நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#61
கிட்டத்தட்ட அவளிடம் பிச்சை கேட்பது போல் அவளிடம் காதலை யாசகமாகக் கேட்டுக்கொண்டிருந்தவனை தாண்டி எப்படி வீட்டுக்குப் போவது என்று திகைத்தாள் அவள்.

அவளை நகரவும் விடவில்லை. எப்படி அவனை விலக்கிவிட்டுப் போவது என்று செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.
அவன் பைத்தியக்காரனைப் போல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

அத்துடன் அவன் பேசப் பேசவே அவளுக்கு மனதில் தோன்றிய எண்ணம் வேறு திகைப்பை உண்டாக்கியது.

திடீரென்று அவளது முகம் பிரகாசமானது.

அவள் தான் பேசிய உடன் மனம் மாறிவிட்டாள் என்று அவன் சந்தோசமடைந்தான்.

ஆனால் அவனைத் தாண்டி அவளது பார்வை சென்றது.

அங்கே மகேந்திரனின் கார் வந்து நின்றது.

அவன் தன்னைக் காண வரவில்லையோ? தான் சந்தோசப்பட்டது வீணாகிப் போய்விட்டதோ? என்று அவள் கலங்கிக்கொண்டிருக்கும்போதே அவன் அவளை நோக்கிதான் வந்துகொண்டிருந்தான்.

அவன் தன்னை நோக்கிதான் வருகிறான் என்றதும் அவள் தன்னை மறந்தாள். அவசரமாய் அவனருகே ஓடியவள்

“மகேன். என்னை அழைக்கத்தான் வந்தீங்களா?” என்று கேட்டவாறே அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.

அவன் அவளையேப் பார்த்தான். பிறகு தன் கையைப் பற்றியிருந்த அவளது கையையும் பார்த்தான்.

பிறகு தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவள் காரின் முன்பக்கம் ஏறி அமர அவன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அவள் முரளியைப் பார்த்தாள். அவனமது சிவந்த முகம் கருத்துக்கிடந்தது

அவனுக்குத் தேவைதான் என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்தவாறே அமர்ந்திருந்தவளுக்கு சுரீரென்று உரைத்தது.

மகேந்திரன் என்ன வேலையாக வந்தானோ? அவனோடு தொற்றிக்கொண்டு தான் கிளம்பியதால் அவனும் வேறு வழியில்லாமல் கிளம்பிவிட்டான் என்று நினைத்தவள் அவனை தயக்கத்துடன் பார்த்தாள்.

“சாரி மகேந்திரன் சார். அவன்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக உங்களோட ஏறிட்டேன். நீங்க ஏதாவது வேலையா வந்திருப்பீங்க. நீங்க ஏதாவது பஸ் ஸ்டாப்பில் என்னை இறக்கி விட்டீங்கன்னா நான் வீட்டுக்குப் போயிடுவேன்.”

அவன் அவளைத் திரும்பிப் பார்த்த பார்வையில் அத்தனை வெப்பம் இருந்தது. அந்த தகிப்பினை தாங்கிக்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள்.

அவனது கோபம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது.
அவன் எதற்காகக் கோபப்படுகிறான்? என்று தெரியாமல் அவள் விழித்தாள்

தொடரும் . . .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 29-03-2019, 10:21 AM



Users browsing this thread: 6 Guest(s)