28-03-2019, 05:16 PM
முடிந்தது தினகரன் யுத்தம்
அ.தி.மு.க., எனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடி வந்த தினகரன், இனி அப்படி பேச முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால், அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்து விட்டால், அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி வழக்கு நடத்த முடியாது என்பது தான் காரணம். ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் கேட்டு, வழக்கு தொடர்ந்தார். கோர்ட், மறுத்து விட்டது. குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இரட்டை இலைக்கு பதில் குக்கரை சின்னமாக்கி விட முடிவெடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி ஆனது. அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.'நாங்கள், அ.ம.மு.க., என தனிக் குழுவாக இயங்குகிறோம். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு பொதுச் சின்னம் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.
'அ.ம.மு.க. பதிவு செய்யப்படாத அமைப்பு. பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான், பொதுச் சின்னம் ஒதுக்க முடியும். குக்கர் கேட்கின்றனர். அதை தர முடியாது. மேகாலயாவில், ஒரு கட்சி குக்கர் சின்னம் கேட்டுள்ளது. அது பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் அதற்குத் தான், குக்கர் தர முடியும்' என, தேர்தல் ஆணையம் கோர்ட்டில் தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ஆனாலும், சின்னம் என்பது தேர்தல் வெற்றிக்கு முக்கியமானது.
அதனால், அ.ம.மு.க.,வேட்பாளர்களுக்கு ஒரு பொது சின்னம் வழங்க பரிசீலனை செய்யுங்கள்' என, ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய அடுத்த கேள்வி சிக்கலானது. 'பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான், பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என விதிகள் தெளிவாக இருக்கும் போது, அ.ம.மு.க.,வை கட்சியாக பதிவு செய்யாதது ஏன்?' என்பது அந்த கேள்வி. 'கோர்ட் உத்தரவிட்டால், இன்று மாலைக்குள் ஆணையத்தில் பதிவு செய்து விடுகிறோம்' என்றார், தினகரன் வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி.உடனே குறுக்கிட்டார் ஆணைய வழக்கறிஞர். 'இன்று கட்சியை பதிவு செய்து, நாளையே சின்னம் கொடுக்க முடியாது. பதிவு செய்த, 30 நாட்களுக்கு பின்தான் சின்னம் குறித்து முடிவெடுக்க முடியும்' என்றார்.
அதற்குமேல் செல்ல விரும்பாத நீதிபதிகள், 'சீக்கிரம் பதிவு செய்து விடுங்கள்' எனக் கூற, 'செய்து விடுகிறோம்' என, தினகரன் வழக்கறிஞர் உறுதிமொழி கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ஆறு மாதத்துக்குள், அ.ம.மு.க.,வை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர். பொது சின்னம் கிடைக்கும் என்பதில், அ.மமு.க.,வுக்கு சந்தோஷம். ஆனால், 'நாங்கள் தான், அ.தி.மு.க.,' என, உரிமை கொண்டாட முடியாது என்பதில் வருத்தம். கட்சி நிர்வாகிகளிடம் பேசிய தினகரன், 'இதைத் தான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.
அ.தி.மு.க.,வை நாம் ஏன் வெட்டியாக துாக்கி சுமக்க வேண்டும்? இனிமேல் அந்த பிரச்னை இல்லாமல், நமக்கான கட்சியை முழுமையான கட்சியாக்கி சிறப்பாக நடத்தலாம்' என்றார். 'இரு கட்சிகளையும் இணைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.,வுக்கு அப்படி ஒரு பரிதாபம் உருவாகும். நம்மிடம் தான் வரவேண்டும். இணைந்தபின், பொதுக் குழுவை கூட்டி விவாதித்து, பெரும்பாலான உறுப்பினர்கள், அ.தி.மு.க., என்ற பெயரில் இயங்க முடிவெடுத்தால், அதற்கேற்ப செய்து கொள்ளலாம்' என்றும் சொல்லி விட்டார். அவர் நினைப்பது நடக்குமா என்பதை தேர்தல் முடிவு சொல்லும். இப்போதைக்கு, 'தினகரன் தொல்லை இனி இல்லை' என, அ.தி.மு.க.,வினர் கொண்டாடுகின்றனர்.