நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#67
மாநிறத்தில் இருந்த அவனைப் பார்த்துக் கேட்க அவன் ஆம் என்று தலையசைத்தான்.

“நான் கலரா இல்லைன்னு எனக்கு வருத்தம் இருக்கு.”
“இதுதான்டா நம்ம நாட்டு கலரு. என்ன? கொஞ்சம் சதை போட்டா நல்லாருக்கும்.”
அம்மாவும் இதைத்தான் சொல்றாங்க. நான் சாப்பிடற சாப்பாடு எல்லாம் எங்கே போகுதோ தெரியலை. என் உடம்பில் சதையே பிடிக்க மாட்டேங்குது.”

“இதுவும் ஒருவகை அழகுதான் யுகா. எத்தனை பேர் உடம்பைக் குறைக்க செலவு செஞ்சுக்கிட்டு அலையறாங்க. உனக்கு இயல்பாவே அப்படிப்பட்ட உடல்வாகு அமைந்திருக்கு. அப்புறம் படிப்பிலும் அவன் முதல்னு பீத்திக்கிறான். மனப்பாடம் செய்து பரிட்சையில் விடைத்தாளில் வாந்தி எடுக்கிற மாதிரி கொட்டிவிட்டால் போதுமா?”

“அப்ப நான் உண்மையிலேயே அழகா?”

அவன் மீண்டும் சந்தேகமாய் கேட்டான்.

“அதில் என்ன சந்தேகம்?”

“நான் அவனை விட புத்திசாலியா.”

“இல்லையா பின்னே?”

அவளுக்கு யோசனை பின்னோக்கி சென்றது.

அப்போது அவள் கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தாள்.

ஒரு முறை மாதாந்திர தொந்தரவு தாங்க முடியாமல் கல்லூரிக்கு செல்லவில்லை.

மறுநாள் யுகேந்திரனிடம் முந்தைய வகுப்பில் நடந்ததை தெரிந்துகொள்வதற்காக அவனது நோட்டுப்புத்தகத்தை கேட்டாள்.
அவன் தருவதற்கு யோசித்தான்.
அவளே பிடுங்கி வாங்கிப் பார்த்தவள் திகைத்துப்போனாள்.

ஒரே கிறுக்கலாய்தான் நோட்டு முழுவதும் இருந்தது.

“ஏய் என்னடா இது? ஒன்னாங்கிளாஸ் பிள்ளைங்க கூட உன்னைவிட நல்லா எழுதும் தெரியுமா?”

அவன் அவள் தலையில் செல்லமாய் குட்டினான்.

“ஏய் மக்கு. நானும் நல்லாதான் எழுதியிருக்கிறேன். அது சுருக்கெழுத்து. உனக்கு என்ன வேணும். நேத்தைக்கு வகுப்பில் நடந்ததுதானே? நான் நாளைக்கு எழுதிக்கிட்டு வந்து தர்றேன் போதுமா?”

சொன்ன மாதிரியே கொண்டு வந்து கொடுத்தான். அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல் அத்தனை அழகான கையெழுத்து அவனது.

அத்துடன் அவன் எழுதியிருந்த விசயமும் அத்தகையதே. அதைப் படிக்கப்படிக்க பேராசிரியரே நேரில் வந்து சொன்னது போல் அப்படியே வகுப்பில் அவர் சொன்னதை எல்லாம் எழுதியிருந்தான்.

வகுப்பில் அவர் நடத்தியதை நன்கு கவனித்திருந்தால்தான் அப்படி எழுத முடியும். அதை படிப்பதற்கு வேறு புத்தகமே தேவையில்லை.

“எப்படிடா இப்படி?”

அவள் ஆச்சர்யமாக கேட்டாள்.

“என்ன?”

“நான் வகுப்பிற்கு வந்திருந்தால்கூட இப்படி கவனித்து எழுதியிருப்பேனா என்கிறது சந்தேகம்தான். நீ ஒரு வார்த்தையைக் கூட விடலை. அப்படியிருந்தும் உனக்கு ஏன் நல்ல ரிசல்ட் வர மாட்டேங்குது?”

“நான் நினைச்ச ரிசல்ட் வருதுல்ல. அது போதும்.”

என்று அவன் முணுமுணுத்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவன் மட்டும் பரிட்சையில் ஒழுங்காய் எழுதினால் இந்த முரளியை விட அதிக மதிப்பெண்கள் எடுப்பான். அதற்கு அவன் மனது வைக்க வேண்டும். இந்த முறை எப்படியும் அவனை நன்றாக எழுத வைக்க வேண்டும்.

சிவந்த தோலும் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் அவனுக்கு தான்தான் பெரியவன் என்ற திமிரை உண்டாக்கியிருக்கிறது.

அவன் நன்றாகப் பார்த்துக்கொள்வானாமே?

“அவ துடிக்கிறதை என்னால் பார்க்க முடியலை. ஏதாவது செய்யுங்கம்மா. ஏதாவது செய்யுங்க.”

என்று அவள் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டபோது தனக்கே அந்த துன்பம் வந்ததுபோல் துடித்தானே? அதுபோல் அந்த முரளியால் தனது வலியை உணர முடியுமா?

அவளுக்கு மனதிற்குள் தோன்றியது.

“இதே முரளி நான் கல்லூரியில் சேர்ந்தபோது கவலையாய் இருந்தேனே அப்போது எங்கே போனான்?”

அவள் தனக்குள் பேசுவது போல் சத்தமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.

யுகேந்திரன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளை தான் கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.



சோகமே உருவாக ஒதுங்கியிருந்தவளைக் கண்ட போது மற்றவர்கள் போல் கிண்டல் செய்து ஒதுங்கிப்போக அவனுக்கு மனம் வரவில்லை.
ஏதோ ஒரு வகையில் அவள் அவனைக் கவர்ந்துவிட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 02-04-2019, 10:48 AM



Users browsing this thread: 11 Guest(s)