02-04-2019, 09:43 AM
பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை மாவட்ட எஸ்பி, பொள்ளாச்சி டிஎஸ்பி, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சிக்கு புதிய டிஎஸ்பியாக சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த டிஎஸ்பி ஜெயராமன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய புதிய ஆய்வாளராக நடேசனுக்கு பதில் ஆர்.வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பியாக சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட எஸ்பி பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பாண்டியராஜன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட எஸ்.பி.பாண்டியராஜன் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.