Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையில் பறக்கும் படை சோதனை

[Image: 61354.jpg]
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டினை தொடர்ந்து திமுக பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியின் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். 
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது. ஏற்கனவே துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியிருந்த வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். காலை முதலே காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

          [Image: 100505_durai800.jpg]
கீழ்மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டில் சோதனை நடந்தது. அதேபோல, காட்பாடி வஞ்சூர் பகுதியிலுள்ள திமுக ஒன்றியச் செயலாளர் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 
மேலும், திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. இதனிடையே சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
துரைமுருகன் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தண்டபத்திலுள்ள அவரது‌ பண்ணையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
                 [Image: 103206_anitha2.JPG]
அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் சோதனையை தொடர முடியாமல் பறக்கும் படையினர் திரும்பிச்சென்றனர். நாளை காலை மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி போட்டியிடுகின்றார். அவருக்கு பக்கபலமாக இருந்து எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்தான் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இத்தகைய சூழ்நிலையில், அவரது பண்ணையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 02-04-2019, 09:39 AM



Users browsing this thread: 100 Guest(s)