29-03-2019, 09:58 AM
பும்ரா ஆட்டநாயகன்
பும்ரா தன்னை மீண்டும் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக நிரூபித்துவி்ட்டார். தான் வீசிய கடைசி 3 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து , கோலி, ஹெட்மயர், கிராண்ட்ஹோம் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை நெருக்கடிக்கு தள்ளினார். டிவில்லியர்ஸை நிற்கவைத்து படம் காட்டினார் பும்ரா. கடைசி நேரத்தில் பும்ரா வீசிய கட்டுக்கோப்பான பந்துவீச்சு வெற்றியை ஆர்சிபி அணிக்கு மேலும் சிக்கலாக்கியது. ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
கோலி சாதனை
விராட் கோலி இந்த போட்டியில் 46 ரன்கள் சேர்த்தபோது, ஐபிஎல் வராலாற்றில் 5 ஆயிரம் ரன்கள் சேர்த்த 2-வது வீரர் எனும் பெருமையைப் ெபற்றார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை எட்டியநிலையில் கோலி 157 இன்னி்ங்ஸ்களில் எட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், டிவில்லியர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் 4 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார்.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டீகாக் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்த்து சைனி, உமேஷ், சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். பவர்-ப்ளேயில் 52 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
7-வது ஓவரை சாஹல் வீசியபோது முதல் விக்கெட்டை இழந்தது மும்பை அணி. க்ளீன் போல்டாகிய டீகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யாதவ், ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை கூட்டினர்.
ரோஹித் ஆட்டமிழப்பு
உமேஷ்யாதவ் வீசிய 11-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் (8பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்து வெளியேறினார். அடுத்து யுவராஜ் சிங் களமிறங்கினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது