அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 72 

அவன் போட்டிக்கான அழைப்பு வருவதற்கு முன்,

பதட்டமான மனநிலையில் தன்னையறியாமல் அல்லது உள்ளுணர்வின் தூண்டுதலால், ஒருமுறை தற்பொழுது மது பார்க்க எப்படி இருக்கிறாள் என்று பேஸ்புக்கை திறந்தவன், அவளது ப்ரோஃபைலை திறக்க, மூன்று மாதங்களக்கு முன் அவள் பதிவிட்டிருந்த புகைப்படம் தான் முதலில் இருந்தது. “HBD Puzzle!!. It’s been five long years but I am yet to solve this puzzle!!” (இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - புதிர்!!. ஐந்து வருடங்கள் கழித்தும் இன்னும் நான் புரிந்து கொள்ள முடியாத புதிர்!!”) என்று உதடு குவித்து வைத்து, கண்களை சுருக்கி, மூக்கிற்கும், மேல் உதடுக்கும் நடுவில் ஆட்காட்டி விரலை மடக்கி வைத்தவாறு, அருகில் சிறத்தாவாறு இவளைப் பார்க்கும் ரஞ்சித்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் முகபாவனையை ரசித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு சின்ன மலர்ச்சி தோன்றி, பின் மலர்ந்த முகம் சுருங்கியது. எனோ அவனுக்கு புகைப் படங்களுக்கான பகுதில் சென்று வெறும் புகைப்படங்களை பார்க்க எனோ தயங்கினான். அப்படியே தொடுதிரையை மேல் நோக்கி இழுத்தவன் கண்களில் பட்டதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான பகிர்தல்கள். அப்படி தொடுதிரையை உருட்டிக் கொண்டிருந்தவன் கண்களில் பட்டது வெறும் “HBD.” என்ற பதிவி. அதைப் பார்த்த நொடியே அவனுக்குத் தெரியும் அந்த வாழ்த்து தனக்கானது என்று, அது பதிவிடப்பட்ட தேதி அதை உறுதி செய்தது.

மானதெல்லாம் இதமான ஒரு உணர்வு பரவ, தொடுதிரையை அனைத்துவிட்டு, கண்களை முடி அமர்ந்திருந்த சேரில் தலைசாய்ந்தான். மணி தேடியது, மதுவின் மகிழ்ச்சியை அல்ல என்பதே அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. மதுவின் நினைவில் எங்கோ ஒரு ஓரத்தில் நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தில், அவன் உடலும் உள்ளமும் சில நொடி சிலிர்த்து அடங்கியது. அதுவரை இருந்தா பதட்டம் நீங்கி போட்டிக்கு தாயாராக இருந்தான். அப்பொழுதுதான் மதுவின் மருத்துவம் சம்பந்தமான பதிவுகளை ஜீரணித்த மூளை, அதில் தொண்ணூறு சதவிகிதம் கற்பமுறுதல், அதில் உள்ள சிக்கல் சம்பந்தமான பதிவு என்று அவனுக்கு உணர்த்த, அவனது முகமும், மனமும் இருக்கியது. அதிவேகத்தில் செயல்பட்ட மூளை, தன்னால் சிந்திக்க முடிந்த அத்தனை செய்திகளையும் அவனுக்கு சொல்ல, அதில் சில, அவன் உயிரைப் பிடித்து ஆட்டியது. “இல்லை!!, இல்லை!!, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை, தேவை இல்லாமல் கற்பனை செய்யாதே!!" என்று மனதிற்கு கடிவாளம் போட அது அடங்கவில்லை. கைகளில் வேர்க்க ஆரம்பித்து. நல்ல வேலையாக அந்த நேரம் பார்த்து அவன் ஆட்டத்திற்கான அழைப்பு வர, எண்ணங்களை உதறிக் கொண்டு நடக்க ஆரம்பத்தான், கால்கள் வேர்க்க தொடங்கியது. இதய துடிப்பு எகிறியது.

"இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சுக்கோ"

"இன்னும் பத்து செகண்ட் தான்!!” என்று விடியலுக்கு காத்திருந்தவனின் வானம், மொத்தமாக இருட்டியது. சூரியனை விழுங்கும் நிலவு போல.

"சிகரெட்” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் கண்களில் முதலில் மதுவின் கார் பட, என்ன?? ஏது?? என்று யோசிக்கும் முன்னமே, அவன் கண்களில் பட்டாள், மது. அழுகிறாள் என்பது, அடிக்கடி இடதுகையால் கண்களை துடைப்பதில் இருந்தே தெரிந்தது, வலது கையைப் பற்றிய படி, அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் ரஞ்சித். இல்லை, இல்லை, மதுவைக் காட்டிலும், அவனது நடையின் வேகம் சற்று அதிகமாக இருந்தது, மதுவை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுவந்தான். அந்த மினி கூப்பர் காரின் அருகில் வந்ததும் நின்றவள், ரஞ்சித்திடம் இருந்து கைகளை உருவிக் கொண்டவள், மறுப்பாக தலையசைத்தவாரே அவனிடம் ஏதோ சொல்ல, அவள் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்தது கண்ணீர். இடுப்பில் கையை வைத்து, கொஞ்சம் பின்னால் சாய்ந்து, பின் நேராக நின்று அவளிடம் கைகளை இங்கும் அங்கும் ஆட்டியவாறு, ஆக்ரோசாமாக பேசினான். மீண்டும் அவள் மறுப்பாக தலையசைத்தவாரே கெஞ்சும் பாவனையில் அவனிடம் சொல்ல, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காரின் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளினான், கதவை அடைத்தவன், வேகமாக சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான். சில நொடிகளில் கார் மணியை கடந்து சென்றது, காரில் அமர்ந்திருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான் மணி. இருவரது கண்களும் ஒரு நொடி சந்திக்க, அந்த நொடி மணியின் இதயத் துடிப்பு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் அவளின் கண்களோ அவனை பார்த்ததாற்கான எந்தவித, உணர்வுகளையும், அசைவையும் காட்டவில்லை. உருக்குலைந்து போனான்.

சிலை போல் அவன் நின்றிருக்க, அவன் தோளை யாரோ தொட, உணர்வு பெற்றவனாய் திரும்பிப் பார்த்தான்.

சுத்தி நிறைய பேர் பார்க்கிங் பன்னிருந்தாங்க!!....., அதுதான் சார் லேட்!!” என்று பவ்வியமாக சொன்ன அவனது டிரைவர், மணி அமருவதற்கு, காரின் கதைவைத் திறந்தார்.

திறந்திருந்த கதவை கண்டுகொள்ளாமல் சென்றவன், டிரைவர் இருக்கையில் சென்று அமர, கதவை அடைத்த டிரைவர், அவன் பக்கம் செல்ல எத்தனிக்கும் போதே, அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது. எதுவும் புரியாமல் டிரைவர் குழம்பிப் பொய் நிற்க, எந்த குழப்பமும் இல்லாமல், அதே சமயம் எந்தவித சிந்தனையும் இல்லாமல், வெறுமையாய் மனதும் மூளையும் இருக்க, கருப்பாய் விரிந்து கிடந்த தார் சாலையை மட்டுமே எண்ணத்தில் கொண்டு, இலக்கு இல்லாமல் பயணித்து அந்த கார்.

