screw driver ஸ்டோரீஸ்
அக்காவைப் போலவே அவளுக்கும் அத்தான் மீது சிறு வயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு.. அவள் வளர வளர அந்த ஈர்ப்பும் அவளுடன் வளர்ந்து, கன்னிப்பெண் ஆகையில் காதலென அசுர வடிவம் எடுத்து நின்றிருந்தது..!! உள்ளத்தில் இருந்த காதலை உடன்பிறப்புடன் பகிர்ந்துகொள்வதில் ஆதிரா சற்றே முந்திக்கொள்ள.. உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிற ஒரு நிலைக்கு தாமிரா தள்ளப்பட்டிருந்தாள்.. அக்கா மீது அவள் வைத்திருந்த அளவிலா அன்புதான் அவளை அவ்வாறு செய்ய வைத்திருந்தது..!!

ஆசைப்படுகிற ஒரு மனதைத்தான் ஆண்டவன் ஆதிராவுக்கு கொடுத்திருந்தான்.. தாமிராவின் மனதையோ அன்பையும், தியாகத்தையும் குழைத்து வார்த்தெடுத்திருந்தான்..!! குழந்தையாய் இருந்த சமயத்தில் இருந்தே.. அக்கா ஆசைப்பட்டதை எல்லாம் அவளது அறிவுக்கு எட்டாத வகையிலேயே விட்டுக் கொடுப்பதுதான் தாமிராவின் இயல்பு.. காதல் விஷயத்திலும் அவ்வாறே நடந்துகொள்ள நினைத்தாள்..!!

தானும் சிபியை காதலிப்பதை அக்காவிடம் சொல்லி.. அவளது மனதில் சிறு சஞ்சலம் வருவதைக்கூட தாமிரா விரும்பவில்லை..!! அதுவுமல்லாமல்.. ஆதிராவுக்குத்தான் சிபியை மணமுடிக்க வேண்டும் என்று, அவளது பெற்றோர்களுடைய மனதில் இருந்த எண்ணமும் அவளுக்கு அரசல் புரசலாக தெரியவர.. ‘அக்கா நிஜமாகவே அதிர்ஷ்டக்காரி’ என்று நினைத்து, ஆதிராவுக்காக மிகவும் சந்தோஷப்பட்டாள்.. அதேநேரம், அவளது மனதிலும் ஒரு இனம்புரியாத விரக்தி..!!

அக்காவின் மனம்போலவே மணவாழ்வு அமையப்போவதில்.. தாமிராவுக்கும் எல்லையில்லா ஆனந்தம்தான்..!! ஆனால்.. சிபி மீது தான் வைத்திருந்த ஆசையும், காதலும்.. தனது மனதுக்குள்ளேயே புதைந்து மரணிக்கப் போகிறதே என்பதை எண்ணும்போது.. அவளது கண்களில் பொங்கிய கண்ணீரையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! எப்போதும்போலவே இப்போதும் தனிமையில் அழுது தீர்த்தாள்.. இந்தமுறை, தண்டவாளத்தில் தடதடக்கிற ரயிலுக்குள்..!!

தங்கையின் மனதினைப் பற்றியோ, அந்த மனதுக்குள் உறைந்திருந்த காதலைப் பற்றியோ, ஆதிரா அப்போதெல்லாம் அறிந்ததில்லை.. அதேபோல தங்கையின் மைசூர் பயணத்தின்போது நடந்தவையும் ஆரம்பத்தில் அவளுக்கு தெரியாது..!!

