screw driver ஸ்டோரீஸ்
சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விஷயங்களுக்கென ஜாலியாக விளையாடிய ஒரு விளையாட்டை.. இப்போது வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற ஒரு பெரிய விஷயத்துக்காக, அக்காவும் தங்கையும் ஆடத் துணிந்திருந்தார்கள்..!! இருவரும் பரபரவென அந்த மலையில் ஏறினார்கள்..!! பாறைகளில் தங்கள் கைவிரல்களை அழுந்தப் பதித்து.. உடலை எக்கி எக்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தார்கள்..!!

இருவரிலும் தாமிராதான் மிக வேகமாக இருந்தாள்.. அவளது வேகத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை..!! தங்கையின் வேகத்தை பார்த்து ஆதிரா மிரண்டுபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. அவளது காலடியை தாண்டி இவளால் மேலே முன்னேற முடியவில்லை.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய இடைவெளி.. இந்த வேகத்தில் சென்றால், சீக்கிரமே அந்த மலரை தாமிரா கைப்பற்றிவிடுவாள் என்று தோன்றியது..!! தாமிரா விட்டுக்கொடுப்பதைத்தான் இத்தனை நாளாய் ஆதிரா பார்த்திருக்கிறாள்.. முதன்முறையாக தனக்கு சரிக்கு சரி போட்டியிடுவதை, அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

அக்காவும், தங்கையும் இப்போது தளப்பரப்பில் இருந்து பதினைந்து, இருபது அடி உயரத்திற்கு சென்றிருந்தனர்.. அந்த மலர் நீண்டிருந்த பாறையிடுக்கின் வெகு அருகே நகர்ந்திருந்தனர்..!! தாமிராதான் அந்த மலருக்கு மிக நெருக்கமாக இருந்தாள்.. அவளது பாதத்துக்கு நெருக்கமாக ஆதிரா..!! 

தாமிரா கையை நீட்டி அந்த மலரை பறிக்க முனைகையில்தான் அது நடந்தது.. பாசி படர்ந்திருந்த ஒரு பாறைப்பரப்பில் தாமிராவின் வலதுகால் அழுத்தமாக அமர, அப்படியே விழுக்கென்று வழுக்கிக்கொண்டது..!! 

"ஆஆஆஆஆஆஆஆ..!!!!" 

வழுக்கிய வேகத்தில் அவளது கைகள் பிடிமானத்தை இழந்துபோக.. சர்ரென கீழே சரிந்தாள் தாமிரா..!! தன்னை பின்தொடர்ந்து மேல்வந்துகொண்டிருந்த அக்காவின் மீது சென்று தொம்மென மோதினாள்..!! தங்கை வந்து இடித்ததில் ஆதிராவும் நிலைகுலைந்தாள்.. பாறையை பற்றியிருந்த அவளது பிடியும் விட்டுப்போக, தாமிராவுடன் சேர்ந்து தானும் கீழே சரிந்தாள்..!! 

"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"

இருவரும் அந்த இருபது அடி உயர சரிவில் இருந்து கடகடவென கீழே உருண்டார்கள்..!! அவர்களது முகம், கை, கால் எல்லாம் கரடுமுரடான பாறையில் உராய்ந்து சிராய்த்துக்கொள்ள.. சரசரவென உருண்டு உருண்டு தளப்பரப்பிற்கு வந்தார்கள்..!! தளப்பரப்பின் அந்தப்பக்கம் ஆயிரத்து ஐநூறு அடி உயர சரேல் பள்ளத்தாக்கு.. பள்ளத்தாக்கின் அடியில் குழலாறு..!! யாரும் கவனமில்லாமல் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக எழுப்பப்பட்டிருந்த.. இரும்புக்குழாய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு தடுப்புச்சுவர்..!! உருண்டவேகத்தில் அந்த தடுப்புச்சுவரை சென்று டமாரென்று மோதினார்கள் இருவரும்..!!

"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"

இற்றுப்போன ஒரு இரும்புக்குழாய் படாரென்று உடைந்துகொள்ள.. அந்த இடைவெளியின் வழியே பள்ளத்தாக்குக்குள் சரிந்தாள் தாமிரா.. அவளை பின்தொடர்ந்து வந்த ஆதிராவின் கைக்குள் வலுவான ஒரு பிடிமானம் சிக்கிக்கொள்ள, இன்னொரு கையால் தங்கையின் கையை எட்டி பிடித்தாள்..!! 

"ஆஆஆஆஆஆஆஆ..!!!!"

ஆதிரா இப்போது தளப்பரப்பில் ஓரளவுக்கு வசதியாக கிடந்தாள்.. அவளது ஒருகை தடியான ஒரு இரும்புக்குழாயை இறுகப் பற்றியிருந்தது.. இன்னொரு கை தாமிராவின் இடதுகையை இழுத்து பிடித்திருந்தது..!! தாமிரா மட்டும் ஆயிரத்து ஐநூறு அடி மலைச்சரிவில் அப்படியும் இப்படியுமாக அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.. அக்கா தனது கையை பற்றியிருக்க, இவளும் அவளது கையை அழுந்தப் பற்றியவாறு தொங்கிக்கொண்டிருந்தாள்.!!

"அக்காஆஆ.. அக்காஆஆ..!!!!" பயத்தில் மிரண்டுபோய் அலறினாள்.

"தாமிராஆஆஆ..!!!" தங்கையின் எடை தந்த வேதனையுடன் பற்களை கடித்து கத்தினாள் ஆதிரா.

