Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
“காதல் தோல்வியும் ஒரு அனுபவம்தான்” - ஜுலை காற்றில் திரை விமர்சனம்

[Image: 2nqpa46o_july-kaatril_625x300_16_March_19.jpg]
  • நடிகர்கள்:
    அனந்த்நாத், அஞ்சு குரியண், சம்யுக்தா மேனன், இன்னும் பலர்
  • இயக்குனர்:
    கே.சி. சுந்தரம்
  • தயாரிப்பாளர்:
    காவ்யா எண்டர்டெயின்மெண்ட்ஸ்
  • பாடல்கள்:
    ஜோஷ்வா ஸ்ரீதர்

ஒருதலைகாதல், காதல் தோல்வி இதனால் தாடி வளர்த்துக்கொண்டு, காதலித்த பெண்ணை வசை பாடுவது போன்ற எந்தவித பிற்போக்கு தனமும் இல்லாத ஒரு காதல் தோல்விக்கான படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.சி. சுந்தரம்.  ஆனால் படம் முற்போக்குக்கான படமா என்றால் இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாங்களில்  அபத்தம் நிறைந்து இருப்பதால் முற்போக்கு படமும் அல்ல. நம் சமூகம் இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளாத ஒரு கலாச்சாரத்தில் நடைபெறும் காதல் தோல்விகளை அடுக்கும் திரைப்படம்.
நாம் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்துதான் வாழக்கையின் பல்வேறு அனுபவங்களை நாம் பெறுகிறோம். அதுதான் இந்த படம் சொல்லும் மய்யக்கருத்து.
ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார் அனந்த்நாக். தான் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு சுதந்திரமான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். அந்த நேரத்தில்தான் அஞ்சு குரியனை சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களது காதல் நிச்சயம் வரை செல்கிறது. பணி நிமித்தமாக அஞ்சு குரியன் பெங்களூர் சென்று விடுகிறார்.
அந்த நேரத்தில் சம்யுக்தா மேனனை சந்திக்கிறார் தான் எதிர்பார்த்த கனவு தேவதை போலவே அவர் இருக்கிறார். முழு காதல் இல்லாத அஞ்சு குரியணை திருமணம் செய்துக்கொண்டு பொய்யாக வாழ்வதைவிட தனக்கு பிடித்த சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் அனந்த்நாக்.
இதனால் அஞ்சு குரியன் சென்னை வந்ததும் பிரிந்து விடலாம்  என்று அதற்கான காரணத்தை சொல்லி இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிறகு சம்யுக்தாவும், அனந்த்நாக்கும் காதலிக்கிறார்கள். சம்யுக்தா தனிமனித சுதந்திரத்தை விரும்பும் பெண்ணாக இருக்கிறார் அதனால் தனக்கான சுதந்திரம் ஒரு போதும் தன்னுடைய காதலனால் உடையக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அனந்த்நாத் அதை உடைக்கிறார் இதனால் சம்யுக்தா இந்த காதல் சரிபட்டு வராது என்று கூறி அனந்த்நாக்கை விட்டு பிரிகிறார். காதல் பிரிவில் இருந்து விடுபட கோவா வரை பயணம் மேற்கொள்கிறார் அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
தனிமனிதனுடைய வாழ்க்கையில் ஒரு  காதல் தோல்விக்கு பிறகு இன்னொரு காதல் வருவது என்பது இயல்பானது என்பதும் வாழ்கை ஒரு பயணம் போன்றது என்பதே படம் சொல்ல வரும் கருத்து. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் திணிக்கப்பட்டிருக்கக்கூடிய சினிமா காதல் போல் இல்லாமல் இயல்பாக கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
கதாநாயகன் முதலில் காதலிக்கும் அஞ்சு குரியனை உன் மீது முழுமையான காதல் இல்லை என்று நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு சொல்வது அபத்தம்.  அஞ்சு குரியன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தன்மையான பேச்சு, எளிமையான அழகு என அவருடைய கதாபாத்திரம் நம் மனதில் மிக ஆழமாக பதிகிறது. இப்படபட்ட பெண்ணை ஒரு மொக்கை காரணம் காட்டி தனக்கு பொருத்தமில்லாதவர் என்று அனந்த்நாக் சொல்லும் போது கோபம்தான் வருகிறது. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்சினிமாவில் அஞ்சு குரியன் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வாய்ப்பிருக்கிறது.
புகைப்படக்கலைஞராக வரும் சம்யுக்தா மாடர்ன் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். தனிமனித சுதந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உடையவராக இருக்கிறார் சம்யுக்தா. அதன் அடிப்படையில் தன்னுடைய சுதந்திரத்திற்கு யார் முட்டுகட்டை இட்டாலும் அதை விரும்பாதவராக சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பனாக வரும் சதீஷ் வழக்கம் போல் நடித்து சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஜோஷ்வா இசையில் காற்றே..காற்றே…படல் மட்டும்தான் நினைவில் நிர்க்கிறது.
காதலன் காதலிப்பதற்கான காரணத்தை சொல்வதற்கும், காதலி இந்த காதல் வேண்டாம் என்று சொல்வதற்கும் தனித்தனியோ சொல்லி படத்தை நீண்ட நேரம் இழுப்பறி செய்திருக்கிறார் இயக்குநர்.
காதலித்து விட்டு பிரிவதற்கான சப்பை கட்டு காரணங்களில் முகம் சுளிக்க வைக்கிறது சில காட்சிகள். காதல் தோல்வி, ஒருதலை காதல் போன்ற விஷயங்களில் நேர்மை தன்மையோடு எடுத்திருக்கிறார் இயக்குநர் அந்த வகையில் பாராட்டை பெறுகிறார். ஒருவரை ஒருவர் சமரசம் இல்லாத ஈகோவால் காதல் பயணம் முடியாமல் நீள்கிறது ஜுலை காற்றில்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 29-03-2019, 09:49 AM



Users browsing this thread: 2 Guest(s)