18-02-2021, 06:54 AM
நிஷா -
வினய் - ரோஹித் incident அன்று, IG அட்வைஸ்படி வீட்டுக்கு வரும் வழியிலேயே- கதிர் சுடப்பட்டு காயத்துடன் ஹாஸ்பிடலில் இருக்கும் தகவல் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. நிஷாவின் கார் மதுரையை நோக்கிப் பறந்தது. நிஷாவின் மனம் வேதனையில் துடித்தது. ட்ராவல் டைம் முழுவதும்... அழுத கண்களோடு...பல மணி நேரங்களாக.. கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தாள்.
கதிர்... கதிர்....
மதுரையில்...ஹாஸ்பிடல் வராண்டாவில்... அழுதுகொண்டே ஓடினாள்.
அய்யோ கதிர்... கதிர்....
அவள் அவன் கைகளைப் பிடித்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதாள். சோகமாக... எதையோ இழந்ததுபோல் அதுவரை அங்கே கிடந்த கதிர், புத்துணர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தான்.
நிஷா அழாத நிஷா அழாதடா
அவனுக்கு, தனக்காக அழும் நிஷாவை பார்க்கப் பார்க்க அவள்மேல் அன்பு கூடிக்கொண்டே போனது. நிஷா டாக்டரிடம் ஓடினாள். பின் திரும்ப ஓடிவந்தாள். கதிருக்கு ஆறுதல் சொன்னாள். அத்தைக்காரிக்கு ஆறுதல் சொன்னாள்.
எல்லா நேரத்திலும் அவளது கை கதிரின் கண்ணத்திலும்... தலையிலும்... காயம்பட்ட இடத்திலும்... தடவிக்கொண்டே இருந்தது.
கதிர் அவளையே காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்கள் பனித்தன. இவளை நன்றாக வைத்துப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்.... ஒரு ஏக்கம்... ஒரு வைராக்கியம்.... கூடிக்கொண்டே போனது.
கதிருக்கு நடந்தது தெரிந்ததும் ஜெயிலில் இருந்த செல்வராஜ்க்கு ரத்தம் கொதித்தது. எவ்வளவு தெனாவட்டு இருந்தால் என் மகனை சுட்டிருப்பார்கள். சுட்டவனுக்கு என் கையாலதான் சாவு. அவன் போலீசாக இருந்தாலும் சரி எவனாக இருந்தாலும் சரி
மாமனாரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு நிஷா மோகனுக்குப் போன் போட்டாள்.
அப்பா என்னப்பா ஆச்சு... மாமா இன்னும் ரிலீஸ் ஆகல. என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க? என் கல்யாணத்துல மாமா இருக்கணும்.
ராஜ் மற்றும் கண்ணன்போல் அல்லாமல் கதிருக்கு மிக மிக மெதுவாகத்தான் குணமாகிக்கொண்டிருந்தது. நிஷா கூடவே இருந்து அவனை நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளது தவிப்பையும் அன்பையும் பார்த்து கிராமமே சொன்னது.
லக்ஷ்மி... இன்னும் எதுக்கு நேரத்தை தள்ளிப்போடுற? இந்தப் பொண்ணையும் கதிரையும் சீக்கிரமா சேர்த்து வச்சிடு.
சீக்கிரமே செல்வராஜ் ரிலீஸாகி வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்க... வீடே விழாக்கோலம் பூண்டது. ஒரு நல்ல நாளில்... நிஷாவுக்கும் கதிருக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.