**************

இரண்டு மணி நேரம் கழித்து,

அந்தக் கார் சென்று சேரும் இலக்கிலலாமல் மிதமான வேகத்தில் ஏதோ ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்ததற்கான சாட்சியாக சாலையெல்லாம் நீர் கோர்த்து இருந்தது. மணி தான் அந்த காரை ஒட்டிக்கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் கழித்து, இன்று தான் கார் ஓட்டுகிறான். சீராக துடித்துக் கொண்டிருந்தது அவன் இதயம், அவன் கைகள் நடுங்க வில்லை, உடல் வியர்க்க வில்லை, உள்ளம் படபடக்கவில்லை, மாறாக அது கொதித்து கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் ஒரு கடை தென்பட்டதும் வண்டியை நிறுத்தினான். இறங்கிச் சென்று ஒரு சிகரெட் பாக்கெட் மற்றும் லைட்டர் வாங்கிவன், மீண்டும் எடுத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன், என்ன நினைத்தானோ, அதை வைத்துவிட்டான். வண்டியை ஓரம் கட்டியவன், GPSல் "தெங்குமரஹாடா" தேடியவன், காரை எடுத்தான். "நேத்ரா சொன்னதுதான் சரி, நான் அவளை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்திருக்க கூடாது" என்ற எண்ணம் தோன்ற, அதுவரை மிதமாக சென்று கொண்டிருந்த கார், வேகம் எடுத்தது.

ஒரு மணி நேரம் கழித்து,

ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று காட்டிய தூரத்தை நாற்பது, நாற்பத்ததைந்து நிமிடங்களில் வந்தடைந்திருந்ததான். அவன் அமர்ந்திருந்த காரின் இன்ஜின் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியில் "சட்!! சட்!!” என்று விழுந்து கொண்டிருந்த தூரல்களின் மீது தன் மொத்த கவனத்தையும் வைத்திருந்தான். எண்ணம் சிதருறும் போதெல்லாம் "அவ உன்ன கவனிச்சிருக்க மாட்டா!!” என்று சமாதானப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் விழும் மழைத்துளியின் மீது தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். கடந்த ஒரு வாரமாக தன் கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தான், தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு, நீலகிரி மலையின் கிழக்கு சரிவின் அடிவாரத்தில் வந்துவிட்டான். பத்தொன்பது வயதில், இதே போல ஒருமுறை தன்னை இழந்ததால், அவன் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்ட காயங்களை நினைத்தவன், எங்கே அப்படி மீண்டும் ஒருமுறை நடந்தால்? என்று யோசித்தவன், அதற்கு மேல் யோசிக்கவில்லை.

அவனுக்கு நன்றாக தெரியும், அவன் மீண்டும் ஒரு எமோஷனல் பிரேக்டவுனின் விழும்பில் இருக்கிறான் என்பது. அப்படி மனம் சஞ்சலப்படும் போதெல்லாம், இந்த பள்ளத்தாக்கும், அந்த காட்டாரும் தான் அவனை கட்டுப்படுத்தி, சமாநிலைக்கு கொண்டுவரும். ஒன்றரை வருடங்கள் கழித்து, மீண்டும் அந்த காட்டில் தன்னை தொலைத்துக் கொள்ளும்வரை, அந்த டென்னிஸ் அக்கடமியில் நடந்த நிகழ்வை தள்ளி வைத்திருக்க படாத பாடுபட்டான். வயது முதிர்ச்சியோ, அல்லது வாழ்க்கைப் பாடாமோ, அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருந்தான். அமர்ந்திருந்த சீட்டை சரித்தவன், காரின் கூரையை வெறித்தான். அடுத்த நொடி, இது போன்ற எத்தனையோ இரவுகளில், மதுவும் அவனும், கொஞ்சிக்கொண்டும், உரசிக்கொண்டும் இருந்த நினைவுகள் மடைதிறந்த வெள்ளம் போல அவன் மனதை நிரப்பிக் கொண்டது. அடுத்த மூன்று நொடிகளில், சிகரெட்டையும, லைட்டரையும் எடுத்துக் கொண்டு, காரில் இருந்து இறங்கி, எதிரே கிடந்த மண் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தான். எதுக்கு மது அங்க வந்த??” என்று அவன் மனது புலம்ப ஆரம்பிக்க அவனது கால்கள் வேகம் எடுத்தது. ஓட்டமும் நடையுமாக அவன் அந்தக் காட்டை நோக்கி நடக்க, அதுவரை அவன் மனதில் அடக்கி வைத்திருந்த எண்ணங்கள் கட்டவிழ்ந்தது.

"மதுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஏதாவது சிக்கல் இருக்குமோ?"
இல்ல, இல்ல, தேவை இல்லாம எதுவும் யோசிக்காதீங்க.

"அதுக்கு, லவ் பண்ணும்போது எடுத்துக்கிட்ட கர்ப்பத்தடை மாத்திரை தான் காரணமாய் இருக்குமோ?" அய்யோ என்று அலறியது அவன் மனம்.

அவனது நடை ஓட்டம் ஆக மாறியது.

"தேவையில்லாம எதையும் யோசிக்காத, அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது, கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம் தான் ஆறது" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மனதை சமாதானப்படுத்த முயன்றார்.

சிறிதாக தூறல் விழ ஆரம்பித்தது. பளீரென்ற மின்னல் வெட்டும் வானத்தை வெடி வைத்து வெடிக்க வைத்ததைப் போல அதைத் தொடர்ந்து வந்த இடியின் சத்தமும் அவனை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. மின்னல் வெளிச்சத்தில், தெரிந்த அந்த காடும், மலையும், அதன் பிரமாண்டமும், அவனுக்குள் அச்சத்தையும், அது தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆபத்தையும் உணர்த்தியது. இருந்தும் காட்டை நோக்கி நகரும் அவன் கால்கள் நிற்கவில்லை. தூரத்தில், அந்த காட்டுக்குள், ஆயிரம் பேர் "" வென்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற இரைச்சல் அவன் காதுகளை எட்ட, எதேனும் நடந்து, இந்த காற்றோடு காற்றாக, இந்த இருளோடு இருளாக கரைந்து போய்விடக் கூடாத என்று எங்கியது அவன் உள்ளம். அவன் காட்டுக்குள் நடக்க நடக்க அந்த இரைச்சல் அவனை நோக்கி வருவது போல் தோன்ற, பயம் அவன் உள்ளத்தை கவ்விக் கொண்டது.

அவனுள், பல இரவு இதேபோன்று, அலைந்து திரிந்தததைப் போல மிகவும் பழக்கபட்ட, அதே நேரம் பெரும் தவறு நிகழப் போகிறது என்ற உணர்வு. இதேபோன்றதொரு பயம் அப்பிய இரவில் தான், யாரேனும் ஒரு வார்த்தை ஆறுதலாய் சொல்லி விட மாட்டார்களா?? என்று அநாதையாய் அலைந்து திரிந்து, அது கிட்டாமல் போய் விரக்தியுற்று, பெரும் பாவத்தை, இந்த நொடிவரை அவனை இரையாய் கேட்கும் சாபத்தை அவன் பெற்றது அவன் நினைவுக்கு வந்தது. அவனுக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றியது முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் ""வென்ற ஓலம் அவன் காதுகளில் ஒலித்தது. அவனால் முடியாத அழுகையை, அவனுக்காக அழுது கொண்டிருந்தது அந்த காட்டாறு. இல்லாத ஒளியை, வெள்ளை வெளேரென்று பிரதிபலித்தவாறு, "" என்று ஓலமிட்டு, மணியின் மனதைப் போலவே கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு.

அன்று பகலில் பெய்த பெரு மழையின் காரணமாக, இயற்கை தனக்கு போட்டிருந்த வேலியை எல்லாம் உடைத்துக் கொண்டு, பெரும் பாய்ச்சலில் பாய்ந்து கொண்டு இருந்தது அந்தக் காட்டாறு. அந்த காட்டாற்று வெள்ளம் எல்லாம் தன் கண்ணீர் தான் என்று நினைத்தவன் கொஞ்சம் முன்னகர்ந்து, தண்ணீரின் விழும்பில் நின்று கொண்டான். அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

அழுதுகொண்டிருந்த மதுவை, இழுத்துக் கொண்டு வந்து காரில் வழுக்கட்டாயமாக ரஞ்சித் ஏற்றியது நினைவுக்கு வர

ஒரேவேலை, அவன் என் மதுவை அடிப்பானோ?, பொது இடம் என்பதால்தான் கட்டுப்பாடுடன் இருந்தானோ?” என்று யோசித்து அய்யோ என்று கதறியது அவன் உள்ளம்.

