Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
186 ரன்கள் இலக்கு
186 ரன்களை சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர்.
பியூஷ்சாவ்லா வீசிய 4-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய தவண் 3-வது பந்தில் மிட் ஆப் திசையில் தூக்கி அடித்தபோது ரஸிலிடம் கேட்ச் கொடுத்து  16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார்.. ரஸல் வீசிய 6-வது ஓவரில் பிரித்வி ஷா ஒரு பவுண்டரி, சிக்ஸர் , குல்தீப் வீசிய 8-வது ஓவரில் அய்யர் ஒருபவுண்டரியும், பிரித்வி ஒரு சிக்ஸரும் விளாசி ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றனர்.
89 ரன்கள் கூட்டணி
குல்தீப் வீசிய 11-வது ஓவரில் அய்யர் சிக்ஸர் அடிக்க, அதைத் தொடர்ந்து பிரித்வி ஷா சிக்ஸர், பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரஸல் வீசிய 12-வது ஓவரின் கடைசிப்பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் அய்யர் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்ய, பிரித்வி ஷா கிடைக்கும் பந்துகளில் சிக்ஸரையும், பவுண்டிகளையும் விளாசினார். பெர்குஷன் வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, பிரசித் கிருஷ்ணா வீசிய 16-வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து பிரித்விஷா பட்டையக் கிளப்பினார்.
2 ஓவர்கள் 15ரன்கள்
கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இப்போது ஆட்டம் டெல்லி அணி பக்கமே செல்ல அதிகமாக வாய்ப்பிருந்தது. குல்தீப் வீசிய 18-வது ஓவரை வீசினார். சிக்ஸர் அடிக்க முயற்சித்து பந்த் 11ரன்களில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே குல்தீ்ப் விட்டுக்கொடுத்தார். அடுத்து இங்ராம் களமிறங்கினார்.
[Image: dineshjpg]
சதத்தை தவறவிட்ட பிரித்வி
19-வது ஓவரை பெர்குஷன் வீசினார். பிரித்வி ஷா 99 ரன்களில் களத்தில் இருந்தார். 4-வது பந்தை தூக்கி அடிக்க பிரித்வி ஷா முயற்சித்தார். ஆனால், பேட்டின் நுனியில் பட்டு தேர்ட் மேன் திசையில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்சாக மாறியது. 55 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து பிரித்வி ஷா(12பவுண்டரி, 3 சிக்ஸர்) ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு வெளியேறினார்.
6-க்கு 6
அடுத்து விஹாரி களமிறங்கினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணிநிச்சயம் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரை குல்தீப் வீசினார்.
தனது அனுபவமான பந்துவீச்சால் குல்தீப் விஹாரியையும், இங்ராமையும் திணறச் செய்தார். முதல் பந்தில் வாஹாரி ஒரு ரன்னும், 2-வது பந்தில் இங்ராம் 2 ரன்னும் சேர்த்தனர். அடுத்த ஒரு பந்தில் இங்ராம் ரன் சேர்க்கவில்லை, 4-வது பந்தில் இங்ராம் ஒரு ரன் சேர்த்தார். 5-வது பந்தை விஹாரி எதிர்கொண்டா். பந்தை தூக்கி அடிக்க  அது மிட்விக்கெட்டில் சாவ்லாவிடம் கேட்சாக மாறியது. விஹாரி 2 ரன்னில் வெளிேயறினார்.
[Image: delhijpg]
 
போட்டி “டை”
கடைசிப்பந்தில் 2 ரன்கள் டெல்லி அணியி்ன் வெற்றிக்கு தேவைப்பட்டது. இங்ராம் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடி 2-வது ரன்னுக்கு முயற்சித்தபோது, ரன்அவுட் செய்யப்பட்டார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185ரன்கள் டெல்லி அணி சேர்த்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட் செயத்து. ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் பேட் செய்தனர். கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினார். முதல் பந்தில் ரிஷப் பந்த் ஒரு ரன் சேர்த்தார். 2-வது பந்தில் அய்யர் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தை தூக்கி அடித்தபோது சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து அய்யர் ஆட்டமிழந்தார். அடுத்து பிரித்வி ஷா களமிறங்கினார். ரிஷப்பந்த் அடுத்த 3 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார். இதனால், டெல்லி அணி சூப்பர் ஓவரில் 10 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.
கொலகத்தா அணி தரப்பில் ரஸல், கார்த்திக் களமிறங்கினர், ரபாடா பந்துவீசினார். முதல் பந்தில் ரஸல் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை 3-வது பந்து யார்கராக உள்ளேவர ரஸல் க்ளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா ஒருரன்எடுத்தார். இரு பந்துகளையும் கட்டுக்கோப்பாக ரபாடா வீசியதால், கார்த்திக்கால் ரன் அடிக்கமுடியவில்லை. கொல்கத்தா அணி 7ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 31-03-2019, 09:52 AM



Users browsing this thread: 59 Guest(s)