வாக்களித்தபடியே மைசூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருந்தான் சிபி.. அழுதசுவடு சிறிதளவும் வெளியே தெரியாதவண்ணம், அவனுடன் இயல்பாக சிரித்துப் பேசினாள் தாமிரா..!! இருவரும் முதலில் சிபியின் வீட்டுக்கு சென்றார்கள்.. குளித்து முடித்துவிட்டு அவனது அலுவலகத்துக்கு சென்றார்கள்.. அவனுடைய முதலாளியை சந்தித்துப்பேசி உதவி கோரினார்கள்..!! தாமிராவின் பேச்சு அவருக்கு பிடித்துப்போக, உதவி செய்வதாய் அவரும் உறுதியளித்தார்.. அந்த சந்தோஷத்திலேயே, சிபியும் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, அலுவலகத்திலிருந்து தாமிராவுடனே கிளம்பினான்..!! மீதியிருக்கிற நாளை ஊர் சுற்றி கழிப்பதாக திட்டம்..!!

அக்காவின் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து, கல்யாண விஷயத்தை பற்றி தாமிரா சிபியிடம் வாயைத் திறக்கவில்லை.. ஆனால், எந்த நேரமும் அப்பாவின் அழைப்பு அத்தானின் கைபேசிக்கு வரலாம் என்று எதிர்பார்த்துத்தான் காத்திருந்தாள்..!! சிபியோ இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல்.. இயல்பாக தாமிராவுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான்.. அவன் முகத்தில் மட்டும் எப்போதும் இருக்கிற அந்த கன்னத்துக்குழி புன்னகை..!!

அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், முதலில் மைசூர் அரண்மனை சென்று சுற்றிப்பார்த்து, சிறிது நேரம் செலவிட்டார்கள்.. அந்த புகைப்படமும் அப்போதுதான் எடுத்துக் கொண்டார்கள்.. இருவரும் சற்றே நெருக்கமாக, ஒருவரது புஜம் அடுத்தவரது புஜத்தை அழுத்துகிற மாதிரி..!!

மைசூர் அரண்மனைக்கு எதிரே இருக்கிற ஒரு அசைவ உணவகத்திலேயே, மதிய உணவை முடித்துக்கொள்ள நினைத்து உள்ளே புகுந்தனர்.. காலியாய் இருந்த டேபிளில் அமரச்சென்ற தாமிராவைத் தடுத்த சிபி,

"இங்க வேணாம் தாமிரா.. உள்ள போயிறலாம்..!!"

என்றவாறு உணவகத்துக்குள் இன்னும் உட்புறமாக அழைத்து சென்றான்..!! சற்று தள்ளியிருந்த ஏ/ஸி அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.. உள்ளே மிகவும் சொற்பமானவர்களே அமர்ந்திருக்க, இவர்கள் ஓரமாக கிடந்த மேஜையொன்றில் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள்..!!

தாமிராவின் அபிப்ராயத்தை தெரிந்துகொண்டு சில அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்தான் சிபி.. அவையெல்லாம் டேபிளுக்கு வந்து சேர்கிற நேர இடைவெளியில், இயல்பாகத்தான் அந்தப்பேச்சை ஆரம்பித்தான்..!!

"ஹேய் தாமிரா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..!!" என்று புன்னகையுடன் சொன்னான்.

"எ..என்ன..??"

"I have a gift for you..!!"

"Woww.. really..??" தாமிரா தனது முட்டைக்கண்களை முழுதாக திறந்தவாறு கேட்டாள்.

"yesss..!!!"

"என்ன கிஃப்ட்.. என்ன கிஃப்ட்..?? காட்டுங்க.. எனக்கு உடனே பாக்கணும்..!!"

"ஹாஹா.. இரு.. அவசரப்படாத..!!"

சிரிப்பை சிந்தியவாறே, அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த சிறிய பரிசுப்பெட்டியை வெளியே எடுத்தான் சிபி.. அதை தாமிராவிடம் நீட்ட முனையும்போதே, அவனுடைய செல்ஃபோன் சப்தம் எழுப்பியது.. பரிசுப்பெட்டியை கைக்குள் வைத்தவாறே, சட்டைப்பைக்குள் இருந்து செல்ஃபோனை வெளியே எடுத்து பார்த்தான்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 28-03-2019, 05:40 PM



Users browsing this thread: 7 Guest(s)