Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
8.40 கோடி ரூபாய்க்கு 7 விதமாகப் பந்தை ஸ்பின் செய்யும் மிஸ்ட்டரி புகழ் வருண் சக்ரவர்த்தி தன் முதல் ஓவரை வீச வந்தார். நீ படிச்ச மிஸ்ட்டரி ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்பது போல், சீனியர் மிஸ்ட்டரி ஸ்பின்னரான சுனில் நரைன் அந்த ஓவரில் மூன்று சிக்ஸ் விளாசினார். நாங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சு என்பது போல், லின்னும் நரைனும் ஆட்டமிழக்க ராபின் உத்தப்பாவுடன், ஜோடி சேர்ந்தார் ரானா. `ஐ ஜாலி அஷ்வின் அண்ணா ஓவர்' என்பது போல் ஜாலி மோடுக்குச் சென்றார் ரானா. அவர் வீசும் எல்லா ஓவரிலும் சிக்ஸ். அதுவும் அஷ்வினின் நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸ். அஷ்வின் 3 ரன்களில் அரைசதம் வாங்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 4-0-47-0

11 பேர் தான் ஒரு போட்டிக்கு என்றாலும், ஒரு கேப்டன் அணியை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், டி20 போட்டிகளில் ஆறாவது பௌவுலர் ஆப்சன் இல்லாமல் கூட அணியைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அஷ்வின், கோலி போன்றவர்கள் உணர்வதே இல்லை. எல்லா பௌவுலர்களையும், ரானாவும் ராபியும் அடித்து வெளுக்க, ஆட்கள் பற்றாக்குறையால் பார்ட் டைமரான மந்தீப் சிங்கை பந்து வீச அழைத்தார் அஷ்வின். வாய் மேல் பலன். அந்த ஓவரிலும் 18 ரன்கள். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரானா, இறுதியாக 63 ரன்களுக்கு வருண் பந்தில் ஆட்டமிழந்தார். 63 (34b 2x4 7x6) SR: 185.29 . அடுத்து வர இருப்பது ரஸல் என்பதால், ரசிகர்கள் அவுட்டுக்கு சோக ஸ்மைலிக்கள் கூட போடவில்லை.



[Image: AP19086590217198_11125.jpg]
மூன்றாவது ஓவரில் ஷமியின் யார்க்கர் லைன் பந்துகளில் அத்தனை துல்லியம். உத்தப்பா, ரஸல் இருவருமே திணறினர். அந்த ஓவரின் ஐந்தாவது பால், மற்றுமோர் அட்டகாசமான யார்க்கர். ஒட்டுமொத்த பஞ்சாபும் துள்ளிக்குதிக்க, ரஸல் அவுட். ஆனால், அங்குதான் கர்மா என்பது மன்கட் விதி ரூபத்தில் வந்தது. போன மேட்ச் ரூல்ஸ்த்தான நான் ஃபாலோ பண்ணினேன் என தம்ஸ் அப் காட்டிய அஷ்வினுக்கு கிரிக்கெட்டின் மற்றுமொரு முக்கியமான விதி போட்டுத்தாக்கியது. இன்சைட் தி சர்க்கிளில் மூன்று வீரர்களை மட்டுமே அஷ்வின் நிறுத்தியிருந்தார், குறைந்தது நான்கு வீரர்களாவது இருக்க வேண்டும். (சொல்லவேயில்ல!) நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப வேண்டிய ரஸலுக்கு அடித்தது ஜாக்பாட். 17 ஓவரில் 163/3 என இருந்த ஸ்கோர் முற்றிலுமாக மாறியது இதற்குப் பிறகு தான். ரஸல்லின் ஸ்டிரைக் ரேட் ஸ்பின்னர்களிடம் 138, அதே பேஸ் பௌலர்களிடம் 180. ஆனால், அஷ்வின் பேஸர்களை மட்டுமே தொடர்ந்து இறக்கினார்.

2- 0- 7 -0 என இருந்த ஆண்டிரூயூ டையின் அடுத்த ஓவரில் 22 ரன்கள். ஷமியின் கடைசி ஓவரில் 25 ரன்கள். அதில் ஹாட்ரிக் சிக்ஸும் அடங்கும். மூன்றாவது ஓவரை அவ்வளவு ஃபெர்பெக்ட்டாக வீசிய ஷமி, இதில் வீசியதெல்லாம் ,மரண லெவல் ஓபிக்கள். எதற்கு அத்தனை புல் டாஸ்!. யார்க்கர் மிஸ்ஸாகிறது என்றாலும், அவன்தான் அடிக்கிறது தெரியுதுல்ல அப்புறம் மறுக்கா மறுக்கா ஃபுல் டாஸ் போடுவதெல்லாம்...

 ரஸல் அடித்த சில சிக்ஸ் எல்லாம் இது ஈடன் கார்டன் தானா என்பதை கேள்விக்குள்ளாக்கியது. இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான ஈடன் கார்டனில் அப்படிச் சின்ன சிக்ஸ் எல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் மயாங்க் அகர்வால் அடித்த லாங் லெக் 61 மீட்டர் என்பது வேறு கதை. அரைசதம் அடிக்கக்கூடாது என ஏதேனும் சபதம் எடுத்திருக்கிறாரோ என்னவோ, இதிலும் முதல் போட்டியை  (49* 19 பந்துகள் 4x4 4x6 ) போலவே 48 ரன்களுக்கு அவுட். 48 (17b 3x4 5x6) SR: 282.35 . இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் அடித்தது. கடைசி 19 பந்துகளில் 56 ரன்களை வாரி வழங்கியிருந்தது பஞ்சாப்.
[Image: SHAMI_11495.PNG]
ஷமி டூ ரஸல்
கெயில், அதிரடி சரவெடி ராகுல், சர்பராஸ், மயாங்க் அகர்வால் என ராயல் சேலஞ்சர்ஸின் பேட்டிங் ஆர்டர் அப்படியே பஞ்சாபுக்கு இறங்கியது. அங்கே அவர்கள் என்ன செய்வார்களோ அதையேதான் இங்கு செய்தார்கள். நம்மள வேற ரொம்ப நம்பறாய்ங்களோ என்னும் அதீத பொறுப்புணர்வுடன் இறங்கினார் கெய்ல். பஞ்சாபில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னுக்கு வெளியேற, ஒன் டவுனில் இறங்கினார் மயாங்க் அகர்வால். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 29-03-2019, 09:41 AM



Users browsing this thread: 37 Guest(s)