Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பாபி சிம்ஹா தந்த பொய்ப்புகார் ரத்து, கமிஷனர் நடவடிக்கை

[Image: NTLRG_20190328132021590473.jpg]
'அக்னி தேவி' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது அப்படத்தின் நாயகன் பாபி சிம்ஹா பொய்ப்புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இயக்குனர் மீது ஆள்மாறாட்டம் செய்து படத்தை எடுத்தார் என பாபி சிம்ஹா கிரிமினல் புகார் கொடுத்திருந்தார். அதனால், பட வெளியீட்டில் தயாரிப்பாளர் கடும் சிரமத்துக்கு உள்ளானார்.

அதைத்தொடர்ந்து அப்படத் தயாரிப்பாளருக்கு ஆதரவாக, தயாரிப்பாளர் சங்கத்தில் பல தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பல தயாரிப்பாளர்கள் இனி, தாங்கள் தயாரிக்கும் படங்களில் பாபி சிம்ஹாவை நடிக்க வைக்கப் போவதில்லை என தனிப்பட்ட விதத்தில் முடிவெடுத்தார்கள்.

இன்று(மார்ச் 28) காலை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சென்னை காவல் துறை ஆணையரைச் சந்தித்து 'அக்னி தேவி' பட விவகாரம் குறித்தும், பாபிசிம்ஹாவின் பொய்ப்புகார் குறித்தும் விளக்கமளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த புகாரை ரத்து செய்யும்படி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதுகுறித்து 'அக்னிதேவி' தயாரிப்பாளரும், இயக்குனரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நடந்த விவகாரம் குறித்து முழுமையாக தெரிவிக்க உள்ளார்களாம்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-03-2019, 05:11 PM



Users browsing this thread: 5 Guest(s)