30-03-2019, 09:45 AM
![[Image: nnn5psjg_super-deluxe-review_625x300_29_March_19.jpg]](https://c.ndtvimg.com/2019-03/nnn5psjg_super-deluxe-review_625x300_29_March_19.jpg)
- நடிகர்கள்:
விஜய்சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் ஃபாசில், காயத்ரி
- இயக்குனர்:
தியாகராஜன் குமாரராஜா
- பாடல்கள்:
யுவன் ஷங்கர் ராஜா
நியாயம் வேறு நடைமுறை வேறு, தனிமனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை அனைத்திற்கும் சகமனித உயிரை ஒருவரை ஒருவர் தனக்கானது என சொந்தம் கொண்டாடுவதும், காமப் பொருளாக உடலை பார்ப்பதும்தான் என்பதை இப்படம் பேசியிருக்கிறது.
முன்னால் காதலனை கணவன் வீட்டில் இல்லாதபோது வீட்டிற்கு அழைக்கிறார் வேம்பு(சமந்தா). அப்போது இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். இரண்டாவது முறை தொடங்கி உடலுறவில் ஈடுபடும் போது இறந்து விடுகிறான் முன்னால் காதலன்.
இந்த நேரத்தில் கனவன் வீட்டிற்கு வருகிறான். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது அவன் இறந்து விட்டான் என்று தன்னுடைய கனவனிடம் நேர்மையாக உண்மையை சொல்லும் கதாபாத்திரமாக சமந்தா நடித்திருக்கிறார்.
சமந்தாவின் கணவர் இயல்பான கணவர் கதாபாத்திரத்தில் இருந்து மாறுபட்டிருக்கிறார். உருவாக்கப்பட்டது போல் இருந்தது. தெளிவான கிறுக்கனாக தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில். இறந்தவனின் உடலை யாருக்கும் தெரியாமல் அவர்கள் அதை மறைக்க முயற்சி செய்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பது கதையின் இன்னொரு ஸ்வாரஸயம்.
ஆபாச படம் பார்க்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் நண்பனின் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த ஆபாச வீடியோவில் மாணவர்களில் ஒருவனின் தாய் அந்த படத்தில் நடிக்கிறார். இதை பார்த்த அந்த மாணவன் கோபத்தில் டிவியை உடைத்துவிட்டு தாயை கொலை செய்ய புறப்பட்டு செல்கிறான். அப்போது விபத்து ஏற்பட்டு, கொண்டு செல்லும் கொலை கருவியால் தாக்குதலுக்கு உட்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார்.
உடைந்த டிவிக்கு பதிலாக மாற்று டிவியை மாலைக்குள் வாங்கி வைக்கும் கட்டாயத்தில் மற்ற மாணவர்கள் இறங்குகிறார்கள். பணத்திற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது படத்தின் இன்னொரு கதை.
திருமணமாகி குழந்தை பெற்று ஒருநாள் இரவில் வீட்டை விட்டு வெளியேறும் விஜய்சேதுபதி 8 ஆண்டுகள் கழித்து தன்வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஆணாக சென்றவர் திருநங்கையாக திரும்புகிறார். தன்னுடைய மகனுடன் ராசுகுட்டியுடன் பள்ளிக்கு செல்லும் ஷில்பா (விஜய்சேதுபதி) எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பது படத்தின் இன்னொரு திரைக்கதை.
சுனாமியில் லட்சக்கணக்கில் மக்கள் இறந்து போனார்கள். ஒரு சிலையை பிடித்துக்கொண்டு உயிர் தப்பும் மிஸ்கின் அது கிருஸ்துவ சிலை என்பதால் கிருஸ்த்துவ கடவுல்தான் தன்னை காப்பாற்றினார் என்று தீவிர கிருஸ்தவ மத போதகராக நடித்திருக்கிறார். இவருடைய மகன்தான் தீவிர அறுவைசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கம் பள்ளி மாணவன்.
இந்த நான்கு திரைக்கதையும் ஒன்றோடொன்று எப்படி இணைகிறது. இத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் மய்யக்கரு என்ன என்பதுதான் படத்தில் போடப்பட்டிருக்கும் முடிச்சு.
.வாழக்கையில் நியாயம் வேறு நடைமுறை வேறு என்று படத்தில் இடம் பெறும் வசனத்தை போலவே நியாயமும், நடைமுறையும், நடைமுறை சிக்களும், நியாயத்தின் சிக்கலும் எப்படி இருப்பினும் அவை அனைத்தும் வாழ்க்கையின் தேவைகளில் ஒன்றுதான். ஆனால் அவை அனைத்தும் கடந்துபோக வேண்டியவைதான். காலம் சிறந்த மருந்து, காலம் சிறந்த அனுபவம் என்பதை முடிவுகள் நமக்கு செல்கின்றன.
அரசியல் ரீதியான வசனங்கள் பல இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அவை தற்போதைய அரசியல் களத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. இருந்த போதிலும் பல்வேறு அபத்தங்களும் இப்படத்தில் இடம் பெறுகிறது.
தேசியமும், மொழிப் பற்றும், மதமும், சாதியும் ஒன்றுதான் என்று சொல்லப்படும் வசனங்கள் அடிப்படை சாதிய புரிதல் இல்லாத அரைகுறை தத்துவத்தில் இருந்து வெளியான வெளிபாடாக இருந்தது.
திருநங்கைகள் வாழ்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை துள்ளியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும் இந்த சமூகம் இன்னும் திருநங்கைகளை ஒரு குறிப்பிட்ட எண்ணை செல்லி அழைத்து கிண்டல் செய்யும் போக்கு இதில் இடம் பெற்றிருக்கிறது.
காயத்ரி அவருக்கான கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக முடித்துக்கொடுத்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும், பக்ஸ் அவருக்கான கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார். அப்பட்டமாக நடைமுறையில் இருக்கும் சிக்கல் என்னவாக இருக்கிறது என்பதை அவரது நடிப்பு காட்டுகிறது.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் இன்னொரு பலம். திரைக்கதை, வசனம், இசை, இவை அனைத்தும் சலிப்பை ஏற்படுத்தாமல் படத்தோடு நம்மை ஒன்றிட வைக்கிறது. எல்லா காட்சிகளிலும் அல்ல ஒரு சில காட்சிகளில். ஏனென்றால் இப்படி ஒரு சம்பவம் நம்முடைய வாழ்விலும் ஏற்பட்டிருக்க கூடும். அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு இவ்வாறு நடந்திருக்கும் என்பதால் கதயோடு ஒன்றிடமுடிகிறது. மொத்தத்தில் இது தத்துவப்படம் அல்ல தத்துவத்தை தாண்டும் படம்