27-03-2021, 10:37 AM
மேடையில் ஒரு ஓரம் சென்றவள் செல்லை எடுத்தாள். எனக்குதான் அழைப்பு, அதுவும் அஞ்சுடமிருந்துதான். நான் ஹலோ சொல்வதற்குள் செல்லமாக பொரிந்தாள். “பக்கத்தில யாரை உட்கார வச்சிருக்கீங்க? என் சக்காளத்தியா? நான் ஒருத்தி, உங்க பொண்டாட்டி இங்க இருக்கறப்பவே அவ உங்களை இடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கா? என்ன, இன்னைக்கு நான் உங்களைப் பத்தி கனவு காணணுமா?”
நான் ஷாக்கடித்தவன் மாதிரி எழுந்தேன். ஆனாள் அஞ்சு ஃபோனில் அதட்டினாள். “பரவாயில்ல, உட்கார்ங்க. நான்தான் பக்கத்தில இல்லல்ல, ஃப்ரீயா எஞ்சாய் பண்ணுங்க. ரொம்ப வழியாதீங்க. உங்க வழிச்சலை ஃபோட்டோ எடுத்துட்டோம். எதுக்கும் அவளோட பேரு, ஃபோன் நம்பர், அட்ரஸ் வாங்கி வச்சிக்கோங்க, நான் மென்சஸ் ஆனா, மாசமானா நீங்க அவளை போய் பார்த்துட்டு வரதுக்கு வசதியா இருக்கும் …... அசடு வழியுது, தொடைங்க. …… சைட் அடிக்கறது, டாவு அடிக்கறதுண்ணா தைரியமா செய்ங்க, எத்தனை பேரு என்ன ஆனாலும் சரின்னு உங்க முன்னால வச்சே உங்க பொண்டாட்டிய சைட் அடிக்கறாங்கல்ல, அதே தைரியத்தோட ஜமாய்ங்க. ஃபங்க்ஷன் முடிச்சிட்டு உங்களை வச்சிக்கறேன், அது வரைக்கும் சக்காளத்தி உங்களை வச்சிக்கட்டும்.”
இவற்றை சொல்லிவிட்டு அவள் கலகலவென சிரிக்க, அந்த சிரிப்பின் சத்தம் கேட்டு ஃபோட்டோக்ராஃபர் அவளை புதிராக பார்த்தான். அவன் அப்படி பார்த்தது தூரத்தில் இருந்த எனக்கு தெரிந்தது. அஞ்சு அவனை நெருங்கி என்னை சுட்டிக்காட்டினாள். பின்பு காமிராவையும் சுட்டிக்காட்டி, அதில் அவன் என்னை பதிவு செய்ததை சொல்லியிருப்பாள் போலிருக்கு, அவனும் சிரித்தான். ஆக என் பக்கத்தில் ஒருத்தி உட்கார்ந்திருந்த விஷயத்தையும் அவள் என்னிடம் அடிச்ச கிண்டலையும் சொல்லியிருப்பாள்.
என்னால் வேறு இடத்துக்கு போகவும் முடியவில்லை, ஏனென்றால் அதற்குள் கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக வந்து எல்லா சீட்டுகளையும் ஆக்கிரமித்துவிட்டிருந்தது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளும் அதனால் அங்கேயே டெண்ட் அடித்துவிட்டாள். நான் அங்கு இங்கு திரும்பினால் அஞ்சு திரும்பி ஃபோன் செய்து என்னை வம்புக்கு இழுப்பாள் என்ற பயத்தில் அஞ்சுவை மட்டும் பார்க்கும் ஒரே கோணத்தில் என் கண்களை நிலை நிறுத்தினேன்.
அஞ்சுதான் ஸ்டார் ஆஃப் த ஷோ மாதிரி இருந்தாள். காரணம் எல்லோரும் பட்டு மாதிரியான பகட்டான உடையணிந்து வந்திருக்கையில், அஞ்சு மாத்திரம் எலிகண்டான கதர் புடவையில் இருந்தாள். போதாதற்கு பலரையும் பெருமூச்சுவிட வைத்திருக்கும் அம்சங்களுடன் அவள் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தது பலரின் பார்வையின் கோணத்தை அவள் செல்லும் திக்கில் திருப்ப, பார்ப்பதற்கு நல்ல ரசனையாக இருந்தது. எனக்கு முன்னால் இருக்கும் ஆண்-பெண்களின் ரீயாக்ஷனே இப்படி என்றால், என் பின்னால் இருப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்! என்ன, அவர்களை நான் பார்க்க முடியாது. எல்லோரும் அஞ்சுவின் புருஷன் யாரோ என்ற யோசனையில் பொறாமையில் இருந்திருப்பார்கள். அந்த நினைப்பில் எனக்கு பெருமையில் உடல் லேசாகி பறந்த மாதிரி இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் மேடையின் ஒரு ஓரத்தில் அஞ்சுவும் ஃபோட்டோக்ராஃபரும் ஏதோ கிசுகிசுவென பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இருவர் தலையும் சற்றேறக் குறைய முட்டின நிலையில் இருந்தன. இருவரும் பேசுவதன் பாடி லாங்குவேஜ், கை விரல் அசைவுகளைப் பார்த்தால் இருவரும் ஏதோ சன்னமாக தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் என்று தோன்றியது.