screw driver ஸ்டோரீஸ்
(01-04-2019, 09:20 AM)johnypowas Wrote: கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!" 

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!" - பாடலுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொண்டாள்.

ஆதிராவுக்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை.. அவஸ்தையாய் அங்குமிங்கும் பார்வையை அலைபாய விட்டாள்..!! அப்போதுதான்.. பாறையிடுக்கில் நீட்டியிருந்த அந்த சிவப்புநிற மலர் அவளுடைய பார்வையில் பட்டது.. உடனே அவளது மூளைக்குள் பளீரென்று ஒரு மின்னல்.. தங்கை என்ன எதிர்பார்க்கிறாள் என்று இப்போது அவளுக்கு புரிந்து போயிருந்தது..!! சிரித்துகொண்டிருந்த தாமிராவை பார்த்து பட்டென கேட்டாள்.. இருகைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு..!!

"Game or Shame..??"

தனது மேனரிசத்தை அக்காவிடம் பார்த்த தாமிராவுக்கு.. ரத்த விளாறுகளாய் வெடித்திருந்த அவளது உதட்டில் மெலிதாக ஒரு கேலிப்புன்னகை கசிந்தது..!!

"என்ன கேம்..??" என்று உறுமினாள்.

"அந்தப் பூ.. அந்தப் பூவை நான் பறிக்கிறேன்.. அப்படி பறிச்சுட்டா.. அவரை நீ விட்டுறணும்..!! சொல்லு.. Game or Shame..??" 

ஆதிரா கேட்டுவிட்டு காத்திருக்க.. தாமிரா இப்போது அக்காவை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. புன்னகையும் கரகர குரலுமாக சொன்னாள்..!!

"GGGame..!!!!"

அடுத்த நிமிடம் ஆதிரா அந்த மலைச்சரிவில் மேலேறிக் கொண்டிருந்தாள்.. நிலவொளியின் மசமசப்பான வெளிச்சம்.. உத்தேசமாக ஆங்காங்கே பிடித்தவாறு மெல்ல மேலே நகர்ந்தாள்.. பிடிமானம் நழுவினால் கீழே சரிந்து உயிரை இழக்க நேரிடும்..!! பாசி படர்ந்திருந்த வழுக்குப் பாறைகள்.. மழைநீரில் வேறு நனைந்து அப்படியே வழவழத்தன.. கையையோ காலையோ உறுதியாக வைக்கமுடியவில்லை.. விழுக் விழுக்கென்று நழுவி ஓடியது..!!

"ஆஆஆஆஆ..!!"

கால் அப்படி நழுவும்போதேல்லாம் ஏதாவது பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஆதிரா கத்தினாள்..!! அவளது காலின் வெட்டுக்காயம் வேறு பாறையில் உரசி திகுதிகுவென எரிந்தது.. உயிரே போவது மாதிரி வின்வின்னென வலித்தது..!! வேதனையை பொறுத்துக்கொண்டு.. உடலை நகர்த்தி நகர்த்தி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! கணவனை மீட்டு செல்வது மட்டுமே அவளது ஒற்றை நோக்கமாக இருந்து.. அவளை மேல்நோக்கி உந்தித் தள்ளியது..!!

ஆதிரா தனது இலக்கை அடைய அத்தனை எளிதாக அனுமதிக்கவில்லை தாமிரா.. அவளும் அக்காவுடன் சேர்ந்தே மலைச்சரிவில் ஏறினாள்.. அக்காவின் காலுக்கடியில் ஊர்ந்து ஊர்ந்து சென்றாள்.. 'ஊஊ.. ஊஊ..' என்று ஊளையிட்டவாறு அவளை மிரட்ட முயன்றாள்..!!

"பார்த்து பார்த்து... கீழ விழுந்துடப்போற..!!" என்று கெக்கலித்தவாறே, ஆதிராவின் காலை பிடித்து படக்கென கீழே இழுத்தாள்.

