நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#68
வலியச் சென்று அவளிடம் பேசிப்பேசி தங்களுக்குள் ஒரு நட்பை உருவாக்கினான்.

அவளைப் பற்றி அறிந்துகொண்டான்.
அவளுக்கு இத்தகைய நேரத்தில் தேவையானது தைரியம்தான் என்று அவளுக்குப் புரிய வைத்தான்.
அவள் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது புரிய அவளை திசைமாற்ற வேறு பேச வேண்டும் என்று யோசித்ததில் அவனுக்கு அவன் மனதைப் பாதித்த அந்த செய்தி நினைவுக்கு வந்தது.

“கிருஷ். நீ இன்றைய செய்தித்தாளை படித்தியா?”

“ம். படித்தேன். ஆனால் நீ எந்த விசயத்தைப் பத்தி பேச வர்றேன்னு எனக்குத் தெரியலை.”

“பள்ளி மாணவன் ஒருவன் தனது தந்தை குடிக்கிறார் என்று தற்கொலை செய்துகொண்டானே. அதைப் பத்திதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆமா. எனக்கும் மனசுக்கு வருத்தமா இருக்கு? வாழ வேண்டிய பையன். இப்படி போயிட்டான்.”

“அதுவும் அவன் இறந்து ஆவியா வந்து சாராயக் கடையை மூட வைக்கிறேன்னு வேற சொல்லிட்டு போயிருக்கான். அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. நம்ம சமுதாயம் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளனும்கிற அறிவை அவனுக்குப் புகட்டலை. இறந்த பின் என்ன ஆவோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் சினிமாவிலும் கதையிலும் ஆவி, பேய் என்று சித்தரிக்கின்றனர். அதை உண்மை என்று நம்பி அந்த சிறுவனும் தனது உயிரை விட்டுவிட்டான்.”

“எனக்கும் வருத்தமா இருக்கு.”

“தன்னோட சாவிற்கு எடுத்த முயற்சியை அவன் தன்னோட வாழ்க்கைக்கு எடுத்திருக்கலாம். போராடியிருக்கலாம். முட்டாள்தனமா முடிவெடுத்துட்டான்.”

அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

“நீ என்ன சொல்றே கிருஷ்?”

“தற்கொலை செய்துக்கிறதே முட்டாள்தனம்னு நீ சொல்றே? ஆனால் பிரச்சினையில் இருக்கிறவங்களுக்கு அது அவர்கள் அனுபவிக்கும் நரக வாழ்க்கையில் இருந்து கிடைத்த விடுதலைன்னுதான் தோணும். ஏன்னா நான் அனுபவிச்சிருக்கேன். வாழ்க்கையில் நமக்குன்னு யாருமே இல்லைங்கிறதை நினைக்கும்போதெல்லாம் பேசாமல் வாழ்க்கையை முடிச்சுக்கலாமான்னுதான் தோணுச்சு.”
“கிருஷ். இப்படி எல்லாம் பேசி என்னை சிரமப்படுத்தாதே? எங்களை எல்லாம் நினைச்சா உனக்கு சொந்தமா தோணலையா?”
“இப்ப எல்லாம் அப்படி தோணலை.”

“நீ எதுக்கும் கவலைப்படாதே. உனக்கு நாங்க இருக்கோம்.”

அவனது ஆறுதலான பேச்சில் அமைதியாக அமர்ந்திருந்தவள் திடீரென்று திடுக்கிட்டு எழுந்தாள்.

“என்னாச்சு?”

“ஒன்னுமில்லை. நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வர்றேன்.”

பரபரவென்று ஓடியவளை பார்த்து அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்னாச்சு இவளுக்கு?”

தன் அறையில் வந்து கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு தனக்கு ஏன் அப்படி தோன்றியது என்ற யோசனை.

அவனுடன் பேசி முடித்து விட்டு அமர்ந்திருக்கையில்

 ‘அப்ப நான் உண்மையிலேயே அழகா?’

என்று யுகேந்திரன் கேட்டது காதில் மீண்டும் ஒலித்தது.

அப்போது அவனும், அவனது அண்ணனும் மாநிறமாய் இருந்தாலும் அழகுதான் என்று தோன்றியது.

அதுவும் அன்றொருநாள் நிலா வெளிச்சத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு மொட்டை மாடியில் நின்றிருந்த மகேந்திரனின் தோற்றம் மனதிற்குள் தோன்றியது. அப்போதுதான் விலுக்கென்று அவள் மனம் விழித்துக்கொண்டது.

அவனது பெயரைச் சொல்லி அழைத்ததற்கே அத்தனை கோபம் அவனுக்கு. என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று தெரிந்தாலே அவனைப் பொறுத்த வரைக்கும் கொலை குற்றமாச்சே?

அதன் பிறகு தன்னை அவன் வீட்டில் தங்க விடுவானா?

இப்போது கிடைக்கும் அவனது வீட்டாரின் அன்பு அதன் பிறகு கிடைக்காமல் போய்விடுமே.

இப்போதைக்கு அவர்களின் அன்புதான் முக்கியம். அதை எந்த காரணத்தைக்கொண்டும் கெடுத்துக்கொள்ளக்கூடாது.



அவன் இருக்கும் இடத்திலேயே இனி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால்தானே தேவை இல்லாத சிந்தனை எல்லாம் மனதில் தோன்றும்.
னது அறையில் அமர்ந்திருந்த மகேந்திரன் தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே நொந்துகொண்டான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 02-04-2019, 10:54 AM



Users browsing this thread: 6 Guest(s)