன் பாய்” என சொல்லிப் போனது சற்று எரிச்சலாக இருந்தது. அவன் சென்றதும் சிவகாமசுந்தரியிடம் “இதெல்லாம் என்ன புதுபழக்கம் சிவகாமி. உள்தாப்பா போட்டுக்கிட்டு இருக்கிற வரைக்கும் தான் கல்லாவுல இருக்கிற பணம் தப்பும். யாராவது இரண்டு பேர் பட்டுனு வந்து நீ வெளியே நின்னு பேசிக்கிட்டு இருக்கிறப்ப உள்ளே வந்துட்டா.. கல்லாவுல இருக்கிற பணம் நம்மோடது இல்லை. பகிரங்கமாக களவு போயிடும். நீ இருக்கிற தெகிரியத்துலதான் நான் கல்லாவ பூட்டாம போறேன். புரிஞ்சுதா” என்றேன். அவள் கண்கள் லேசாக கலங்க… “இனிமேல வெளியே போக மாட்டேண்ணா” என்றாள். நான் அவளை அருகே இழுத்து அணைத்து. “ச்ச்சீ.. இதுக்கெல்லாம் அழுவாங்களா.. நான் நல்லதுக்குதான் எச்சரித்தேன்” என்று சமாதானம் செய்தேன்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: சிவகாம சுந்தரி பார்மசி - by sagotharan - 10-04-2021, 01:46 PM



Users browsing this thread: 3 Guest(s)