22-03-2021, 07:44 AM
சின்ன சின்ன சடங்குகள் முடிய ராணி அத்தை விக்கியை வீட்டுக்கு கூப்பிட்டார்கள் விக்கி எழ. சுந்தரவேலு மாமா தடுத்தார். இன்று ஒரு நாள் மட்டும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார் ராணி அத்தை அதெல்லாம் முடியாது அதான் தாலி கட்டிட்டனே பிறகு என்ன. என் மகனை விட்டு விடுங்கள் என்றார். இது தான் யோக சம்பிரதாயம். இருவரும் கணவன் மனைவி போல இன்று ஒரு நாள் மட்டும் இருக்க வேண்டும் என்றார். அந்நேரத்தில் ராணி அத்தைக்கு ஒரு phone வந்தது அதில் அவர்களின் பூர்வீக சொத்து ஒன்று நிலுவையில் இருந்தது எதிர்வாதி நோயுற்றதால் வாபஸ் வாங்கப்போவாதாக அவர் தரப்பில் சொல்கிறார்கள் என்று. இதை கேட்டதும் ராணி அத்தைக்கு ஒரே ஆச்சரியம். தாலி கட்டிய 5 நிமிடத்தில் இப்படி ஒரு பலனா என்று. பின் அவரும் ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவர் முழுவதுமாக நம்பவில்லை பொறுமையாக என்ன நடக்கிறது என்று பார்த்தார். சாயங்காலம் ஆனது ராணி அத்தையின் கணவர் சின்னராசு அவர்களின் பென்ஷன் பணம் வரப்போகிறது என்று செய்தி வந்தது பின்பு ராணி அத்தைக்கு ஒரே சந்தோஷம். அவர் என் அம்மாவை அவர் மருமகளாக முழுமையாக ஏற்றுக்கொண்டார்.