"மே..மேல தூக்குக்கா.. மேல தூக்கு..!!"

"மு..முடியலடி.. கஷ்டமா இருக்கு..!!"

"கொஞ்சம்க்கா.. ட்ரை பண்ணு...!!"

"இ..இருடி..!!"

"விழுந்துருவேன் போல இருக்குக்கா.. சீக்கிரம்..!!"

"கொஞ்சம் இருடி..!!"

ஆதிரா இப்போது தனது கால் ஒன்றை சற்றே மடக்கினாள்.. தனது நிலையை உறுதியாக்கிக்கொண்டு தங்கையை மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்..!! அப்போதுதான்.. அவளது மனநிலையில் அந்த மாற்றம்..!!

கூட்டம் கூட்டமாய் நாட்டுக்குள் வாழ்கிற ஒரு மிருகம்தான் மனிதன் என்பவன்..!! சட்டதிட்டங்களோ, சொந்தபந்தங்களோ இல்லாமல் போய்விட்டால்.. எந்த மனிதனிடமும் மனிதகுணத்தை காண இயலாது..!! ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும்.. அவனுக்குள்ளும் ஒரு மிருக குணம் ஒழிந்திருக்கும்..!! அக்குணம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.. எப்போது வெளிப்படும் என்றும் யாருக்கும் புரியாது..!! ஆதிராவுக்குள் ஒளிந்திருந்த ஒரு மிருககுணம் அப்போது வெளிப்பட்டது..!!

சிறுவயதில் இருந்தே சிபி மீது அவள் வைத்திருந்த தீராக்காதல்.. அந்தக்காதல் கல்யாணத்தில் கனியப்போகிறதென்ற அவளது சந்தோஷம்.. அந்த சந்தோஷத்திற்கு சமாதி கட்டுவது மாதிரியான தங்கையின் காதல்.. 'நான் நெனச்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்' என்ற தாமிராவின் பேச்சு.. போட்டியில் வென்று சிபியை அடைய தாமிரா காட்டிய வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து ஆதிராவின் ஆழ்மனதுக்குள் புதைந்திருந்த அந்த மிருககுணத்தை படக்கென வெளிப்பட செய்தன..!!

"ம்ம்ம்.. மேல இழுக்கா.. சீக்கிரம்..!!" தாமிரா அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்.

ஆதிராவின் முகம் திடீரென ஒரு திருட்டுச்சாயம் பூசிக்கொள்ள, தாமிராவை இறுகப் பற்றியிருந்த பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினாள்.. தங்கையின் கையோடு அழுந்தியிருந்த அவளது ஐந்து விரல்களும், கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கம் கொடுத்தன..!! ஓரிரு விநாடிகள்தான்.. ஆதிராவின் மொத்த மனமாற்றமுமே ஓரிரு விநாடிகள்தான்.. காதலின் வெற்றியை பெரிதென கருதிய ஆதிரா, அதற்கென தங்கையையும் பலிகொடுக்க நினைத்துவிட்ட அந்த ஓரிரு விநாடிகள்.. இந்தக்கதைக்கு மிக மிக முக்கியமான அந்த ஓரிரு வினாடிகள்..!!

ஆனால்.. அந்த ஓரிரு வினாடிகளே தாமிராவுக்கு போதுமானதாக இருந்தது.. அக்காவின் உள்நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு..!! அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆதிரா தன்மீது கோவத்தில் இருக்கிறாள் என்று தாமிராவுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், இப்படி தனது உயிரை தொலைத்தாவது அவளது காதலைப் பெற எண்ணுவாள் என்று சத்தியமாக தாமிரா நினைத்திருக்கவில்லை..!! அக்காவின் முகத்தையே ஏக்கமும், பரிதாபமுமாக பார்த்தாள்..!!

"அக்காஆஆஆஆ..!!" என்று இதயத்தை பிசைவது மாதிரியாக ஈனஸ்வரத்தில் ஓசை எழுப்பினாள்.

அவ்வளவுதான்..!! தங்கையின் பரிதாப முகத்தை பார்த்த ஆதிரா, இப்போது பட்டென சுதாரித்துக் கொண்டாள்.. இயல்பாகவே அவளுக்கு தங்கை மீதிருக்கிற அன்பு, திடீரென எழுந்த அந்த மிருக குணத்தை விரட்டியடித்திருந்தது..!! 'ச்சே. என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டோம்..' என்று தன்னைத்தானே கேவலமாக கடிந்துகொண்டவாறு.. 

"தாமிராஆஆஆ..!!!" 

என்று பதிலுக்கு பாசமாக அழைத்தபடியே, தாமிராவின் கையை மீண்டும் இறுகப் பற்றிக்கொள்ள முயன்றாள்.. ஆனால்.. அது தாமதமான முயற்சியாக அமைந்துபோனது..!! ஆதிராவின் கணநேர செயல்பாடு தந்த அதிர்ச்சியில், வாழவேண்டும் என்கிற எண்ணமே தாமிராவுக்குள் இற்றுப்போயிருந்தது.. அக்கா தனது கையை மீண்டும் பற்றிக்கொள்ளும் முன்பே, இவள் அக்காவின் கையை பிடித்திருந்த பிடியை விடுவித்தாள்.. அப்படியே அந்தரத்தில் வீழ்ந்தாள்..!! 
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 28-03-2019, 05:59 PM



Users browsing this thread: 1 Guest(s)