screw driver ஸ்டோரீஸ்
"எ..என்னாச்சு தாமிரா.. என்ன சொன்ன..?? எனக்கு ஒன்னும் கேக்கல..!!" சிபி பதற்றமாக கேட்டான்.

"ஒ..ஒன்னுல்லத்தான்..!! நீங்களும் கெளம்புங்க.. பார்த்து பத்திரமா போங்கன்னு சொன்னேன்..!! வேற ஒன்னும் இல்ல..!!" இறுக்கமாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் தாமிரா.

ஆதிராவுக்கு மைசூரில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அப்போதெல்லாம் தெரியாது.. அகழி திரும்பிய தங்கையின் கண்களில் இருந்த கலக்கம் மட்டுமே அவளது கவனத்தில் சற்று உறுத்தியது..!!

"என்னடி.. என்னாச்சு.. ஒரு மாதிரி இருக்குற..??"

"அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே.. ட்ராவல் பண்ணின டயர்டா இருக்கும்..!!"

"கண்ணுலாம் செவந்து போயிருக்கு..??"

"நைட்டு சரியா தூக்கம் இல்லக்கா.. வேற ஒன்னும் இல்ல..!!"

"ஓ..!! போன வேலைலாம் நல்லபடியா முடிஞ்சுச்சா..??"

"ம்ம்.. பெர்ஃபக்ட்..!!" சொல்லும்போதே தாமிராவின் குரலில் இருந்த ஒரு மென்சோகத்தை, ஆதிராவால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை.

"ஹ்ம்ம்..!! அத்தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாருடி.. தெரியும்ல..??" என்று பூரிப்பாகவே கேட்டாள்.

"ஹாஹா..!! அத்தான் ஃபோன் பண்றப்போ நான் பக்கத்துலதான்க்கா இருந்தேன்..!!" புன்னகையுடன் சொன்ன தாமிரா,

"என் அக்கா மாதிரி ஒரு அழகு தேவதையை.. எந்த முட்டாப்பயலாவது வேணான்னு சொல்வானா..?? ம்ம்..??" என்று ஆதிராவின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்.

"ச்ச்சீய் போடி..!!!" வெக்கப்பட்ட ஆதிரா,

"அதுசரி.. மைசூர் நல்லா சுத்தி பாத்தியா.. எங்கல்லாம் உன்னை கூட்டிட்டு போனாரு..??" என்று பேச்சை வேறுபக்கம் திருப்பினாள்.

"ரொம்பலாம் சுத்தலக்கா.. ஃபர்ஸ்ட் டே மட்டும் வெளில போனோம்.. செகண்ட் டே செம டயர்ட்.. எங்கயும் போகல..!!"

"ஓ..!! ம்ம்ம்ம்.. சரி உன் கேமரா குடு.. ஃபோட்டோஸ் பாக்கலாம்..!!"

தாமிரா தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அக்காவிடம் கொடுத்தாள்.. ஆதிராவும் ஆர்வமாக அந்த கேமராவில் சேகரிக்கப்பட்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தாள்..!!

"என்னடி கொஞ்ச ஃபோட்டோதான் எடுத்திருக்கீங்க போல..??"

"அ..அதான் சொன்னன்ல.. ரொம்பலாம் வெளில சுத்தல..!!"

கட்டைவிரலால் பட்டனை அழுத்தி, ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்த ஆதிரா.. அந்த மைசூர் அரண்மனை முன்பாக எடுத்திருந்த படத்தை பார்த்ததும், சற்றே முகம் மாறினாள்.. அடுத்த படத்தை மாற்றத் தோன்றாதவளாய், அந்தப் படத்தையே உன்னிப்பாக முறைத்துப் பார்த்தாள்..!! தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறவனும், தனது தங்கையும்.. நெருக்கமாக எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம்.. ஆதிராவின் நெஞ்சுக்குள் ஒரு பொறாமைத்தீயை கொளுத்திப் போட்டிருந்தது..!!

"என்னாச்சு..??" தாமிரா கேட்க,

"ஒ..ஒன்னுல்ல..!!" ஆதிரா தடுமாறினாள்.

ஆதிரா சொல்லாவிட்டால் என்ன.. அக்காவின் முகமாற்றத்தில் இருந்தே, அவளுடைய மனநிலையை கச்சிதமாக புரிந்துகொண்டாள் தாமிரா..!!

"என்ன.. அத்தான்கூட உரசிட்டு நிக்கிறது உனக்கு எரிச்சலா இருக்கோ..??" என்று கேலியான குரலிலேயே கேட்டாள்.

"இ..இல்ல.. அப்படிலாம் ஒன்னுல்ல..!!" ஆதிரா பலவீனமாகவே மறுத்தாள்.

"ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!"

"ஏய் ச்சீய்.. லூஸு..!!"

"குடு.. டெலிட் பண்ணிடலாம்..!!"

"ஏய் வேணாண்டி.. பரவால..!!"

பதறிய ஆதிராவை பொருட்படுத்தாது, அவளது கையிலிருந்த கேமராவை பிடுங்கி, அந்த ஃபோட்டோவை படக்கென டெலிட் செய்தாள் தாமிரா..!!
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 28-03-2019, 05:43 PM



Users browsing this thread: 2 Guest(s)