ரஞ்சித், மதுவை காயப்படுத்துவானோ? என்று நினைக்கும் பொழுதே அவன் மனதில் ஆத்திரம் தோன்ற,

அப்படியெல்லாம் இருக்காது. மது அடிமை போன்று அடங்கிப்போகும் பெண்ணல்ல!!” தனக்கு தானே சமாதானம் சொல்லி ஆத்திரத்தை ஓதுக்கி தள்ளியவன்

மது அழும் போது ஆறுதல் சொல்லாமல், எப்படி அவனால் கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்ள முடிந்தது? முரடனிடமா என் மது சிக்கியிருக்கிறாள்?” என்று மீண்டும் அலறியது அவன் உள்ளம்.

ஒரு புருஷன், முன்னால் காதலனுக்காக அழும் தன் மனைவியை திட்டாமல், கொஞ்சுவானு எதிர்பாக்கிறையா?” என்ற எதிர் கேள்வி, அவனை துடிக்க செய்தது.

எதுக்கு மது அங்க வந்தே?” ஓலமிட்டுக் கொண்டிருந்த நதியில் அவன் பார்வை நிலைத்திருக்க, மீண்டும் ஆரம்பித்த கேள்வியிலேயே வந்து நின்றது அவனது மனம்.

அவள் தேடிவந்த பொழுது மறுதலித்திருக்க கூடாதோ என்று எண்ணினான். இப்படி துன்பப்படுவதற்கு பதில் அவளை மணந்து கொண்டிருந்தால், அவளின் இன்பத்திலாவது தான் தேடும் ஆறுதல் கிட்டியிருக்குமோ என்று முதல் முறையாக தன்னையே கேள்வி கேட்டான்.

மதுவின் விழிகள் தன் மீது ஒரு நொடி விழுந்ததை நினைத்தவன்

"என் முகமே அவளுக்கு மறந்துவிட்டதா? என்று எழுந்த கேள்வி அவனை மொத்தமாக நொறுக்கி போட்டது.

அவள் அழும் போது ஆறுதல் சொல்லக் கூட வக்கற்று நின்றேனே?”

அவளின் வாழ்வில் முதன்மையான ஆணாக இருந்திருக்க வேண்டிய தன்னை ஒரு வழிபோக்கனாய் மாற்றிய வாழ்வை நினைக்கையில் “போதும்!! இந்த ஆற்றில் குதித்து விடு!!” என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, "நோ" என்று இன்னொரு குரல் அவனை தடுத்தது. இந்த முறை ஆற்றில் இறங்கினால் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவனை எச்சரித்து அவனது மூளை. அப்படியே சோர்ந்து அமர்ந்தான். உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.

பின் என்ன நினைத்தானோ எழுந்து நின்றான், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், அந்த காட்டில் இருந்து வெளியேறும் எண்ணத்துடன் இரண்டி எடுத்து வைத்த போது, சருகுகள் சலசலக்க, ஏதோ ஒரு மிருகத்தின் காலடியோசை, அவன் காதுகளில் கேட்டது. சட்டென ஓசை வந்த திசை பார்த்து அவன் கண்களில் எதுவும் புலப்படவில்லை, இருந்தும் அந்த ஓசையை அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக காலடி ஓசையின் எதிர் திசையில் வேகமாக அவன் கால்கள் நகர, ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அந்த ஆற்றுக்குள் இறங்கினான். "ஆற்றில் பெருவெள்ளம்" என்று அவன் மூளை உணர்த்திய அதே நொடியில், அவனை இழுத்துச் சென்றது அந்தக் காட்டாற்று வெள்ளம். அறிவையும், ஆற்றலையும் ஒன்றுமில்லாமல் செய்வதில் உணர்வு பெருகும்!! வெள்ளப் பெருக்கும்!! ஒன்று. காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவது என்பது மீன்களால் கூட முடியாது. வெள்ளம் அவனை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது.

