08-03-2021, 07:27 AM
மறுநாள் காலை -
மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கதிர் லேசாகக் கண்விழித்துப் பார்த்தான். யாரோ அவனைத் திட்டிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. கண்களை நன்றாகத் திறந்து பார்த்தான்.
நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும்னு சொன்னேன். கொஞ்சமாவது அதை நினைச்சானா எருமை மாடு எருமை மாடு
நிஷா தன் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே ஓடி ஓடி புத்தகங்களை எடுத்துக்கொண்டிருந்தாள். குளித்து முடித்து, புடவை கட்டி தயாராகியிருந்தாள். இவன் எழுந்துவிட்டதைப் பார்த்ததும், சைகையால் வாட்சில் விரல் வைத்துக் காட்டிவிட்டு கீழே ஓடினாள்.
லட்சுமி அவளுக்கு சுற்றிப்போட்டுக்கொண்டிருக்க, அவள், நேற்று கதிர் நட்டுவைத்த செடியை பார்த்தாள். வெட்கத்தோடு நின்றாள். கீழே இறங்கி வந்த கதிர் நேராக போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். திருமணம் முடிவானதுமே பைக் மாறிவிட்டது. இப்போது என்பீல்டு.
நேரம் ஆகிவிட்டதால் நிஷா வேகம் வேகமாக வந்து அவன் பின்னால் உட்கார்ந்தாள். கதிரின் நாய் பின்னாலேயே ஓடி வந்தது. நிஷாவின் காலில் முகம் வைத்துத் தேய்த்துக்கொண்டு நின்றது.
போலாம் போலாம் - நிஷா அவன் முதுகில் அடுத்தடுத்துத் தட்டினாள்.
லட்சுமி அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றாள். நிஷா க்யூட்டாக... அழகாக இருந்தாள்.
பைக் சீறிப் பறந்தது.