screw driver ஸ்டோரீஸ்
"ஹேய் ஒரு நிமிஷம்.. மாமா கூப்பிடுறார்..!!" என்றவன் காலை பிக்கப் செய்து பேச ஆரம்பித்தான்..!!

அப்பா எதற்காக அழைக்கிறார் என்கிற விஷயம் புரிந்த தாமிரா, அமைதியாக அத்தானின் முகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!! செல்ஃபோனில் பேச ஆரம்பித்த சிபி நிறைய 'ம்ம்' கொட்டினான்.. பேசப்பேச அவனுடைய முகத்தில் அத்தனை நேரம் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல குறைவதை தாமிராவால் உணர முடிந்தது.. எதுவும் புரியாமல் அவனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

"ஒ..ஒரு நிமிஷம் மாமா.. நா..நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப கூப்பிடவா..??"

தயக்கமாக சொன்ன சிபி, அழைப்பை பட்டென துண்டித்தான்.. எதிரே அமர்ந்திருந்த தாமிராவை, ஏறிட்டு வெறுமையாக பார்த்தான்..!! அவன் முகத்தில் தெரிந்த திகைப்பும் தவிப்பும், தாமிராவை இன்னும் அதிகமாகவே குழம்பியது..!!

"எ..என்னத்தான்.. என்னாச்சு..?? அப்பா என்ன சொன்னாரு..??"

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல தாமிரா..!!" சிபியின் குரலில் ஒரு புது தடுமாற்றம்.

"அப்புறம் ஏன் ஒருமாதிரி ஆய்ட்டிங்க..??"

"இ..இல்லையே..!!"

"இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அப்பா என்ன சொன்னார்ன்னு சொல்லுங்க..!!"

"அ..அது.. அது வந்து.."

"ம்ம்..??"

"ஆ..ஆதிராவுக்கும்.. ஆதிராவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்றதா.."

"வாவ்..!!! நல்ல விஷயம்தான.. அதுக்கு ஏன் ஷாக்காகிட்டிங்க..??" தாமிரா போலி சந்தோஷத்துடன் குதூகலித்தாள்.

"அ..அதுக்கு இல்ல.. ஆனா.."

"என்ன ஆனா..??"

"ஒ..ஒன்னும் இல்ல..!!"

தளர்வாக சொல்லிவிட்டு சிபி அமைதியாகிப் போனான்.. தாமிரா ஓரிரு வினாடிகள் அவனது முகத்தையே கூர்மையாக பார்த்தாள்.. அந்த முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்து அவளால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை..!! ஒரு சில வினாடிகள்.. பிறகு..

"ஹ்ம்ம்.. சரி விடுங்க..!! அது இருக்கட்டும்.. எனக்கு என்ன திடீர்னு கிஃப்ட்லாம்..??"

என்று தாமிரா இயல்பாக கேட்டுக்கொண்டே, சிபியின் கையிலிருந்த அந்த பரிசுப்பெட்டியை பறித்தாள்.. உள்ளே என்ன இருக்கிறதென்று ஆர்வமாக பிரித்து பார்த்தாள்..!!

உள்ளே.. அந்த தங்க மோதிரம்.. இரண்டு இதயங்கள் ஒன்றோடொன்று பிண்ணியிருப்பது மாதிரியான வேலைப்பாட்டுடன்..!! காதல் பரிசாக கொடுப்பதற்கு கச்சிதமான மோதிரம் என்பது.. பார்த்ததுமே பளிச்சென்று புரிந்தது..!!

தாமிரா அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! நெஞ்சுக்குள் ஒருவித அதிர்ச்சி அலைகள் 'விர்ர்ர்.. விர்ர்ர்ர்..' என்று வீறிட்டு கிளம்ப.. முகம் முழுவதிலும் பரவிப்படர்ந்த ஒரு திகைப்போடு.. சிபியை மெல்ல மெல்ல ஏறிட்டு பார்த்தாள்..!! அவனோ சோர்ந்து போனவனாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.. இவள் அவனை பார்க்கவும், இப்போது உலர்ந்துபோன குரலில் சொன்னான்..!!

" ஐ.. ஐ லவ் யூ தாமிரா..!!"

காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் தாமிரா அப்படியே ஆடிப்போனாள்.. அவளது மனதுக்குள் அப்படியொரு உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..!! தனது மனதில் இருப்பவன் தன்னைத்தான் காதலிக்கிறான் என்பதற்காக சந்தோஷப்படுவதா.. அல்லது.. அக்காவுக்கு மட்டும் இது தெரியவந்தால், அவள் எப்படி துடித்துப்போவாள் என்றெண்ணி துக்கப்படுவதா..?? எந்தமாதிரியான உணர்வை வெளிப்படுத்துவது என்றுகூட புரியாமல் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள் தாமிரா..!!

அழுகை வரும்போல் இருந்தது அவளுக்கு.. கண்களில் ஒருதுளி கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.. அதை சிபி பார்ப்பதற்கு முன்பே அவசரமாக துடைத்துக்கொண்டவள், கையிலிருந்த பரிசுப்பெட்டியை டேபிளில் விசிறினாள்.. விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தாள்.. விடுவிடுவென அறைக்கதவை நோக்கி நடந்தாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 28-03-2019, 05:41 PM



Users browsing this thread: 1 Guest(s)