நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#52
அத்தியாயம்:12


பூம்பொழில் டைரியிலிருந்து:

டிபன் பாக்ஸை திறந்தபோது அது காலியாக இருந்தது.அவன் வெகுளி தனத்தை நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டேன்.பயபுள்ள ஆர்வகோளாறில் பாக்ஸ் காலியாக இருப்பது கூட தெரியாமல் எடுத்துகிட்டு வந்துட்டானாக்கும் அப்பொழுதுதான் அவனுக்கு PHYSICS class எடுக்கும் சி.எஸ் ஸார் உள்ளே வந்தார்.

"என்னம்மா சாப்பிட்டியா,வெறும் பாக்ஸ வச்சிகிட்டு என்ன பண்ணிட்டு இருக்க" என்றார்.

நான் "ஒண்ணுமில்லை சார் சும்மாதான்" என்றேன்."சார்,நீங்க இப்போ என்ன கிளாசுக்கு போறீங்க"என கேட்டேன்.

அவர் "D2 க்கு போறேம்மா ஏன் கேக்குற"என்றார்

"சார்,கொஞ்சம் ஜெய்யை வரச்சொல்றீங்களா"என்றேன்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தபடி "சரிம்மா கண்டிப்பா வர சொல்றேன்"என்றார்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தபடி "சரிம்மா கண்டிப்பா வர சொல்றேன்"என்றார்.

அவர் சென்ற பதினைந்தாவது நிமிடம் அவன் உள்ளே பிரவேசித்தான்.கண்களில் குழப்பம் மிகுதியாக இருந்தது.

அவர் சென்ற பதினைந்தாவது நிமிடம் அவன் உள்ளே பிரவேசித்தான்.கண்களில் குழப்பம் மிகுதியாக இருந்தது.

எனக்கு அவனை பார்க்கும்போது சிரிப்பாக தான் வந்தது.

தலையை தொங்க போட்டுகொண்டு நின்றான் நான் அவனை சீண்டிபார்க்க விரும்பினேன்"இப்படி காலி பாக்ஸ கொடுக்கத்தான் இவ்வளோ ஆர்ப்பாட்டம் பண்ணியாப்பா"என்றேன். 

அவன் பாவமான குரலில் நான் சாப்பிடல என்றதும் அவனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியவில்லை என்றும்அதான் அவசரத்துல காலி பாக்ஸ தூக்கி வந்துவிட்டதாகவும் கூறினான்.அதை கேட்டதும் என் மனம் சந்தோசத்தில் துள்ளியது.

அவனைப் பற்றிய கெட்ட எண்ணங்கள் எதுவும் என் கண்களுக்கு தெரியவில்லை.பெண்களின் பலவீனமே இதுதான் தன் மீது ஒரு ஆண் அக்கறை எடுக்கும் போது அவனுக்காக அவள் எதையும் செய்ய துணிகிறாள்.

எனக்கு வெகுவாக பசித்தது எனவே "நான் இன்னும் சாப்பிடலை எனக்கு போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா"என்றேன்.

நான் சொன்னதுதான் தாமதம் அவன் அவ்வளவு உற்சாகமாக ஓடினான் எனக்காக என்னை சுற்றீ நடப்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது எனக்காக ஒருவன் இவ்வளவு செய்கிறானே என்று.அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது நான் அவனுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியை நான் அவனை அவ்வாறு எண்ணுவதே மாபெரும் தவறு.ஆனால் அவன் என் மீது வைத்துள்ள அதீதமான அன்பு என்னை நிலைகுலைய செய்தது.

சற்று நேரத்தில் சாப்பாடு வாங்கி கொண்டு வந்தான் ஒடிவந்திருந்தான் போலும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்து.

எனக்கு சந்தோசமாக இருந்தது.வாழ்க்கையில் என் அப்பாவுக்கு பிறகு எனக்காக கவலைபட ஒரு உயிர் இருக்கிறது என்ற நினைப்பு அதுவே அவன் மீது மேலும் என்னை ஈர்ப்பு கொள்ள வைத்தது.

அவன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்துவிட்டு சட்டை பாக்கெட்டிலிருந்து மாத்திரை ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்துவிட்டு "இது தலைவலிக்கு நான் கிஸ் பண்ணதும் உனக்கு தலைவலி வந்திருக்கும் என நினைத்துதான் கொண்டு வந்திருந்தேன்"என்றான்.

நான் கைகளை கட்டிகொண்டு அவனை ஒருமாதிரி பார்த்தேன்.அதிலே அவன் காலி ஆகியிருப்பான் போலும்.நான்"சரி அதை அந்த மேஜையில் வைத்து விட்டு கிளம்பு "என்றேன்.

அவனும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பினான்.ஆனால் எனக்கு அவனுடனே இருக்க வேண்டும் போல் இருந்தது.

"ஏய் கொஞ்சம் நில்லு" என்றேன்.அவன் பிரேக் போட்ட மாதிரி நின்றான்.

என்ன என்பதுபோல் என்னை பார்த்தான்.நான் அவனை ஈவனிங் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ண சொன்னேன்.நான் சொன்னதும் அவன் முகம் நூறு வாட்ஸ் பல்ப் போன்று பிரகாசமானது.சந்தோசமாக தலையசைத்து விட்டு சென்றான்.

மாலை எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் நான் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஆனால் அவன் நான் வரும் வரை கிளாஸ் வாசலிலே வெயிட் பண்ணி கொண்டிருந்தான்.

என்னையே ஒருமாதிரி பார்த்து கொண்டு,கால் கைகளை ஆட்டிகொண்டு, அங்கும் இங்கும் உலார்த்தி கொண்டு,அவனை பார்த்தாலே சிரிப்பாக வந்தது உதட்டில் அரும்பிய சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு பாடம் நடத்தி கொண்டிருந்தேன்.

நான் வெளியே வந்ததும் என் பின்னாலே குட்டி போட்ட பூனை மாதிரி ஓடிவந்தான்.நான்"உன்னை பஸ் ஸ்டாப்பில் தானே இருக்க சொன்னேன் ஏன் இங்கே வந்தே" என கேட்டேன்.

அதற்கு அவன் என்னையே பார்த்து கொண்டிருப்பதற்காக என கூறினான்.ஏன் என கேட்டதற்கு நான் மிக அழகாக இருப்பதாக கூறினான்.

அந்த கணம் என் உச்சி முதல் பாதம் வரை என்னை சுற்றி ஏதோ பட்டாம் பூச்சி பறப்பது போல் உணர்ந்தேன்
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 01-04-2019, 09:32 AM



Users browsing this thread: 1 Guest(s)