10-04-2021, 12:36 PM
செவ்வணக்கம் தோழர்.. என்ற பெருங்குரல் வந்த திசையில் மாடனும், செல்வமும் திரும்பினர். அங்கே ஜேக்கப்பும் அவனுக்கு அருகே ஒரு சுடிதாரில் ஒரு பெண்ணும் இருப்பதைக் கண்டனர். காஞ்சிவரம் தோழர் லெனின் அரங்கில் அந்தக்கூட்டம் ஏறக்குறைய முடிந்திருந்தபோது,. இந்த சந்திப்பு நடந்தது.
“செவ்வணக்கம் ஜேக்கப்பே. ஏதே மூன்று மாதங்களா ஒரு சங்கதியும் இல்ல” என்று ஜேக்கப்பைப் பார்த்து மாடன் கதைத்தான்.
“எடே எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன். மலையாத்தில் கதைக்குனு நினைச்சுக்கிட்டு சாகடிக்காதேனு.. திருந்தவே மாட்டியாலே”
“அ..ஆ.. இந்தக் கோவத்தைப் பார்த்து எம்புட்டு நாளாச்சே. அதான்…” என்று சொல்லிக் கொண்டே செல்வம் ஜேக்கப்பின் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தான். எப்படியும் முப்பது வயதிற்குள் இருக்கும். முகத்தில் பெரிய சோடபுட்டி கண்ணாடியைப் போட்டிருந்தாள். அதிலும் அவள் கண்கள் பெரியதாக தெரிந்தன. நெற்றியில் பொட்டிலில்லை. ஆனால் மூக்கில் சின்னதாக ஒரு மூக்குத்தி மின்னியது. மூக்குத்தியில் கல்லோ, வைரமோ மின்னயது. முடியை கொத்தாக பிடித்து குதிரைவால் சடை போட்டிருந்தாள். ஏதோ பள்ளி சிறுமியைப் போலவே அவளுடைய முடி இருந்தது. சிகப்பும், வெண்மையும் கலந்திருந்த ஒரு டாப்பை போட்டிருந்தாள். ஜெக்கின்ஸ் அவளுடைய அந்த டிரஸ் கோட்டிற்கு சரியாக இருந்தது. ஒரு துணிப்பை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அது நிச்சயம் மார்க்கசியம் கொடுத்த துணிவாக இருக்கும். அதற்குள் மூலதனம் புத்தகமோ, சில மார்க்கசிய நூல்களோ இருக்கும் என தோன்றியது.
1970 களில் இருந்து இப்படி ஜோல்னா பையோடு திரியும் பல இளைஞர்களுக்கு சமூகம் நக்சலேடுகள் என்று பெயர் வைத்திருந்தது. நிறைந்த படிப்பும், சமூகத்தின் மீதான அக்கரையும், புத்தம் புதிய உலகை தன்னுடைய வழியில் படைக்க வேண்டும் என்ற வேட்கையும், கற்ற கல்விக்கு கிடைத்திடாத வேலையும், பஞ்சமும் அந்த ஜோல்னா பைக்குள் இருந்ததை சமூகத்தில் யார் கண்களுக்கும் புலப்படாது.
“எடே.. இது என்னப் தோழர்” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து அறிமுகம் செய்தான். மாடனும், செல்வமும் கைகளை நீட்டி அவளிடம் இருந்து கைகுழுக்களை எதிர்ப்பார்த்திருந்தனர். முதலில் மாடனின் கையைப் பிடித்தாள். கரடுமுரடான கைகள் என்பதை மாடன் உணர்ந்து திகைத்தான். செல்வத்திடம் கை கொடுக்கும் போது அவனுக்கும் அதே உணர்வு தோன்றியிருக்க கூடும்.
“அதென்ன என்னப் தோழர். பேரே புதுசா இருக்கே.. “ என்றான் செல்வம்.
“அது வந்து.. “ என்று ஜேக்கப் தயங்கி இழுக்கும் போது என்னப் பேசத்தொடங்கினாள்.
“அது ஒன்னுமில்லை தோழர். நான் தேனிப்பக்கம். என்னோட அப்பாவுக்கு பையன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இல்லையில்லை பேராச. விடாம டிரை பண்ணியத்தில் நான் ஆறுவது பெண் குழந்தை. இதோட பெண் குழந்தை போதும்டா சாமினு.. போதும் பொண்ணுனு பெயர் வைச்சுட்டாங்க. போதும் என்பதை ஆங்கிலத்தில் என்னப்பினு மாத்தி வைச்சுட்டேன். நல்லாயிருக்குல்ல தோழர்”
ம்ம்.. என்று மாடன் சொல்ல..
“உங்களுக்கு அப்புறமாவது பையன் பிறந்தானா” என்று செல்வம் ஆர்வமாக கேட்டான்.
“இதுக்குமேல டிரைபண்ணியே என்அப்பன் சாகடிச்சுடுவானு என்னோட அம்மா ஓடிப்போயிட்டாங்க..” என்றாள் என்னப்.
இருவரும் சோகமாக மௌனமானார்கள்.
“யாரோட ஓடிப்போயிட்டாங்கனு கேப்பிங்கனு எதிர்ப்பார்த்தேன் செல்வம்” என்றாள்.
“அவ்வளவு ஈரமில்லாதவன் நானில்லை தோழர்.”
“அட.. இதுல என்ன இருக்கு.. என்னோட அம்மா ஓடிப்போனது கம்பௌன்டர் கூடவாக்கும். பாதிக்கு பாதி நாள் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தவளை புரிஞ்சுக்கிட்ட நல்ல மனுசன்” என்று நிறுத்தினாள். எல்லோர் முகத்திலும் புன்னகை படர்ந்தது.
“என்னப்பிடம் பேசிக்கொண்டிருந்தால், நேரம் போரதே தெரியாது காம்ரேட்டுகளே.. நான் அண்ணாமலையில் ஒரு மாதமாக என்னப்புடன் தான் இருந்தேன்.” என்றான் ஜேக்கப்.
“அங்கன யாரோட இடத்தில இருந்தீக. பவா இருக்காரே. சோறும் போட்டு இடமும் தந்து நல்ல நல்ல கதைகளெல்லாம் சொல்லி தூங்க வைப்பாரே.” என்றான் செல்வம்.
“அடே.. அங்கன பொடிசித்தர் ஆசிரமம் இருக்கு. அவரும் நம்பள மாதிரி ஒரு காம்ரேட்தான். மக்கள் சித்தருனு சொல்லிட்டாங்க அவ்வளவுதான். அவர் பேசுர பேச்சில் எத்தனை கார்ல்மார்க்ஸோட கொள்கைகள் இருக்குனு தெரியுமா.. ச்சே.. சாத்தியமே இல்லை” என்றான் ஜேக்கப். என்னப் அந்த தத்துவங்களின் சாத்தியக் கூறுகளை எப்படி சித்தர் கூறினார் என்று விளக்கினாள்.

sagotharan