Romance செங்கொடி தோழர்கள் (சிறுகதை)
#3
ஜேக்கப் அடுத்த பேச்சை ஆரமிக்க.. நான்கு பேரும் பேசிக்கொண்டே இருந்தனர். மாடனுக்கு என்னப்பின் பேச்சும், இயல்பும் பெரிய அளவில் ஈர்ப்பு தந்தது. “தோழர்களே.. நான் விடை பெறுகிறேன்” என செல்வம் கிளம்பினான்.
“இன்னைக்கு எங்கன ஜீவதம்.” என்று மாடன் கேட்டான். “நான் சொல்லல என்னப்,. காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணிவரைக்குமே இந்த காம்ரேட் சட்டையெல்லாம். இரவு வந்தால் அவரவர் வீடுகளில் தனித்தனி மனிதர்களாக உறங்கவே எல்லோருக்கும் விருப்பம்.” என்றான் ஜேக்கப்.
“சரி வாரும் ஜேக்கப். எங்காவது செல்வோம்” என்று என்னப் எழுந்தாள். ஜேக்கப்பும் அவளோட எழுந்து நின்றான்.
“அட.. எங்கப்பா தங்க போறீங்க. அதைதான் கேட்டேன்.” என்று மாடன் எழுந்து அவர்களை மறித்தான்.
“உங்க வீட்டுக்கு போலாமா” என்று என்னப் கேட்டாள். சரியென தலையாட்டினான் மாடன். நடராஜா சஸ்வீஸ்தான் என்னப்பே. என்று மூவரும் நடந்தனர். ஜேக்கப்தான் முன்னே நடந்தான். ஒவ்வொரு ஊரிலும் தங்குவதற்கு ஏற்ற ஒரு இணைப்பை அவன் ஏற்படுத்தி இருந்தான்.

இரண்டு குறுக்குச் சந்தில் நடந்து ஒரு திருப்பத்தில் முடிவடையும் சாலையில் நடந்தார்கள். “ஜேக்கப் மாடனுடைய வீட்டின் முன் நின்றான். கேட்டை தள்ளுங்கள் ஜேக்கப். திறந்துதான் இருக்கு” என்றான் மாடன். ஒரு நடுத்தரவர்க்க குடும்பம் இருக்க போதுமானது. காம்பௌண்ட் கேட்டை கடந்தால் வனம் போல தோற்றம்தரக்கூடிய வகையில் அத்தனை செடி கொடிகள். ஒரு பெரிய ஹால், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை என எல்லாமும் இருந்தது.
“ஸ்டாலினை எங்கன காணோம்” என்று கண்களை இங்கும் அங்கும் தேடினான் ஜேக்கப்.
“அட.. அவனுக்கு இது உற்சாக காலம். எங்கனையாவது ஒரு பெண்குட்டியை கரைக்ட் பண்ணிக்கிட்டு இருப்பான்” என்று சிரித்தான் மாடன்.
ஸ்டாலின் மாடனின் செல்ல நாய். இரண்டு முறைக்கும் மேல் ஜேக்கப் வந்ததால் அவனுக்கு ஸ்டாலினை நன்றாக தெரியும்.
“வெல்.. பெஸ்ட் ஹவுசில் இருக்கிறீங்க மாடன்” என்று சொன்னாள் என்னப். மாடனுக்கு பெருமிதமாக இருந்தது. ஒரு மானை வேட்டையாடும் புலியின் கொடூர ஓவியம் ஹாலில் இருந்ததை கண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜேக்கப் அவளுடைய அருகே சென்று “என்னவாச்சு என்னப்” என்று அவளுடைய தோளைத் தட்டிக் கேட்டான்.
“புலிகள் எல்லாம் மானை வேட்டையாடுவதற்காகவே படைக்கப்பட்டிருக்குல்ல ஜேக்கப்” என்று பெருமூச்சுவிட்டாள். ஜேக்கப் அவளுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டு. மானெல்லாம் புலிகளின் உணவல்ல என்னப். சில தவறி உணவாகிடும். மற்றவை மானாய் வாழ்ந்திடும் என்னப்..” என்று அவளை சமாதனம் செய்து கொண்டே ஒரு கோல்ட் பில்டர் சிகரெட்டை பற்ற வைத்து அவளிடம் தந்தான்.
அதனை கையில் வாங்கி புகைத்தாள். கொஞ்சம் அவளுடைய மனம் அமைதியானது.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: செங்கொடி தோழர்கள் - by sagotharan - 10-04-2021, 12:37 PM



Users browsing this thread: 1 Guest(s)