27-03-2021, 04:31 PM
சிறிது நேரத்தில் இருவரும் மேடையிலிருந்து இறங்குவதை கண்டேன். அவர்கள் பின்னாலேயே அவர்களுக்கு தெரியாமல் அந்த கூட்டத்தில் ஃபாலோ செய்தேன்.
இருவரும் கல்யாண மண்டபத்தின் மாடியில் இருந்த ஒரு அறைக்குள் சென்றனர். அவர்கள் சென்ற பின்பு அறைக் கதவை உள்ளிருந்து தாழிட்டுக்கொள்வார்கள், ‘விசேஷம்’ தொடங்கிவிடுவார்கள் என்ற எண்ணம் எனக்கு சட்டென தோன்றியது. ஆனால், அறைக் கதவு திறந்துதான் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது என்றே சொல்லலாம். கதவின் அருகில் சுவர் ஓரம் நின்றபடி கேட்டேன்.
என் மனைவி அஞ்சு சன்னக்குரலில் பேசுவது கேட்டது. “அதை என்கிட்ட கொடு. இதுலந்து அதை எடு. …. கம் ஆன் க்விக். …. சொல்றத கேக்கணும் … இல்லன்னா தொலஞ்ச …. நான் சொன்னதை இப்ப செய். …. கரெக்ட் …. இந்தா இதைப் பிடி …. இதையெல்லாம் அதுக்கு மாத்து …. நேரம் ஆச்சு … சும்மா டபாய்க்காத … வயசு கம்மியா, அதான் துடிப்பா இருக்க. உன்னைப் பார்த்தா கோவக்காரப் பார்ட்டின்னு தோணுது. உன் டெம்பரை அடக்கிகோ, அதான் நல்லது. நல்ல பிள்ளையா நான் சொல்ற மாதிரி செய் … இல்ல தொலச்சிடுவேன் தொலச்சி ... முடிஞ்சதா? … பொறு செக் பண்ணிடறேன் … ஓகே … எதுக்கும் நீ வச்சிருக்கறதை கொடு, ஒரு தரம் பார்த்திடறேன் … இதுல ஓகே … இதுல எப்படி பாக்கணும்? ஓகே, ஓகே, இதுலயும் ஓகே …. தாங்க்ஸ் … குட் பாய் …. நைட் ப்ரோக்ராம் முடிஞ்சி ஃபோன் பண்ணு.… நம்பர் குறிச்சிக்கோ … கிட்ட வா, உன் காதில் ஒரு விஷயம் சொல்றேன் … ஓகேவா? …. கேர்ஃபுல்லா இருந்துக்கோ … உன்னை பூரணமா நம்பறேன் … கிளம்பலாமா?”
ஏன் தர்ம பத்தினி சொன்னது ஒரு இழவும் புரியவில்லை. இருவருக்குமிடையே இந்த கொஞ்ச நேரத்திற்குள் ஏதோ பிரச்சனை வந்திருக்குன்னு நினைக்கறேன். எப்படியும் ராத்திரி அவளாவே சொல்லுவாள், அப்போது கேட்டுக்கலாம் என்று நினைத்து மண்டபத்திற்குள் நுழைந்தேன்.
என் சீட்டில் வேறு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். அதனால் அஞ்சுவின் கண்ணில் படும்படி வாசல் கதவு பக்கம் நின்றேன். அஞ்சு என்னமோ நான் நல்ல பையனாக பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்மணிக்கு பயந்து வாசலுக்கு ஓடிவிட்டேன் என்று என்னை மெச்சியிருப்பாள்.
அஞ்சு என்னை செல்லில் அழைத்து காஃபி சாப்பிட போகலாம் என்றாள். இருவரும் கல்யாண மண்டபத்தில் காஃபி கொடுக்கும் இடத்தில் காஃபி வாங்கினோம். அஞ்சு என்னை கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூட்டிக்கொண்டு போனாள்.
காஃபி சாப்பிடும்போது, “அந்த ஃபோட்டோக்ராஃபர் ரொம்ப மோசம்ங்க. அவன் செஞ்ச வேலைக்கு அவனை நான் போட்டிருக்கணும், போனா போகுது அப்புறமா வச்சிக்கலாம்னு விட்டுட்டேன்,” என்றபடி காலி டம்பளரை என்னிடம் கொடுத்தாள். நான் இரண்டு கப்களையும் ஒரு ஓரம் ட்ராஷ்-பின்னில் போட்டுவிட்டு அவளிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன்.
“பின்ன என்னங்க, எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ஃபோட்டோக்ராஃபர் என்னை கொஞ்சம் இப்படி அப்படீன்னு ஃபோட்டோ எடுத்திருப்பான்? நான் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தேன். அவன் ஆளைப் பிடிச்சி போடணும்னு தோணிச்சு. கூட்டத்தில பிரச்சனை பண்ண வேணாம், அப்புறம் வச்சிக்கலாம்னு இருந்தேன். அப்புறம் கிச்சனுக்கு போய் அவனுக்கும் அவன் டீமுக்கும் காஃபி வாங்கிக் கொடுத்ததும் ஜில் ஆயிட்டான்.”