நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#59
அவள் ‘இல்லை’ என தலையாட்டினாள்.

அவள் அருகே அமர்ந்தவர் அவளது தலையைக் கோதிவிட்டார்.
“காலை நல்லா நீட்டி படு. தூங்குவதற்கு முயற்சி பண்ணு.”

அதன் பிறகு அவர் அவளிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.

அவளது தலையைக் கோதியவாறே அவளது தோளிலும் மெல்லத் தட்டிக்கொடுத்தார்.

அத்துடன் மெல்லிசையும் சேர்ந்தது. அதனால் அவளுக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது.

அவள் தூங்கிவிட்டாள் என்று தெரிந்த பிறகே அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

அறையின் கதவை மெதுவாக சாற்றிவைத்துவிட்டு வெளியேறினார்.

ல்லூரிக்கு வந்துவிட்டாலும் யுகேந்திரனால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

மதிய நேரமே கிளம்பிவிட்டான்.

அவனைக் கண்டதும் வனிதாமணிக்கு வியப்பு ஏதும் இல்லை.

யுகேந்திரனின் இயல்பே ஒருத்தர் மேல் பாசம் வைத்துவிட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.

கிருஷ்ணவேணி இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் வரவேற்பறையில் வந்து அமர்ந்தான்.

“யுகா. நீ சாப்பிட வா.”
இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். கிருஷ்ணவேணியே கண் விழித்து வரட்டும் என்று அவன் காத்திருந்தான்.

கிருஷ்ணவேணி மெதுவாக கண்விழித்தாள்.

இப்போது அவள் உடல்நிலை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. குளித்தால் தேவலாம் போன்றிருக்க குளியல் அறைக்குள் புகுந்தாள்.

குளித்துவிட்டு வந்தவளுக்கு அங்கிருந்த மேசையில் யுகேந்திரன் வாங்கி வந்திருந்த குளிர்பானங்கள் இருந்தன.

தான் வயிற்றுவலியால் துடிக்கும்போது அதைவிட அதிகமாய் யுகேந்திரன் துடித்ததை அந்த நிலையிலும் அவள் கவனித்திருந்தாள்.

அவன் மட்டுமா?

வனிதாமணி அவளுக்காக கசாயம் வைத்துக்கொடுத்து தான் உறங்கும் வரையில் அருகிலேயே அமர்ந்து ஆறுதலாய் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தாரே?

இதுவரை அவள் வாழ்வில் இந்த இதம் கிடைத்ததில்லை.

உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.

“என்னடாம்மா? இப்ப எப்படியிருக்கு?”

“நல்லாருக்கேன் அத்தே?”

“வா. சாப்பிட்டுவிட்டு வரலாம்.”

அவள் அருகிலேயே அமர்ந்து அவளுக்கு உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தார்.

சாப்பிட்டு முடித்த உடன் அவளும் வரவேற்பறையில் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு யுகேந்திரனைப் பார்க்கவே வெட்கமாய் இருந்தது.

எந்த அளவிற்கு மற்றவர்களைப் பதற வைத்துவிட்டாள்.

அது தெரிந்தோ என்னவோ அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சியைப் பற்றி அவளிடம் விமர்சனம் செய்து சூழ்நிலையை கலகலப்பாக்கினான்.

மாலை நேரம் அவர்கள் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

வனிதாமணியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

“மன்னிச்சிடுங்க அத்தே. எல்லாரையும் போட்டு படுத்தி எடுத்திட்டேன். எப்பவாவது இந்த மாதிரி தாங்க முடியாத வலி உண்டாகிடுது.”

“அதற்கு ஏன்மா மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசறே? சொந்தபந்தம்னா சந்தோசத்தில் மட்டும்தான் பங்கெடுத்துக்கனுமா? இந்த மாதிரி நேரத்தில்தான் அனுசரணையா இருக்கனும். இனி நீ என்ன பண்றேன்னா குளியல் வருவதற்கு முன்பே அன்னாசி பழம் பப்பாளி பழம்னு சாப்பிடு.”

“சரித்தே.”

அத்துடன் அதை மறந்துவிட்டு மற்ற விசயங்களை கலகலப்புடன் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அப்போது மகேந்திரனின் கார் வருவதைப் பார்த்த வனிதாமணி உள்ளே சென்றார்.

“அப்ப வயித்துவலின்னு சொல்லிட்டு நாடகம் ஆடினியா?”

சாருலதாவின் குரோதக்குரலில் திரும்பிப் பார்த்தனர்.

அவளும் மகேந்திரனோடு வந்திருக்கிறாள். அவர்களை தோட்டத்தில் பார்த்த உடன் உள்ளே போகாமல் அவர்களிடம் வம்பிழுக்க வந்துவிட்டாள்.

“நாடகம் போடறது எல்லாம் உன்னோட வேலை.”

யுகேந்திரன் கோபத்துடன் அவளுக்குப் பதில் சொன்னான்.

“நானா வயித்துவலின்னு சொல்லி படுத்துக்கிடந்தேன்?”

யுகேந்திரன் ஏதோ சொல்லப்போக கிருஷ்ணவேணி அவனைக் கையமர்த்தினாள்.



சாருலதா வேண்டுமென்றே பேசுகிறாள் என்று அவளுக்குப் புரிந்தது.
அவளுக்கு ஏனோ தன்னைப் பிடிக்கவில்லை. அது ஏனென்றும் தெரியவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 29-03-2019, 10:16 AM



Users browsing this thread: 19 Guest(s)