"ஆஆஆஆஆ..!!!!" 

பிடிமானம் நழுவிய ஆதிரா, அலறிக்கொண்டே கீழே சரிந்தாள்.. சரசரவென நழுவி வந்தவள், பாறையிடுக்கில் முளைத்திருந்த ஒரு குற்றுச்செடியை பற்றிக்கொண்டாள்.. கால்கள் ரெண்டும் ஆதாரம் சிக்காமல் அலைபாய, அப்படியே அந்தரத்தில் ஊசலாடினாள்..!! 

இப்போது தாமிரா மெல்ல நகர்ந்து அக்காவின் அருகே சென்றாள்.. அவளது முகத்தை பார்த்து கோரமாக கனைத்தாள்..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

"தாமிராஆஆ.. தாமிராஆஆ ப்ளீஸ்டி..!!" ஆதிரா பதறிப்போய் கெஞ்சினாள்.

"விழப்போற.. விழப்போற.. பார்த்து பார்த்து..!! ஹாஹாஹாஹா..!!"

"ஆஆஆஆஆஆ...!!"

"விழுந்தா அவ்வளவுதான்.. என்னை மாதிரியே தலை உடைஞ்சு செத்து போயிருவ..!!"

"ஆஆஆஆஆஆ...!! முடியலடி..!!"

"அப்போ விழுந்துடு.. ஹாஹா..!! ரெண்டு பேரும் சேர்ந்து விழலாமா.. செத்து செத்து வெளையாடலாமா..?? ஹாஹாஹாஹா..!!"

"தாமிராஆஆஆஆஆ...!!!!!!!!" வேதனையோடு அலறினாள் ஆதிரா.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் தாமிரா.

ஒருவழியாக உடலை எக்கி.. கால்களை இன்னொரு பாறையில் அழுத்தமாக பதித்து.. ஆதிரா மீண்டும் மேல்நோக்கி முன்னேறினாள்..!! தாமிரா அவளை சீண்டிக்கொண்டே வந்தாள்.. அவளது கை,கால்களை இடறி விட்டாள்.. கூந்தல் மயிர்களை பற்றி இழுத்தாள்.. விகாரமாக இளித்து அவளை பயமுறுத்த முயன்றாள்..!! 

"ஆஆஆஆஆஆ...!!"

அவளது சீண்டலை பொறுத்துக்கொண்டே ஆதிரா அந்த மலரை நெருங்கினாள்.. கையெட்டும் தூரத்திற்கு அந்த மலர் வந்திருந்தது..!! ஒருகையால் பாறையை பற்றிக்கொண்டு.. இன்னொரு கையை நீட்டினாள்.. கைவிரல்களை விரித்தாள்.. அந்த மலரை பற்றினாள்..!! அதேநேரத்தில் அவளது கால் ஒன்று விழுக்கென்று வழுக்கிக்கொள்ள.. பிடிமானம் இழந்துபோய், அப்படியே கடகடவென கீழே உருண்டாள்.. அவளது தலை எதிலோ சென்று நச்சென்று மோத.. 

"ஆஆஆஆஆஆ...!!" வென்று அலறிக்கொண்டே சுயநினைவை இழந்தாள
நண்பரே அதிரா வை சற்று கிசு கிசு அல்லது சில சீண்டல்கள்... அதிரா வை செம்பியன் கூட செய்ய வைத்தால் கதை சூப்பர் அஹ்ஹ் க இருக்கும்... இது என் கோரிக்கை நண்பரே... இதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லவில்லை.... உங்களுக்கு விருப்பம் இருந்தால் இப்படி செய்யுங்கள்... இல்லையில் கதையை உங்கள் விருப்பத்திற்கு கொண்டு செல்லுங்கள்....
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by Sathishkumar - 01-04-2019, 09:35 AM



Users browsing this thread: 12 Guest(s)