31-03-2021, 04:48 PM
“அந்த கரடி சொன்ன மாதிரி கரெக்ட் டைமுக்கு வந்துட்டான். நீங்க நல்ல மூடில் இருக்கறப்ப பார்த்து டொக்கு டொக்குன்னு தட்டறான், முண்டம், பிசாசு. அவன் வரட்டும், நல்லா வச்சிக்கிறேன். அந்த திருட்டுக் கழுதைய போட்டாதான் அடங்குவான் போலிருக்கு. அவன் வந்ததும் நூறு தரம் தோப்புக் கரணம் போட வைக்கறேன் பாருங்க,” என்று பொறுமினாள். அது பெண்களுக்கே உரித்தான ஒரு வகையான பொய் கோபம் என்பது எனக்கு புரியும்.
“என் கண்ணு முன்னால அவனைப் போடாதே அஞ்சு, நான் பாத் ரூம் போய் ஒளிஞ்சிக்கறேன், அப்புறம் அவனை போடு. விட்டுடாதே. நல்லா போடு,” என்று நான் சொன்னதும் அஞ்சு என் நெஞ்சில் குத்தியபடி, “காலைல உங்களுக்கு மூடு வந்தாலே போதும் பேச்சு ஒரு மாதிரி போவுது. இருங்க உங்களையும் வச்சிக்கறேன், உங்களையும் போட்டாதான் சரி வரும். போய் கதவை திறங்க,” என்றபடி உடைகளை சரி செய்ய தொடங்கினாள்.
நான் கதவை திறந்ததும் ஃபோட்டோக்ராஃபர் எனக்கு வணக்கம் சொன்னான். அவனை உள்ளே வர சொன்னேன். அஞ்சுவை பார்த்ததும், “குட் மார்னிங்க் அஞ்சு மேடம். வாவ், நான் சொன்ன மாதிரியே ரெடியா இருக்கீங்களே! ரொம்ப அம்சமா இருக்கீங்க. உங்களால இன்னைக்கு முதல் ஷூட்டே சூப்பரா இருக்கப் போவுது! உங்களால எனக்கு அதிர்ஷ்டமான நாள்தான். வேலைய ஆரம்பிக்கலாங்களா?” என்றதும் அவளுக்கு முக மலர்ச்சி வந்தது மட்டுமல்ல, அவன் புகழ்ச்சியில் அவளுக்கு கொஞ்சம் வெட்கமும் வந்தது.
“காலைல வந்தும் வராததுமா கிண்டல் அடிக்காத! வந்தோமா, வந்த வேலைய பார்த்தோமான்னு இருக்கணும். இடம் கொடுத்து இலை போட்டா வடை கேட்டு அடம் பிடிக்கிற கேஸ் நீ,” என்று அஞ்சு சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் போல முகம் சிறுக்க, அவன் மூடை கெடுக்க வேண்டாமென்று குறுக்கிட்டேன்.
“அஞ்சு நேத்து பிடிச்சி உனக்கு செல்லமா கரடின்னு பட்ட பெயர் வச்சிருக்கா. நீ வந்ததும் நேத்து சொன்ன மாதிரி தோப்புக் கரணம் போடுவேன்னு நினைச்சேன். பரவாயில்ல விடு, நீ போட்டா காலைலயே வலிக்கும். வேலையெல்லாம் முடிச்சிட்டு அப்புறமா போடு,” என்றேன்.
அவன் சிரித்துக்கொண்டே, “அஞ்சு மேடம் சொன்னா இப்பவே போடறேன். அவங்க எத்தனை சொன்னாலும் போடறேன்,” என்றதும் அஞ்சுவும் சிரித்து விட்டாள். அவனிடம் நான், “நீ வருகிற வரைக்கும் உன்னை கரடி, முண்டம், பிசாசு-ன்னு நொட்ட சொல் பேசுவா. ஆனா நீ வந்ததும் பாரு அவள் மூட் மாறி சிரிக்கறதை,” என்றதும், “போதும் உங்க கிண்டல்,” என்று அஞ்சு என்னை செல்லமாக அடித்தாள்.
ஃபோட்டோக்ராஃபர் என்னிடம், “அண்ணா, நீங்க கட்டிலில் உட்கார்ந்துக்கங்க. நான் அண்ணியை சேரில் வைத்து ஷூட் பண்ணிடறேன்,” என்றதும் நான், “இல்லப்பா தம்பி, நான் குளிக்க போறேன். ரெண்டு பேரும் ஃப்ரீயா வேலை பாருங்க,” என்றேன். ஆனால் அவன், “பத்து நிமிஷம்தான்ணா, ஷூட் பண்ணிட்டு மண்டபத்துக்கு ஓடிடுவேன்,” என்றான். சரி என்று சொல்லி கட்டிலில் ஒரு ஓரம் உட்கார்ந்தேன்.
அஞ்சுவிடம் அவன், “அண்ணி, மேக் அப் வேண்டாம். மேக் அப் இல்லாமலே நீங்க சூப்பரா, அம்சமா, சும்மா கிச்சுன்னு இருக்கீங்க. தலையில இருக்கற டவல் அப்படியே இருக்கட்டும். அந்த சேரில் உட்காருங்க,” என்றதும், அஞ்சு சற்று வெட்கத்துடன் புன்னகைத்தபடி சேரில் உட்கார்ந்தாள்.