screw driver ஸ்டோரீஸ்
"தாமிரா.. தாமிரா நில்லு..!!"

பின்னாலிருந்து சிபி கத்துவதை அவள் பொருட்படுத்தவில்லை.. வேகமாய் நடந்து அந்த உணவகத்தை விட்டு வெளியேறினாள்.. சாலையில் வந்த ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்..!!

"எல்லிம்மா..??" ஆட்டோ ட்ரைவர் கேட்டதற்கு, ஓரிரு வினாடிகள் திகைத்தாள்.. பிறகு..

"ஃபிலோமினா சர்ச்..!!"

என்று மைசூரில் தனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னாள்..!! சொல்லிவிட்டு.. ஆட்டோ பின்சீட்டில் தலைசாய்த்து, கண்ணீர் சிந்தி கன்னத்தை நனைக்க ஆரம்பித்தாள்..!!

சர்ச் என்று சொன்னது நல்லதாய் போயிற்று.. தாமிராவால் உள்ளே சென்று மனம்விட்டு அழ முடிந்தது..!! பார்ப்பவர்களில் சிலர் பாவமன்னிப்பு கேட்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள்.. 'உறவினர் எவருக்காவது உடல்நலம் சரியில்லையாய் இருக்கும்' என்று சிலர் உச்சுக்கொட்டினர்..!! அரைமணிநேரம்.. அழுது தீர்த்திருந்தாள் தாமிரா.. அதற்குள் இருபது மிஸ்ட் கால் அவளது செல்ஃபோனுக்கு வந்திருந்தது.. சிபியிடம் இருந்து..!!

"வீட்டுக்கு வர்றேன் அத்தான்.. வந்து பேசிக்கலாம்..!!"

சிபியை செல்ஃபோனில் அழைத்து பேசிவிட்டு, சர்ச்சில் இருந்து கிளம்பினாள் தாமிரா..!!

மனதில் ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.. தனது காதலால் அக்காவின் சந்தோஷத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த முடிவு..!! 'தனக்கு சிபி மீது காதல் இல்லை.. தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை..' என்று உறுதியாக அவனிடம் தெரிவித்தாள்..!! தணிகைநம்பிக்கு கால் செய்து, ஆதிராவுடனான திருமணத்துக்கு அவனது சம்மதத்தை தெரிவிக்குமாறு வற்புறுத்தினாள்..!! அவளது உறுதியான பேச்சில் சிபி சற்றே தளர்ந்து போயிருந்தான்..!!

"ப்ளீஸ் தாமிரா.. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..!! நா..நான்.. நான் என் லைஃபை உன் கூட வாழணும்னு ஆசைப்படுறேன்.. ஆதிராவை விட நீதான் எனக்கு பொருத்தமானவளா இருப்பேன்னு நெனைக்கிறேன்..!! உன்னை நான் நல்லா பாத்துப்பேன் தாமிரா.. உனக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துப்பேன்..!!"

"ஹையோ.. அதுலலாம் எனக்கு சந்தேகம் இல்லத்தான்.. நீங்க நல்லவரு.. நல்லா பாத்துப்பிங்க.. எனக்கு தெரியும்..!!"

"அப்புறம் என்ன.. வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு நெனைக்கிறியா..?? நாம ரெண்டு பேரும் ஒண்ணாப்போய் நின்னு.. 'கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்'ன்னு சொன்னா.. கண்டிப்பா அவங்க ஒத்துப்பாங்க தாமிரா.. சந்தோஷப்படத்தான் செய்வாங்க..!!"

"தெரியும் அத்தான்..!! ஆனா.. அது நடக்காது..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..??"

"ஏன்னா என்ன சொல்றது.. எனக்கு உங்கள புடிக்கும், உங்கமேல அன்பு இருக்குது.. ஆனா.. உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் எப்போவுமே நெனச்சது இல்ல..!!"

"சரி.. இதுக்கு முன்னாடி நெனச்சது இல்லைன்னா பரவால.. இப்போ ஏன் நெனச்சு பாக்க கூடாது..??"

"நான் நெனச்சு பாக்குறது இருக்கட்டும்.. நீங்க ஏன் அக்காவை பத்தி கொஞ்சம்கூட நெனைச்சு பாக்க மாட்டேன்றிங்க..?? அவ என்ன அத்தான் பாவம் பண்ணினா..?? அவகிட்ட என்ன குறை கண்டிங்க..??"

"இங்க பாரு.. ஆதிரா மேல நான் எந்த குறையும் சொல்லல.. அவ நல்ல பொண்ணுதான்..!! ஆனா.. நான் விரும்புறது உன்னை.. என் மனசுல நீதான் இருக்குற..!! ஆதிராவை கட்டிக்கிட்டு நான் சந்தோஷமா இருக்க முடியாது தாமிரா..!!"

"இல்லத்தான்.. தப்பா சொல்றீங்க.. அக்காவை கட்டிக்கிட்டா நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பிங்க..!! அவ உங்களை எவ்வளவு லவ் பண்றா தெரியுமா.. உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்..!! சின்ன வயசுல இருந்தே உங்க மேல அவளுக்கு அவ்வளவு ஆசை..!! உங்ககிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்றதுக்கு அவளுக்கு ஒரு தயக்கம், வெட்கம்.. அவ்வளவுதான்..!! மத்தபடி.. எங்கிட்ட எல்லாம் சொல்லிருக்கா..!! அந்த அளவுக்கு உங்கமேல உசுரா இருக்குற அக்காவை கட்டிக்க, நெஜமாவே நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!"

".........................." சிபி இப்போது சற்றே வாயடைத்துப்போய் நின்றிருந்தான்.

"வீட்ல எல்லாம் சந்தோஷமா இருக்காங்க அத்தான்.. அக்கா, அப்பா, அம்மா, திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க.. அவங்க சந்தோஷத்தைலாம் கெடுக்கப் போறிங்களா..??"

"நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த சந்தோஷம் அவங்களுக்கு கெடைக்கும் தாமிரா..!! ஆதிராவுக்கு வேணா வேற.."

"இல்ல.. எனக்கோ அக்காவுக்கோ சத்தியமா அதுல சந்தோஷம் கெடைக்காது..!!"

"தாமிரா..!!"

"ப்ளீஸ்த்தான்..!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாத நான் வேணுமா.. இல்ல.. உங்களையே நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் உருகிக்கிட்டு இருக்குற அக்கா வேணுமா..?? யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க..!! என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!!"

படபடவென சொல்லிவிட்டு தாமிரா அமைதியானாள்.. சிபி சில வினாடிகள் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! தாமிரா தன்னை காதலிக்கவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயமாக இருந்தது.. அவளது பேச்சிலும், பார்வையிலும், செயல்பாட்டிலும் பலமுறை காதலை உணர்ந்திருக்கிறான்.. இப்போது அதெல்லாம் இல்லை என்று அவள் சொல்லும்போது, அவனால் நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது.. ஆனால் அதை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 28-03-2019, 05:42 PM



Users browsing this thread: 7 Guest(s)