நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#66
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 11 - ராசு

[Image: nivv.jpg]

ய் கிருஷ். என்னாச்சு? ஏன் இப்படி விழுந்தடிச்சு ஓடி வர்றே?”

மகேந்திரனுடன் காரில் வந்து இறங்கி, விட்டால் போதும் என்று ஓடிவந்த கிருஷ்ணவேணியைப் பார்த்து யுகேந்திரன் கேட்டான்.

எல்லாம் உன்னால்தான்டா. வா மாடிக்குப் போய் எல்லாம் சொல்றேன்.”

அவனைக் குற்றம் சாட்டியவள் அவனை இழுத்துக்கொண்டு மாடிக்குச் செல்ல படியேறினாள்.
அப்போது அங்கே வந்த வனிதாமணி அவர்களை மாலை சிற்றுண்டி முடித்த பிறகு போகச்சொல்ல இருவரும் அங்கேயே அமர்ந்தனர்.
பின்னேயே வந்த மகேந்திரன் அவர்களைக் கண்டு கொள்ளாமல் மாடியேறினான்.
“நீயும் சாப்பிட்டுவிட்டு போப்பா.”
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.”
நிமிர்ந்தே பாராமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
இருவரும் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மாடிக்குச் சென்றனர்.
அங்கே அவளுக்குப் பிடித்தமான ஊஞ்சலில் ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டாள்.
மறு ஓரத்தில் அமர்ந்த கொண்ட அவன் கால்களை தரையில் உந்தி ஊஞ்சலை ஆட்ட ஆரம்பித்தான். அவள் சுகமாய் கால்களை மடித்துக்கொண்டு நன்றாக ஊஞ்சலில் சாய்ந்தமர்ந்தாள்.
“ஏன் நான் என்ன செய்தேன்?”
“நீ ஏன்டா என்னை பாதியிலேயே விட்டுட்டு வந்தே? என்னையும் உன் கூட கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கலாம்ல.”
அதுதான் அண்ணாவை வரச்சொன்னேனே?”

“ம். சொன்னே. சொன்னே. அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினையே?”

“ஏன் என்ன செய்தான்?”

“கோபப்பட்டார். ஆனால் எதுக்குன்னு தெரியலை.”

“அவன் என்னிக்குதான் கோபப்படாம இருந்திருக்கான். வண்டியை கொண்டு வந்து நிறுத்துனதிலேயே அவன் கோபம் தெரிந்தது.”

சலிப்பாய் பதில் சொன்னான்.

“மனசு விட்டுப் பேசிட்டா எந்த பிரச்சினையும் இருக்காது. கோபத்திற்கும் தேவையிராது. ஆனால் அதை செய்யமாட்டான்.”

“நானே ஏற்கனவே பயத்தில் இருந்தேன். அதனால் அவரை பெயரைச் சொல்லி அழைத்துவிட்டேன். அதனால்தான் கோபம்னு நினைக்கிறேன். வண்டியை அத்தனை வேகமா ஓட்டிட்டு வந்தார் தெரியுமா? நான் பயந்துட்டேன்.”

“நீ அவனை பெயரைச் சொல்லி அழைக்கிற அளவுக்கு பயந்துட்டியா? என்ன நடந்தது?”

“அந்த முரளி இருக்கான்ல. அவன் இன்னிக்கு என்ன செய்தான் தெரியுமா?”

“நீ சொன்னால்தானே எனக்குத் தெரியும்?”

“நீ இன்னிக்கு கூட இல்லைங்கிற தைரியத்தில் என்கிட்ட வந்து அவன் என்னைக் காதலிக்கிறதா சொன்னான்.”

“அவன் அப்படியா சொன்னான். அவனுக்கு எத்தனை தைரியம் இருக்கனும்?”

யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.

“ஆமாம் யுகா. அத்தோட நான் ஏன் உங்க வீட்டில் வந்து தங்கினேன்னு சண்டைக்கு வர்றான்.”

“அவனுக்கு அத்தனை தைரியம் வந்துடுச்சா?”

“நான் அவனை இந்த அளவிற்கு நினைச்சே பார்த்ததில்லை தெரியுமா?”

அவள் நடந்ததை பற்றி சொல்லி முடித்தாள்.

“எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவன்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான் உன் அண்ணா வந்தார். அந்த அவசரத்தில் அவரோட பெயரை சொல்லிக் கூப்பிட்டுவிட்டேன். அதான் அவர் ரொம்ப கோபமா வந்தார்.”

சற்றுநேரம் யுகேந்திரன் பேசாமல் இருந்தான்.

“அவன் சொன்னதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே கிருஷ்?”

“எதைப் பத்தி?”

“அவன் உன்னை விரும்பறேன்னு சொன்னானே?”

அவள் அவன் முதுகில் அடித்தாள்.

“உனக்கு என்ன தைரியம் இருந்தா என்கிட்டே கேட்பே?”

“இல்லை. அவன் சொன்ன மாதிரி என்னோட கம்பேர் பண்ணும்போது அவன் அழகன். என்னோட புத்திசாலி. உனக்குப் பிடித்திருந்தால் என்கிட்ட சொல்லிடு.”

“ஏய். திரும்பத் திரும்ப இப்படி பேசினே எனக்கு கோபம் வந்துடும்.”

அவள் மிரட்டலாய் சொன்னாள்.



“உனக்கு அவனை நிஜமாவே பிடிக்கலைதானே? அவன் உனக்குப் பொருத்தமானவனா இருப்பான்னு நினைச்சேன். உன்னைக் காதலிக்கிறவன் உன்னை நல்லாவும் பார்த்துப்பான்.”
“அவன் சிகப்பா இருந்தா எனக்குப் பொருத்தமானவனா இருப்பானா? அவன் அழகன்னு தன்னைத்தானே பீற்றிக்கொண்டபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. நீ எப்பயிருந்து இப்படி பேச ஆரம்பித்தே? உன்னை விட அவன் அழகானவன்னு நினைச்சியா?”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 02-04-2019, 10:45 AM



Users browsing this thread: 38 Guest(s)