என்ன நடக்கிறது என்று உணரும் முன்னமே, அவனது விலாஎழும்பு ஒரு பாறையில் மோத, தானாகத் திறந்த வாயினுள் புகுந்தது ஆற்று வெள்ளம். சில நேரத்திற்கெல்லாம் மூர்ச்சையாகி தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போனான். நினைவு வந்தபோது ஏதோ ஒரு பாறையில் அவனைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது, அந்த காட்டாறு. பெரிதாக இருந்த பாறையின் நடுவில் இருந்த ஓரடி பிளவின் இழுப்பால், அவன் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது. பாறையைப் பற்றிக்கொண்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உடல் வலுவும், உள்ளத்தில் உறுதியும் சுத்தமாக இல்லை அவனிடம். மொத்தமாக தன்னை அந்தக் காட்டாறுக்கு ஒப்புக்கொடுத்து இருந்தான். மூச்சுக் குழாயில் இருந்த தண்ணீர் அவன் மூச்சு விடுவதை அனுமதிக்கவில்லை. அந்த காட்டாற்று வெள்ளத்தின் பேரிரைச்சல் அவன் காதுகளை எட்ட வில்லை. வலதுபுற இடுப்பு எலும்பில் ஏதோ ஒன்று அழுத்த, அதன் வலி மட்டுமே அவன் உணர்ந்த ஒரே உணர்வு. அந்தப் பாறையின் பிளவில் சிக்கியிருந்த ஒரு மரக் கொம்பு, அவன் இடுப்பில் அழுத்திக் கொண்டிருந்தது.

மூச்சுவிடும் சிரமத்துக்கு இடையில், ஒரு பக்கமாக அவன் இடுப்பு எலும்பை உடைப்பது போல அந்த கட்டை அழுத்த, இடுப்பு எலும்பின் கடுப்பில், வலி தாங்காது, அவன் உதடு துடித்தது. அந்த நிலையிலும் அவனது மனமும், "இப்படி ஒரு சாவுதான் உனக்கு சரியானது" என்று அவனை எள்ளி நகையாடியது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு மரம் அவன் பின் மண்டையை தாக்க, அதன் விசையால் அடி வயிறு வரை அந்தப் பாறையின் மேல் இழுத்து போடப்பட்டு இருந்தால். அருகிலிருந்த மற்றொரு பாறையில் அந்த மரத்தின் தண்டு சிக்கிக் கொள்ள, அந்த மரம் அவனது முதுகில் விழுந்து அவனை பாறையோடு அழுத்திப் பிடித்துக்கொண்டது. அவன் இடுப்பில் குத்திக் கொண்டிருந்த அந்தக் அட்டையோ அவனது தொடையில் நாலு இஞ்சுக்கு ஒரு கோடு கிழித்து இருந்தது.

பளீரென்ற வெளிச்சம், கண்களைக் கூசச் செய்யாத, பார்வைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரு வெளிச்சம் அவனைத் தாக்க, அவன் உடல் வலியை எல்லாம், அந்த வெளிச்சம் எடுத்துக் கொண்டு, கண நொடியில் நீங்க, அண்டம் விழுங்கும் இருள் அவனை கவ்விக்கொண்டது. இருள் தின்னும் வெளிச்சமும், வெளிச்சம் புகா இருளும், அந்த மரத்தின் உபயம். ஆற்று வெள்ளத்தின் இழுப்பை அவன் உணரவில்லை, உடல் சில்லிட்டது, ஆனால் அதற்கு காரணம் ஆற்று நீர் இல்லை. ஆகாயத்தில் மிதப்பதை போல உணர்ந்தவனுக்கு, இதுதான் உடல் அற்ற உயிரின் உணரவோ என்று தோன்றியது.
[+] 9 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 19-02-2021, 12:57 AM



Users browsing this thread: 7 Guest(s)