அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Photo 
"இரு ஓநாய்கள் (The Story of Two Wolves)" என்ற புகழ்பெற்ற செரோக்கிய இனக்குழு கதை ஒன்று உள்ளது. அது தாத்தாக்கும் பேரனுக்குமான உரையாடல்.[Image: 1*-i_4pyrdA6DdaLlNxud3GQ.jpeg]
தாத்தா கூறுவார், என் மனதில் இரு ஓநாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. ஒன்று, நல்ல ஓநாய் - மகிழ்ச்சி, அன்பு, கருணை, மனிதம், காதல், தூய்மை, பொறுமை, உண்மை என்று கடவுளின் வடிவானது. மற்றொன்று, கெட்ட ஓநாய் - பகைமை, கோபம், வன்மம், சோகம், பொறாமை, குற்ற உணர்வு, சுய-பரிதாபம், அகங்காரம், ஆணவம், பொய்  என்ற 'ஆன்மாவை கேக்கும்' ஓநாய்.

என்ற இந்த இரு ஓநாய்களும் நம் மனதில் இருப்பவை. 

மணிக்கு இந்த ரெண்டு ஓநாயையும், மதி குடுத்த மாதிரி, நீங்க எங்களுக்கு ரெண்டு Wolf யும் அறிமுகம் படுத்தி வெச்சுட்டீங்க. 

Bro, எனக்கு என்ன சொல்றது, என்ன எழுதறதுனே தெரில. மனுசனா நீங்க? ஒருத்தன் எப்படி இப்படிலாம் கதை எழுத முடியும். வாசக நண்பர்கள் கூறின மாதிரி, screwdriverக்கு அப்புறம் ஒரு சிறப்பான சம்பவம் பண்ணிட்டீங்க. 

எழுத்துகளின் மூலம் எப்படி உணர்வை கடத்துறீங்க? உங்க எழுத்தால நான் இருக்க மன நிலைய என்னால வார்த்தையால கொண்டு வர முடியல. மூன்று இரவாக உங்க கதைகளை வாசித்து, ஐந்து நாளாக, அந்த உணர்வில், உலகில் இருந்து வெளிய வர முடியமா, நீங்க சொல்விங்கள ஒரு 'வெளி', அந்த மாதிரி ஒரு வேற Space ல் இருக்கேன். எங்க கொண்டு போய் என் தலையை முட்டிக்கறதுனு தெரில. 

என் மனதிற்கு நெருக்கமான பகுதிகள்னா, ரெண்டு இருக்கு. ஒன்னு, அந்த சிறு வயது இரயில் பயணம். பாசத்துக்காக ஏங்கி கொண்டிருந்த மணிக்கு, அக்காவாக அம்மாவாக எல்லாமாமுக மதி கிடைத்த இரவு பயணம். அது ஒரு பரிசுத்தமான பரவசமான இரவு. இன்னொன்னு, To tame the Black Wolf, மணி மேற்கு தொடர்ச்சியின் மலையின் அடர்ந்த  காடுகளின் ஊடே செல்லும், ஓநாய்களுக்கே உரிய ஊளைகளுடன்  கூடிய பௌர்ணமி இரவு பயணம். 

உண்மையாவே இந்த ஐந்து  நாளா, ஒரு வித மகிழ்ச்சி, சோகம், வெறுமை கலந்த, நீங்கள் கூறும் மோனநிலையில் உள்ளேன். மிக மிக மிக நன்றி நன்றி நன்றி!!!! 

ஒரு படைப்பாளிக்கு தேவை சுதந்திரம். உங்களுக்கு தோன்றும் எண்ணங்கள் எழுத்தாகும் போதுதான் உயிருள்ள காவியம் பிறக்கும் என்றாலும், ஒரு எளிய வாசகனாக ஒரே ஒரு வேண்டுகோள்.. மணியையும் மதியையும் ஒண்ணா சேத்து வைங்க பாஸ், புண்ணியமா போகும்.

ஆமா , நீங்க ஏன் ரொம்ப நாளா post  போடாம இருக்கீங்க. ஒடம்பு சரி இல்லையா. சரி இல்லனாலும் பரவால்ல, நாங்க சாத்துக்குடி வாங்கிட்டு வரோம். Post  வரும்னு ஒரு update ஆவது போடுங்க.. Plssssssss....

நான் மறுபடியும் மொதல்ல  இருந்து படிக்க ஆசையா இருக்கு, ஆனா End  ஆனப்புறம் தான்.. அதுவரை இந்த மோனநிலையிலேயே இருக்கனும்...

We are waiting  for your words.. Heart Heart
[+] 3 users Like Idiot17's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Idiot17 - 22-03-2021, 12:15 AM



Users browsing this thread: 28 Guest(s)