Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் அதிரடி சோதனை!
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய நடத்திய சோதனை தொடர்ந்து வருகிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் இல்லத்துக்கு, நேற்றிரவு 11 மணியளவில் வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வீட்டை சோதனை செய்யவேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த திமுக வழக்கறிஞர் அணியினர், சோதனை நடத்துவதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
இதற்கு முறையான பதில் அளிக்கப்படாததால், வீட்டை சோதனையிடுவதற்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புறபட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 3 மணியளவில் மீண்டும் வந்த அதிகாரிகள், முறையான ஆவணங்களை காண்பித்து சோதனையைத் தொடங்கினர்.


விடிய விடிய சோதனை தொடர்ந்து வருகிறது. இதேபோல், வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியில், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் வீட்டிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவராஜ், தங்கள் வீட்டில் இருந்து எந்தவொரு ஆவணமோ அல்லது பணமோ கைப்பற்றப்படவில்லை என விளக்கமளித்தார்.

இதனிடையே, தேர்தல் பறக்கும் படை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, அதிகாலையில் வருமானவரித் துறையைச் சேர்ந்த  3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்கு விரைந்தனர். இதையடுத்து, 8 அதிகாரிகள் ஒன்று சேர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 30-03-2019, 10:17 AM



Users browsing this thread: 100 Guest(s)